பக்கம் எண் :

109
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

காலத்தில் தலையாயிருந்தது, மற்றொருகாலத்தில் வாலாகவும், வாலாக இருந்தது தலையாகவும் மாறும் இருதலை மணியனைப்போலவும் இதுவுமாகியது உலக இயற்கைதானே. மேற்கீழாகவும் கீழ்மேலாகவும் ஆகுங்காலத்தில் அதற்கேற்ற நடந்துகொள்வது மனுஷ இயற்கை. ராஜர்கள் முறியடிக்கப்பட்டு தம் குடிகளே தமக்குச் சத்துருக்களாகுங்காலத்தில் காடுகளில் மறைந்து காய் கனிகளைத் தின்று விறகுவெட்டி ஜீவனம் பண்ணுவதையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஒரு ராகத்தில் வழங்கும் சுரங்கள் மூன்று ஸ்தாயிகளிலும் ஆரோகண அவரோகண கதியாய் சஞ்சாரம் பெற்று வாதி சம்வாதி விதிப்படி உண்டாகும் பல பிரஸ்தாரத்தினால் ஆனந்தம் உண்டாக்குவதுபோல அண்ட புவன சராசரங்களுக்கு கர்த்தனான தெய்வத்திற்கு இதுவும் ஒரு திருவிளையாட்டே.

இப்படி பாண்டியராஜ்யம் அழிகையில் சங்கீத நூல்கள் பலவும் அழிந்துபோயின. அதில் தப்பிப் பிழைத்தவர் பல தேசத்தில் சென்று குடியேறினார்கள். அவர்கள் வழங்கிவந்த தமிழ்ப்பாஷை காலஞ்செல்லச்செல்ல முற்றிலும் மாறி வேறு பாஷையாயிற்று. அப்படியானாலும் தமிழ்ப்பாஷையின் சாதாரண சொற்கள் பலவும் அப்பாஷைகளில் வழங்கிவருகின்றன. அதுபோலவே தென்னிந்திய சங்கீதத்திற்குரிய சில அம்சங்கள் மாறி தேசத்துக்குத் தேசம் கானம் வேறுபட்டாலும், தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவந்த முக்கிய சுரங்களே மாறாமல் வழங்கி வருகின்றன. சுருதிகள் இத்தனை யிருக்கலாமென்று வேறு சிலர் சொல்லிக்கொண்டிருந்தாலும் அவைகளை உபயோகிக்கும் வழியும் வாத்தியத்தின் உதவியுமில்லாமல் வாய்ச்சொல்லோடு மாத்திரம் நிற்கிறார்கள். ஆனால் தென்னிந்தியாவிலோ பன்னிரண்டு சுரங்களையும் அவைகளினிடையே வழங்கும் நுட்பமான சுருதிகளையுமுடைய கானம் செய்துகொண்டு வருகிறார்கள். தங்கள் அனுபோகத்திலிருக்கும் இம்மேன்மையான கானம் பூர்வ தமிழ் நூல்களில் சொல்லப்பட்டிருப்பவையென்று அறியார்கள். அவைகள் சேரும் முறை இன்னதென்றும் அதுவே சங்கீதத்திற்கு பிரதானமென்றும் நினைக்க மறந்துபோனார்கள். பரம்பரையாயுள்ள பாடமே தற்காலம் வரைக்கும் உண்மையைக் காப்பாற்றிக்கொண்டு நிற்கிறது. தென்னிந்திய சங்கீதத்தில் வழகிவரும் ரகசியங்களை வடபாஷையைில் எழுதியவர்கள் இவ்விஷயத்தில் தவறிப்போனார்களென்பதை இதன்பின் பார்ப்போம். சங்கீதத்துக்குரிய பெயர்களையும் இராகங்களின் பெயர்களையும் முற்றிலும் மாற்றி பூர்வத் தமிழ்ப்பெயர்கள் இல்லாமல் சமஸ்கிருதத்தில் புஸ்தகங்கள் எழுதிவைத்தார்கள். இவ்வுண்மையை இதன்பின் அறிவோம். அதன் முன் இந்திய சங்கீதத்தைப்பற்றியும் அதில் வடதேசத்து சங்கீதத்தைப்பற்றியும் இந்துஸ்தான் சங்கீதத்தைப்பற்றியும் தென்னிந்திய சங்கீதத்தைப்பற்றியும் மற்றவர் சொல்லு சில அபிப்பிராயங்களை நாம் கவனிப்பது நல்லதென்று நினைக்கிறேன்.