முனிவர் காலத்திலேயே, இந்திய சங்கீதமானது ஒருவித ஒழுங்குடன் அமைக்கப்பட்டு, இராகங்களை சுரப்படுத்தும் முறை, ஸப்த சுரங்களையும் அவைகளைத்தொடங்கும் எழுத்துக்களால் அழைத்தல் முதலிய ஒழுங்குகளுடனும் இருந்ததாகத் தெரிகிறது. இராகங்களை சுரங்களாக எழுதும் இம்முறையானது பிராமணர்களிடமிருந்து பாரசீகர் மூலமாய் அரேபியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு, அப்புறம் அவர்களிடமிருந்து 11-வது நூற்றாண்டின் துவக்கத்தில், Guido L. Arezzo என்பவரால் ஐரோப்பிய சங்கீதத்தில் அமைக்கப்பட்டது. தற்காலம் சங்கீதத்தில் வழங்கிவரும் 'Gamut' என்னும் பதமானது கிரேக்கு எழுத்தாகிய 'Gamma' என்பதிலிருந்து உண்டானது என்று சிலர் அபிப்பிராயப்படுவதுபோல் நினையாமல் இந்திய பதமாகிய 'கிராமம்' (அதாவது ஆரோகண அவரோகணம்) என்னும் பதத்திலிருந்து உண்டானதாக சிலர் நினைக்கிறார்கள்." கிறிஸ்துவுக்குமுன் 2,500-க்கும் 1,400-க்கும் நடுவிலுள்ள பிராமணிய காலம் (கிரந்தங்கள் உண்டான காலம்) என்று அழைக்கப்படும் 4,400 ஆம் வருஷத்திலேயே இந்திய சங்கீதத்துக்குரிய ஆரோகண அவரோகணங்களிருந்தனவென்றும் இன்னும் நுட்பமாய் விசாரித்தால் இந்திய சங்கீதத்தின் காலம் மிகப்பூர்வமானதென்று அறியலாமென்றும் சங்கீத சாஸ்திரத்தின் அநேக பாகங்கள் இந்தியாவிலேயே ஜெனித்தனவென்றும் பின்வரும் வாக்கியங்களால் அறியலாம். Hindu Musical scale and 22 Stutis by K.B. Deval Page I. "It might be started here at the outset that the Hindu musical scale dates as far back as the Brahman Period which is calculated, according to modern researches, to extend from 2,500 B.C to 1,400 B.C. It is possible that further researches might modify this date of might, perhaps carry it still farther back. But we may be certain that our scale dates farther back than the Greek wcale which is acknowledged to be the parent of modern European scales. Capt. Day in his 'Music of Southern India' observes:- The Historian Strabo shows that the Greek influence extended to India, and also that Greek musicians of a certain school attributed the grater part of the science of music to India." "ஆரம்பத்தில் இப்போது நாம் அவசியமாய்ச் சொல்லவேண்டிய தென்னவென்றால் இந்திய சங்கீதத்தில் வழங்கும் ஆரோகணங்கள் 'பிராமணிய காலம்' என்று சொல்லப்பட்ட அதாவது கி.மு. 2,500-க்கும் 1,400-க்கும் இடையிலுள்ள காலத்திலேயே உபயோகத்திலிருந்தன என்று தற்கால சாஸ்திர ஆராய்ச்சியின் மூலமாய்த் தெரியவருகிறது. இன்னும் இதிலும் அநேக விசேஷமான ஆராய்ச்சிகள் நடக்குமானால் இந்திய சங்கீதகாலம் இன்னும் முன்னுக்கு உள்ளதாய்த் தெரியவரலாம். ஆனால் நாம் ஸ்திரமாய்ச் சொல்லக்கூடியது, தற்காலம் ஐரோப்பாவில் பழங்கும் ஆரோகணங்களுக்குத் தாயாக எண்ணப்படும் கிரேக்க ஆரோகணங்களுக்கு முன்னான காலத்திலும் இந்திய ஆரோகணங்கள் இருந்தன என்பதாம். 'தென்னிந்திய சங்கீதம்' என்றநூலில் Captain Day என்பவர் 'சரித்திர சாஸ்திரியாகிய Strabo சொல்லுகிறபடி கிரேக்கருடைய சங்கீதத்தின் பிரகாசம் இந்தியா வரையில் எட்டியது என்றும் கிரேக் வித்வான்களில் ஒரு சாரார் சங்கீத சாஸ்திரத்தின் அதிகமான பாகம் இந்தியாவிலிருந்து ஜெனித்தது என்று ஒப்புக்கொண்டார்கள் என்றும் சரித்திரக்காரராகிய Strabo சொல்லுகிறார்' என்று கூறுகிறார்." இந்திய சங்கீதம் இற்றைக்குச் சற்றேறக்குறைய 3,000-4,000 வருஷங்களுக்குமுன் பிராமணிய காலத்திலுண்டானதாகவும் கிறிஸ்துவுக்கு 350 வருஷங்களுக்கு முன்னுள்ள பாணினி என்பவர் காலத்திலிருந்ததாகவும் பிராமணர்களிடமிருந்து மற்றதேசத்தாருக்குப் பரவினதாகவும் மேற்கண்ட வரிகளில் காண்கிறோம். அதில் இன்னும் விசேஷமான ஆராய்ச்சி செய்தால் இதற்கு வெகுகாலத்திற்கு முன்னாலேயே இந்தியாவில் சங்கீதமிருந்ததென்று சொல்லலாம் என்கிறார். தொல்காப்பியத்தில் நால்வகை நிலங்களின் கருப்பொருள்கள் சொல்லவந்த இடத்தில் நால்வகையான யாழ்களையும்
|