பக்கம் எண் :

112
இந்திய சங்கீதத்தைப்பற்றிய பொதுவான அபிப்பிராயம்.

"These same hymns incidentally tell us that the Aryan invaders found a people in India civilised enough to have towns and disciplined troops, to have weapons and banners, women whose ornaments were of gold, poisoned arrows whose heads were of some metal that was probably iron"

"இந்துதேச சரித்திரத்தில் ரிக்கு வேதத்தில் கடவுளுக்குச் சொல்லப்படும் பிரார்த்தனைகளைக் கவனித்துப் பார்ப்போமானால் அந்தக்காலத்தில் அதாவது ஏறக்குறைய 4,000 வருஷங்களுக்குமுன்னிருந்த மனிதரின் பழக்க வழக்க முதலியவைகள் நமக்கு நன்றாய்த் தெரியவருகிறது. அதே பிரார்த்தனைகளிலிருந்து நாம் மற்றும் காரியங்களையும் அறிகிறோம். அதென்னவெனில், ஆரியர்கள் இநதியாவில் படையெடுத்து வந்தபோது அங்கிருந்த ஜனங்கள் நாகரீகத்துக்குரிய அநேக அம்சங்களை உடையவர்களாயிருந்ததைக் கண்டார்கள். அவை யாவையெனில், இந்துக்கள் நகரங்களில் வசித்தார்கள். நன்றாய்ப் பயிற்றுவிக்கப்பட்ட சேனைகள் அவர்களுக்கு இருந்தன. அவர்களுடைய ஸ்திரீகள் தங்கநகைகளையணிந்திருந்தார்கள். நுனியில் விஷமேற்றப்பட்ட இரும்புப் பூண்களையுடைய அம்புகளை உபயோகித்திருந்தார்கள் என்பவைகளே."

மேற்கண்ட வரிகளை நாம் கவனிக்கையில் ஆரியர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்தபோதே தென்னிந்தியாவிலுள்ள ஜனங்கள் ராஜ்யபாரத்திற்குரிய கோட்டை கொத்தளங்களுடைய நகரங்களில் யுத்த பயிற்சிபெற்ற சேனைகளுடனும் ஆடை ஆபரணங்களின் அழகோடும் விஷம் ஏற்றப்பெற்ற ஆயுதங்களுடனும் வசித்து வந்தார்களென்று சொல்லுகிறார். தங்கள் குடியிருக்கும் தேசத்தின் சீதோஷ்ண ஸ்திதியும் புல்பூண்டு தாவரம் தானியங்களின் குறைவையும் அறிந்து தாங்களும் தங்கள் ஆடு மாடுகளும் பிழைப்பதற்கேற்ற வசதியான இடம் தேடிவந்த ஆரியர், யாகஞ்செய்தும் சோமரச பானஞ்செய்தும் வந்தார்களென்று வேதத்தினாலேயே தெளிவாக அறிகிறோம். இவர்கள் வருவதற்குமுன் தென்னிந்தியாவில் உயிர்களைக் கொள்ளா விரதத்தையும் மாமிசம் புசிக்காத சைவநெறியையும் மேன்மையாகக் கொண்டொழுகியவர் மிகுதியாயிருந்தார்களென்று பூர்வ தமிழ் நூல்கள் மூலமாய் அறிகிறோம்.

நாளடைவில் அவர்கள் தங்கள் வேதத்திலுள்ள பிரார்த்தனைகள் சொல்லும் சங்கீத முறையை விட்டு தென்னிந்தியாவிற்குரிய கான முறையை மிகுதியாய்ப் பயின்றுவருகிறார்கள் என்பதையும் நாம் இங்கே மறந்துபோகக்கூடாது.

சங்கீதமானது இந்தியர்களுடைய நாகரீகத்தை விருத்தி பண்ணின சாஸ்திரங்களில் ஒன்றாயிருந்ததென்றும் இற்றைக்கு சுமார் 2,300 வருஷங்களுக்குமுன் பாணினியின் காலத்திலேயே ஒழுங்குடன் அமைக்கப்பட்டிருந்ததென்றும் இந்தியாவிலிருந்தே எகிப்து (Egypt) பாரசீகம் (Persia) அரேபியா (Arabia) கிரேக் (Greece) முதலிய தேசங்களுக்குக் கொண்டுபோகப்பட்டதென்றும் பின்வரும் சில வாக்கியங்களால் காணலாம்.

W.W. Hunter's The Indian Empire P. 110-112.

INDIAN MUSIC

"The Indian art of Music (Gandharva veda) was destined to exercise a wider influence. A regular system of notation had been worked out before the age of Panini (350 B.C), and the seven notes were designated by their initial letters. This notation passed from the Brahmans through the Persians to Arabia and was thence introduced into European music by Guido L.Arezzo at the beginning of the 11the century. Some indeed, suppose that our modern word gamut comes not from the Greek letter gamma, but from the Indian gama in Prakrit; (in Sanskrit, Grama) literally a musical scale"

"காந்தர்வ வேதம் என்றழைக்கப்பட்ட இந்திய சங்கீதமானது இந்தியருடைய நாகரீகத்தை விருத்தி பண்ணின அநேக கருவிகளில் சிரேஷ்டமானது. கி. மு. 350 வருஷத்துக்கு முற்பட்ட பாணினி (Panini)