பக்கம் எண் :

64
பஞ்சாட்சரங்களின் சேர்க்கையாலே தூலவடிவம் தோன்றுகிறது.

பக்குவர்களுக்குத் தகுந்தவிதம் எழுதிவைத்தார்கள். இவ்வெழுத்துக்களின் பெருமையையும் செய்லகளையும் அவர்கள் எழுதிய யோக நூல்களிலும் ஞான நூல்களிலும் மிக விரிவாகக் காணலாம்.

ஓம் நமசிவய என்ற எழுத்துக்களை நாம் கவனிப்போமானால் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை என்னும் சரீரத்தின் ஆறு ஆதாரங்களிலுள்ள எழுத்துக்களாகச் சொல்லப்படுகிறதை அறிவோம். இவ்வாறு எழுத்துக்களும் நிற்கும் வரிசையை நாம் கவனிப்போமானால், கீழ்முக நோக்கிய மூலாதாரத்திலிருந்து மேல்முக நோக்கிய மூலமாகிய ஆக்கினா ஸ்தானம் வரையும் மேல் நோக்கிச் செல்வதாக அறிவோம். மேல் மூலத்தில் யகார அட்சரத்தில் விளங்கும் ஓங்காரம் சிரசையும் கீழ்மூலத்தில் விளங்கும் ஓங்காரம் மர்ம ஸ்தானத்தையும் குறிக்கும். இவ்விரண்டு இடங்களிலும் அங்கத்தின் கூறுபாடுகளை நாம் கவனிப்போமானால், ஓம் என்ற அட்சரத்தின் வடிவமும் ஒரு யானைத் தலையின் வடிவமும் ஒரு தவளைக்குஞ்சாகிய அரைத் தவளையின் வடிவமும் ஒத்திருக்குமென்பதை நாம் அறியலாம். வலது கண்ணில் சுழித்து வட்டம் வீசி, இடது கண்ணில் சுழித்து வட்டத்தை இருகூறாகப் பிரிக்கக் கால் இழுத்து, கடையில் சுழித்த ரகசியத்தைத் தன்னையறிந்த மகான்கள் உணர்வார்கள். அகார உகாரமுமாய் இரண்டும் மகாரமான மகிமையை மற்றவர் அறியாமையினால் அவர்களுக்கு மந்திரமாக்கினார். மந்திரமாய் விளங்கும் இவ்வட்சரம் நேத்திரமான இரு சுழிகளாகவும் மூளையின் இருபாகமாகவும் மூளையினின்று புறப்பட்ட வாசியின் காலாகவும் சகல சித்துமாகவும் விளங்கி நின்றதுபோலவே, கீழ்மூலத்திலும் ஜீவர்கள் உற்பத்தி யாகும் ஜனனேந்திரிய அவயவங்களாக ஓங்காரமாய் விளங்கி நிற்கிறது. இது மாத்திரமா? இவ்விரு இடங்களிலும் ஓங்காரத்தை ஒத்திருந்த இந்தச் சரீரமானது ஆதி நாதத்தில் விருத்த வடிவமுள்ள தலையும் ஒடுங்கிச் சிறுத்தவாலுமுள்ள ஓங்காரத்தை ஒத்திருக்கும் ஒரு சிறு அரைத் தவளைக் குஞ்சுபோல இருந்ததென்று கற்றுணர்ந்தோர் சொல்வார்கள். இம்முதல் வடிவத்தையும் கீழ்மேல் மூலங்களில் விளங்கும் அதன் சொரூபத்தையும் குறிக்கும் ஓங்காரத்தை மூல மந்திர அட்சரமாக்கினார்கள். இவ்வட்சரத்தின் மகிமையை உள்முகமாக அறிவதற்குத் தன்னை அறிவதற்காக தூல சரீரத்தின் பஞ்சீகரண தத்துவங்களையும் சூட்சம சரீரத்தின் பஞ்சீகரண தத்துவங்களையும் மிக விரிவாகக் கூறியிருக்கிறார்கள்.

வேதாந்த சாஸ்திரத்தின் உட்பொருளாகிய ஓம் என்ற அட்சரம் தமிழுக்கே உரியது. தமிழ் அட்சரத்திலேயே தூல அட்சரத்தின் வடிவம் தோன்றுகிறது. மந்திரங்களுக்கு முதன்மையான ஓம் என்ற பிரணவ மந்திரம், அ + உ + ம் = ஓம் என்று முடிந்த விதத்தையும் ஓசையையும் தூல வடிவையும் உள்ளது உள்ளபடியே காட்டிக்கொண்டு நிற்கிறது. இச் சூட்சம அட்சரத்தை வேறு எந்தப் பாஷை எழுத்தும் உள்ளது உள்ளபடி உட்பொருளை விளக்கி நிற்கக் காணோம். ஓம் என்ற மந்திரத்தை மிகப் பிரதானமாகக்கொண்டு தங்கள் இகபர வாழ்விற்கு இதுவே ஆதியென்று அனுஷ்டித்துவரும் ஆரியர், தாங்கள் முத்திரையாய் வழங்கும் இவ்வெழுத்திற்கு தமிழ் எழுத்தைத் தவிர வேறு எந்த எழுத்தைப் போடுவார்? வேறு எழுத்துப் போட்டால் உட்பொருளைக் குறிக்குமா? குறியாத அந்நிய எழுத்தைப்போட்டு ஜெபிக்கலாமா?

10. பஞ்சாட்சரங்களின் சேர்க்கையாலே தூலவடிவம் தோன்றுகிறது.

ந ம சி வ ய என்ற ஐந்து அட்சரங்களினால் குறிக்கப்படும் ஐந்து ஸ்தானங்களிலும் முறையே பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயமென்ற ஐந்து பூதங்களும் பிர்மா, விஷ்ணு, ருத்ரன்,