Hindu Music and the Gayan Samaj Part II. P. 8. "But upon the testimony of works of great antiquity lying around us (some 4,000 to 8,000 years old), we can safely affirm that Hindu music was developed into a system in very ancient times, in times of which we have no genuine records, in times when all other nations of the world were struggling with the elements for existence, in times when Hindu Rishis were enjoying the fruits of civilization and occupying themselves with the contemplation of the mighty powers of the eternal Brahma." "நம்மைச்சுற்றி நாம் பார்க்கும் 8,000 வருஷங்களுக்கு முன்னுள்ள பழமையான நூல்களின் சாக்ஷியத்தை வைத்துக்கொண்டு இந்திய சங்கீதமானது ஆதிகாலத்திலேயே ஒரு முறையாக ஸ்தாபனமான தென்று நாம் தைரியமாய்ச் சொல்லலாம். இப்படிச் சங்கீதம் உண்டான காலமானது நமக்கு அதைப்பற்றித் திட்டமான சரித்திர சாஸனங்கள் இல்லாதகாலம். அந்தக்காலமானது உலகத்தின் மற்றெல்லா ஜாதியாரும் திட நிலைமைக்கு வேண்டிய ஏதுக்கள்கூட இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருந்த காலம். அந்தக் காலமானது இந்து மகரிஷிகள் நாகரீகமடைந்ததினால் உண்டாகும் பலன்களைப் பூரணமாய் அனுபவித்துக்கொண்டு பிரம்மத்தினுடைய அளவிலடங்கா வல்லமையை எப்போதுந் தியானித்துக்கொண்டு தங்கள் வாழ்நாளை செலவழித்தகாலம்." இதில் இற்றைக்கு 8,000 வருஷங்களுக்கு முன்னும் இந்தியாவில் சங்கீதம் இருந்ததை பழமையான நூல்கள் சொல்லுகின்றனவென்று சொல்லுகிறார். சங்கீதத்தில் மாத்திரமல்ல, நெசவிலும், நிலையுள்ள சாயங்கள் போடுவதிலும், விதம்விதமான வாத்தியக் கருவிகள் செய்வதிலும் தேர்ச்சியடைந்திருந்தார்களென்று பின்வரும் வசனங்களில் தெரிந்துகொள்ளலாம். Mill's History of Br. India, Vol 1, Page II. "Of the exquisite degree of perfection to which the Hindus have carried the productions of the loom, it would be idle to offer any description. Among the arts of the Hindus, that of printing and dyeing their cloths has been celebrated; and the beuaty and brilliancy as well as durability of the colours they produce are worthy of particular praise." Dr. Tennant says, "If we are to judge merely from the number of instruments and the frequency with which they apply them, the Hindus might be regarded as considerable proficients in music." "தரியுபயோகித்தல், துணி நெய்தல் ஆகிய வித்தைகளில் இந்துக்கள் அதி சம்பூரண தேர்ச்சி யடைந்திருந்தவர்களாகையால் அதைப்பற்றி இங்கு விஸ்தரிப்பது அசாத்தியமான காரியம். இந்துக்கள் தேர்ச்சியடைந்த வித்தைகளுள் துணிகளில் சித்திரங்களை அச்சிடுவதும் அவைகளுக்கு சாயம் தோய்ப்பதும் வெகு விசேஷித்தவை. அந்தச் சாயங்கள் அழகிலும், பகட்டிலும், நீடித்து நிலைத்திருப்பதிலும் விசேஷித்திருந்தனவாகச் சொல்லப்படுகின்றன. இந்துக்கள் உபயோகப்படுத்துகிற வாத்தியங்களின் இலக்கத்தைக் கவனிக்கிறபோதும் அவர்கள் அடிக்கடி அவைகளை, உபயோகிக்கிற விஷயத்தைக் கவனிக்கிறபோதும் அவர்கள் சங்கீதத்தில் வெகுதூரம் தேர்ச்சியடைந்திருந்தார்கள் என்று தெளிவாகிறது, என்று Dr. Tennant சொல்லுகிறார்." மேலும் ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்து வருவதற்கு முன்னேயே இந்தியாவிலிருந்த பூர்வ குடிகள் மிகுந்த நாகரீகமுடையவர்களா யிருந்தார்களென்று பின்வரும் வசனங்களில் காணலாம். India through the ages. Steele P. I. "Even if we go so far back as B.C. 2,000, the voices of men who have lived and died are still to be heard in the earlier hymns of the Rig-Veda."
|