பக்கம் எண் :

114
இந்திய சங்கீதத்தைப்பற்றிய பொதுவான அபிப்ராயம்

பற்றி விபரஞ்சொல்லுகிறார். அதில் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்ற நாலு யாழ்களின் சுருதிமுறைகளைக் கவனிப்போமானால் ஷட்ஜமம், மத்திமம், பஞ்சமம், நிஷாதம் ஆகிய நாலு சுரங்களை சுருதியாகவைத்துக்கொண்டு கானம்பண்ணப்படுவதென்று இதன் பின் விபரமாய் அறிவோம். தொல்காப்பியர் தனக்கு முன் வழங்கிவந்த சங்கீத நுட்பத்தையே அங்கே சொன்னார். இதைப்பற்றி அகஸ்தியரும் நாரதரும் விரிவாக நூல் எழுதியிருந்ததாகவும் தெரிகிறது, இது தென்மதுரையில் சங்கமிருந்தகாலமாம். சங்கம் உண்டாவதற்கு முன்பே சங்கீதமிருந்திருக்க வேண்டுமென்று நாம் திட்டமாகச் சொல்லலாம். இத்தென்மதுரை அழிகையில் இங்கிருந்தோர் முன்னமே தாம் கற்றுக்கொண்ட சிற் சில சுரங்களை தங்கள் தேசத்தில் விருத்தி செய்திருக்கலாமென்றும் பழையபடி தென்னிந்தியாவிலுள்ள கானத்தைக்கொண்டே தங்கள் கானத்தை விருத்திசெய்து கொண்டார்களென்றும் நாம் அறியவேண்டும். இதை அறிவுள்ள எவரும் ஒப்புக்கொள்வார்கள். தென்னிந்தியாவின் சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்களை பைதாகரஸ் (Pythagoras) என்னும் கிரேக்க தத்துவசாஸ்திரி (2/3),(3/4)  என்ற அளவின் மூலமாய்க் கொண்டு போனார் என்பதை இதன்பின் அறிவோம். சுரங்களிலுள்ள வெகு நுட்பமான கூடுதல் குறைதலை அறியாமல் பலவிதமான சங்தேகங்கள் ஜனித்திருக்கிறதென்று பின் பார்ப்போம்.

இந்தியாவில் யாகஞ் செய்யும்பொழுது இரண்டு பிராமணர்கள் வீணை வாசிக்க, மற்றொரு பிராமணர் வேதங்களைப் பாடிக்கொண்டிருக்கவேண்டும். அப்படிப்பட்ட கானமில்லாத ஒரு யாகம் பிரயோசனமில்லை யென்று பின்வரும் வாக்கியங்களில் காணலாம்.

Hindu Music and the Gayan Samaj, Part I. P. 21.

"The system of instrumental music was in practice in the earliest times of the history of our land and it was held that sacrifical rites (yagams) had no efficacy unless two Brahmans played upon the Vina in concert with a third Brahman Singing."

"நம் நாட்டின் ஆதி சரித்திரகாலந் தொடங்கி சங்கீத வாத்தியங்களை உபயோகப்படுத்தும் முறை ஏற்பட்டிருந்திருக்கிறது. யாகம் செய்யும்போது இரண்டு பிராமணர்கள் வீணையில் வாசிக்க மூன்றாவது பிராமணர் ஒருவர் சேர்ந்து பாடினாலொழிய அந்த யாகத்தில் ஒரு பிரயோசனமுமில்லை என்று கொள்ளப்பட்டது."

இந்திய சங்கீதம் மனதைச் சாந்தப்படுத்தித் தெய்வத்தினிடத்தில் மனதை நிலைநிற்கச் செய்கிறதென்று பின்வரும் வாக்கியங்களில் பார்க்கலாம்."

Hindu Music and the Gayan Samaj, Part II, P. 30

"Music is one of the most innocent and elevating indoor amusements. It affords pleasure to all and delights specially those who cultivate and develop a taste for it. It softens and refines the mind and elevates its devotion to the Creator of the Universe. Relying upon the testimony only of works of great antiquity lying around us some 4,000 to 8,000 years old,. we can safely affirm that Hindu music is of very ancient origin, and was developed into a system and science when Hindu Rishis resided and meditated in the primoeval forests, and inaugurated civilization."

"சங்கீதமானது காலத்தை நல்வழியில் செலவழிக்கக் கூடியதும், மனசைப் பரவசப்படுத்தக்கூடியதுமான ஓர் நல்ல பழக்கம். அது யாவருக்கும் சந்தோஷத்தைத் தரத்தக்கதும், முக்கியமாய் அதில் விருப்பமுடையவராய் அதைக்கற்றோருக்கு அதிக ஆனந்தத்தைத் தரத்தக்கதுமாயிருக்கிறது. அது மனதைச் சாந்தப்படுத்திச் சுத்தப்படுத்தி உலகைப்படைத்த சிருஷ்டிகரிடத்தில் அம்மனதை வசப்படுத்துகிறது. 4,000 வருஷமுதல் 8,000 வருஷங்களுக்கு முன்னே அது ஏற்பட்டது என்று நம்மைச்சுற்றியிருக்கும் பழமையான சாஸ்திரநூல்கள் மூலமாய் அறிந்த நாம் இந்திய சங்கீதமானது வெகு பழைமையானதென்றும், இந்திய மகா ரிஷிகள் காடுகளில் வசித்து தபசு செய்துவந்தகாலத்திலேயே ஒரு சாஸ்திர முறையாய் ஏற்படுத்தப்பட்டிருந்ததென்றும், சகல நாகரீகத்துக்கும் அது ஆதி உற்பத்தியாயிருந்ததென்றும் தடையில்லாமல் சொல்லலாம்."