பக்கம் எண் :

104
லெழரியா நாட்டில் முதல் முதல் மனிதனும் பாஷையும் உண்டாயின.

"The Evolution of Man." By Professor Haeckel P. 203

"All philologists of any competence in their science now agree that all human languages have been gradually evolved from very rudimentary beginnings."

"தங்கள் சாஸ்திரத்தில் நிபுணர் என்று ஒப்புக்கொள்ளப்படுகிற எல்லாப்பாஷா சாஸ்திரிகளும் மனிதரால் எல்லா பாஷைகளும சிறு துவக்கங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விருத்திக்கு வந்தவை என்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்."

மேற்கண்ட வரிகளைக் கவனிக்கும்பொழுது மிருகபாஷையிலிருந்து மனிதபாஷை பேச ஆரம்பித்தவர்களிருந்த லெமூரியாவே ஆதி பாஷையிருந்த இடமென்றும், அந்த லெமூரியா நாட்டில் ஏழு பெரும்பாகங்களிலும் பேசப்பட்டு வந்த பாஷையே ஆதிபாஷையென்றும் சொல்ல நியாயமிருக்கிறது.

31. லெமூரியா நாட்டிலே முதல் முதல் மனிதர்கள் உற்பத்தியானதுபோல முதல் முதல் பேசப்பட்ட பாஷையும் லெமூரியா நாட்டிலேயே உண்டாயிற்று என்பது.

"The Evolution of Man" By Professor Haeckel P. 204

"As we have been convinced from Comparative anatomy and ontogeny, and from paleontology, that all past and living vertebrates descend from a common ancestor, so the comparative study of dead and living Indo-Germanic tongves proves beyond question that they are all modifications of one primitive language. This view of origin is now accepted by all the chief philologists who have worked in this branch and are unprejudiced.

"மிருகங்களின் தேகக்கூறுகளைப் பரீட்சிப்பதாலும், அவைகளின் ஆதி உற்பத்தியை நோக்குவதாலும், முற்காலத்தில் உள்ள மிருகங்களின் தோற்றம் தேகக்கூறு முதலியவைகளைக் கவனிப்பதாலும், ஆதிகால தற்கால முதுகெலும்புள்ள இனங்களெல்லாம் ஒரு பொது முற்பிதாவினின்று உற்பத்தியாயிருக்கவேண்டுமென்று நாம் நிச்சயிப்பதுபோலவே, இண்டு ஜெர்மானிக் (Indo-Germanic) வகுப்பைச்சேர்ந்த இறந்துபோன பாஷைகளையும் இப்போது உயிரோடிருக்கும் பாஷைகளையும் நாம் பரீட்சித்துப் பார்க்கையில் அவைகளெல்லாம் ஒரு ஆதிபாஷையினின்று உண்டாயிருக்கவேண்டும் என்று தீர்மானிக்கலாம். இப்படி அவைகள் உற்பத்தியாயின என்ற கொள்கையானது இந்த விஷயத்தில் சிரத்தையெடுத்துத் தாரதம்மியம் பார்க்காமல் உழைத்த எல்லா பாஷா வித்வான்களாலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது."

மேற்கண்ட மிருகங்களின் தேகக்கூறுபாடுகளையும் முதுகெலும்பையும் கவனிக்கையில் எல்லா ஜீவராசிகளும் ஒரு முற்பிதாவினின்று உண்டானவையென்று நாம் நினைக்கிறதற்கு ஏதுவிருக்கிறது போலவே, பூர்வமாயுள்ள அனேக பாஷைகள் ஆதியில் ஒரு பாஷையிலிருந்தே உண்டானவையென்று விசாரிக்கும் விவேகிகள் ஒப்புக்கொள்ளுவார்கள் என்கிறார்.

ஆதி மனிதர்கள் பல இடங்களுக்குப் பிரிந்துபோனபின் அவர்கள் ஆதியில் பேசிய பாஷையே பல மாறுதல்களையடைந்து வெவ்வேறு பெயர்களை அடைந்ததென்று இதன்முதன் பார்த்திருக்கிறோம். அப்படி வழங்கிய பாஷைகளுள் ஆதிபாஷையின் வார்த்தைகள் காணப்படுவது பிராணிகளின் தத்துவசாஸ்திரத்தைக்காட்டும் திருஷ்டாந்தங்களைப் பார்க்கிலும் அதிக நிச்சயஞ்சொல்லக்கூடியதாயிருக்கிறதென்று பின்வரும் வசனங்களில் சொல்லுகிறார்.

"The Evolution of Man." By Professor Haeckel P. 205

"We find just the same thing in comparing the various dead and living languages that have developed from a common primitive tongue. If we examine our genealogical tree of the Indo-Germanic languages in this light, we see at once that all the older or parent tongues, of which