பக்கம் எண் :

108
லெழரியா நாடு, தமிழ் பாஷை, தமிழ் அரசாட்சி இம்மூன்றையும் சேத்துப் பார்த்தல்.

சயமாகீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் காலத்தில் கடலால் அழிந்துபோனதையும் சொல்லுகிறார்கள். இவர்கள் இன்றைக்கு 1,800 வருஷங்களுக்கு முன்னுள்ளவர்கள். இதிலும் முன்னதாக இற்றைக்கு சுமார் 8,700 வருஷங்களுக்கு முன் தென்மதுரையில் அரசாண்டுகொண்டிருந்த நிலந்தருதிருவிற்பாண்டியன் அவையத்தில் அதங்கோட்டாசான் முன்னிலையில் தொல்காப்பியம் அரங்கேற்றியதென்று தொல்காப்பிய பாயிரத்தில் சொல்லப்படுவதையும் நாம் கவனிப்போமானால் தனித்துத்தனித்து விசாரித்த பலருடைய அபிப்பிராயங்கள் லெமூரியா என்று அழைக்கப்படும் பூர்வ தமிழ்நாடாகிய தென்பாண்டி நாட்டிற்கே பொருந்துமென்று தெளிவாகத் தெரிகிறது. இதோடு தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் உத்தரமதுரையிலும் சுமார் 13,000 வருஷங்களாக இற்றைக்கு சுமார் 700 வருஷங்கள்வரையும் பாண்டிய ராஜர்களே அரசாட்சி செய்துகொண்டு வந்திருக்கிறார்களென்பதை பூர்வ தமிழ் நூல்களினாலும், அதன்பின் ஸ்தலபுராணங்களினாலும் தெளிவாக அறிகிறோம். சான்றோர் குலத்தவரான இவர்கள் நாடன், நாடான், பாண்டியன், தென்னவன், தமிழ்நாடன் என பல புலவர்களால் புகழப்பெற்று வந்தார்களென்றும் நாம் அறிகிறோம். இவ்வளவுகாலம் ஆண்டுகொண்டிருந்த ராஜ வம்சத்தவர்கள் இப்போது இல்லாமல் போனார்களாவென்று நினைக்க நேரிடும். மூன்றாவது சங்கத்தின் கடைசிய்ல பாண்டிய ராஜனுக்கும் சங்கப்புலவர்களுக்கும் சில மனவருத்தம் கேரிட சங்கங்கலைந்து தமிழைப்பற்றி விசாரிக்கும் ஊக்கம் குறைந்து தமிழ் அரசர்களை அற்பமாய் நினைக்கும் கஷ்டகாலம் ஆரம்பித்தது. அதற்குப்பின் சுமார் ஆயிர வருஷங்களாக அரசாட்சியிருந்தாலும் பல உள் கலகத்தினால் அரசாட்சி முடிந்தது. அதன் பின் வந்த மகம்மதியர்களும், நாயக்கர்களும், மற்றும் எவரும் சான்றோர் குலத்தவருக்கு சத்துருக்கள் ஆனார்கள். அதினால் அவர்கள் வரவர பூமி உரிமை இழந்து சொற்பத்தில் ஜீவனம் செய்யும்படியான நிலைக்கு வந்தார்கள். அவர்கள் நாளது வரையும் நிலைத்திருக்கும் தெய்வபக்தி, ராஜபக்தி, தைரியம், உண்மை, முயற்சி, பொருளீட்டல், அடக்கம் முதலிய உத்தமகுணங்களையும் அவர்களுக்குள் வழங்கிவரும் குலப்பெயர்களையும் பட்டப்பெயர்களையும் கவனிக்கும் அறிவாளிகள் இந்தியாவின் தென்பாகத்தில் மிகுந்து வசகிக்கும் தமிழ மக்களாகிய சான்றோர்குலத்தவரே பூர்வ பாண்டியராஜ வம்சத்தவர்களென்று காண்பார்கள்.

உண்மையுள்ள தேவபக்தனாயிருந்த தாவீது அரசனும் மிகுந்த ஞானி என்று எண்ணப்படும் அவன் குமாரன் சாலோமோன் அரசனும் பக்கத்து தேசத்து ராஜாக்கள் கப்பங்கட்ட பிரபலமாய் அரசாட்சி செய்துகொண்டிருந்த யூதேயா ராஜ்யம் அழிய, திரும்ப அவ்விராஜ்யத்துக்கு வரும் எண்ணமற்று ஏழைகளாய்ப்போன யூதர்களையும், ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான ராஜாக்களாயிருந்து இப்போது ராஜ்யம் இழந்து செல்வமும் இழந்து வறிஞராய் சஞ்சரிக்கும், அமேரிக்காவிலுள்ள சிகப்புநிற இந்தியர்களையும் (Red Indians), ஆப்பிரிக்காவில் ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்று நெடுநாள் அரசாட்சி செய்துக்கொண்டிருந்து பிறகு அவை யாவும் இழந்து மிகத்தாழ்ந்த ஜாதியார் என்று எண்ணப்படும் கேவல நிலையில் தற்காலம் இருக்கும் சூலு, காவ்பர் (Zulu, Kaffir) என்னும் தென் ஆப்பிரிக்க ஜாதியாரையும் அறிவாளிகள் அறிவார்கள். இதுபோலவே பூர்வ தமிழ் அரசர்களாய் விளங்கிய பாண்டிய ராஜாக்களும் அவர்கள் அரசாட்சியும் போனபின் தென்பக்கத்தில் நாளாதுவரையும் ஜனப்பெருக்குடன் நிலைத்து விருத்தியடைந்து வருகிறார்கள் என்பதையும் அறிவாளிகள் அறியாமற்போகார்கள்.

மேஷத்தில் உச்சனாயிருந்த சூரியன் படிப்படியாய்க் குறைந்து துலா ராசியில் நீசனாகிறது போலவும் பின் படிப்படியாய் வளர்ந்து மேஷத்தில் உச்சனாகிறது போலவும், ஒரு