we regard the living varieties of the stem as divergent daughter grand-daughter languages, have been extinct for some time. The Aryo-Romanic and the Slavo-Germanic tongues have completely disappeared; so also the Aryan, the Greco-Roman, theSlavo-Lettic, and the ancient Germanic. Even their daughters and grand-daughters have been lost; all the living Indo-Germanic languages are only related in the sense that they are divergent descendants of common stem forms. Some forms have diverged more, and some less, from the original stem-form. This easily demonstrable fact illustrates very well the analogous case of the origin of the vertebrate species. Phylogenetic comparative philology here yields a strong support to phylogenetic comparative zoology. But the one can adduce more direct evidence than the other, as the paleontological material of philology the old monuments of the extinct tongue have been preserved much better than the paleontological material of zoology the fossilised bones and imprints of vertebrates." "ஒரே ஆதிபாஷையினின்றும் உற்பத்தியான பலவித இறந்துபோன பாஷைகளையும் உபயோகத்திலிருக்கும் பாஷைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்போமானால் நாம் அதேவித முடிவான அபிப்பிராயத்துக்குத்தான் வருவோம். இந்தக்கொள்கையை மனதில் வைத்துக்கொண்டு நம்முடைய இண்டுஜெர்மானிக் (Indo-Germanic) பாஷைகளின் வம்ச அட்டவணையை நாம் சோதிப்போமானால், இப்போது வழங்குகிற எந்தெந்த பாஷைகளை பூர்வ பாஷைகளின் குமாரத்தி அல்லது பேத்தி என்று நினைக்கிறோமோ அந்தந்த பூர்வ பாஷைகளெல்லாம் வெகுகாலமாய் உப்யோகத்திலில்லாமல் இறந்துபோனவைகளாய்த் தெரிகின்றன. ஆரியோரோமானிக் (Aryo-Romanic) பாஷைகளும், சிலவோஜெல்மானிக் (Slavo-Germanic) பாஷைகளும் முழுதும் காணாமல் மறைந்தன. அப்படியே ஆரியன் (Aryan) கிரிக்கோரோமன் (Greco-Roman) சிலவோலெட்டிக் (Slavo-Lettic) பூர்வ ஜெர்மானிக் (Germanic) முதலிய பாஷைகளெல்லாம் ஒழிந்துபோயின. இவைகளின் குமாரத்திகளும் பேத்திகளுங்கூட ஒழிந்துபோயின. தற்காலம் வழங்கும் இண்டுஜெர்மானிக் (Indo-Germanic) பாஷைகளெல்லாம் எதுவிஷயத்தில் ஒத்திருக்கின்றன வென்றால், ஒரே அடியில் பிறந்தும் பலவித்தியாசமானபின் சந்ததியாரை உடையவைகளாயிருப்பதில்தான் ஆதி பாஷையிலிருந்து சில அநேக மாறுதல்களடைந்தும் சில கொஞ்ச மாறுதல்களடைந்தும் காணப்படுகின்றன. எளிதில் ரூபகாரப்படுத்தக்கூடிய இந்த விஷயமானது இதற்கு ஒப்பான முதுகெலும்புடைய ஜீவ ராசிகளின் உற்பத்தியை விளக்கக்கூடியதாயிருக்கிறது. பல பாஷைகளின் உற்பத்தியைக் காட்டுகிற பாஷா சாஸ்திரமானது பல மிருகங்களின் உற்பத்தியைக்காட்டும் மிருக சாஸ்திரத்திற்கு பலத்த உதவியாயிருக்கிறது. ஆனால் ஒன்று மற்றொன்றைவிட திடமாய் ரூபகாரப்படுத்தும் விஷயத்தில் அதிக சிறந்ததாயிருக்கிறது. எப்படியென்றால் பாஷாசாஸ்திரத்திற்கு வேண்டிய ஆதாரங்கள் முதலியவை, அதாவது அழிந்துபோன பாஷைகளின் சின்னங்கள், மிருகசாஸ்திர ஆதாரங்களாகிய எலும்பு முதலியவைகளின் கல் அச்சுகளைவிட திறமாய் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன." மேற்காட்டிய சில வரிகளை நாம் கவனிக்கையில் இப்போது வழங்கிவருகிற எல்லாப் பாஷைகளும் ஒரே ஒரு பாஷையிலிருந்து உண்டானவையென்று தெளிவாகத் தெரிகிறது. அப்பாஷை லெமூரியா என்னும் பழைய உலகத்தில் பேசப்பட்டுவந்தது. அந்த ஆதி பாஷையின் வார்த்தைகள் பலவும் பல பாஷைகளோடு கலந்திருப்பதைக்கொண்டு பல ஜெந்துக்களின் உற்பத்தியையும் மிருகங்களிலிருந்து உண்டான மனுஷனின் உற்பத்தியையும் திட்டமாய்த் தெரிந்துகொள்வதற்கு பலத்த உதவியாயிருக்கும் என்றும் தோன்றுகிறது. பாஷைகளில் வழங்கிவரும் ஆதி பாஷையின் சில வார்த்தைகள் கற்களில் தோன்றும் மிருகச் சின்னங்களைப் பார்க்கிலும் பலத்த சாட்சியாக விளங்கிநிற்கின்றன. 32. லெமூரியா நாட்டில் பேசப்பட்டு வந்தபாஷை தமிழ்ப்பாஷையே என்பது. மனித ஜாதி உற்பத்தியான ஆதிபூமி லெமூரியா என்று நாம் பலவிதத்தாலும் திட்டமாய் அறிகிறோம். லெமூரியாக் கண்டத்திலிருந்து மனித ஜாதிகளும் மனித ஜாதிக்கு முந்திய
|