மேற்கண்ட வரிகளை நாம் கவனிக்கையில் சங்கீதமானது இந்தியாவில் மிகப் பழமையான சாஸ்திரமென்றும் தபோதனர்களால் அப்பியாசிக்கப்பட்டும் சாஸ்திரமாய் எழுதப்பட்டும் வந்ததென்றும் சகல நாகரீகத்திற்கும் அது ஆதி உற்பத்தியாயிருந்ததென்றும் சொல்லுகிறார். உலகின் உற்பத்திக்கு நாதமே ஆதிகாரணமா யிருந்ததுபோல ஒரு மனுஷனின் நாகரீகத்திற்கும் பக்திக்கும் அவன் உள்ளத்திலிருந் துண்டாகும் நாதமே முதலாயிருக்கிறது. எங்குமுள்ளதாய் விளங்கும் ஒருவனே எல்லா ஜீவப்பிராணிகளின் உள்ளத்திலுமிருக்கிறான். அவ்வுள்ளம் அம்மெய்ப்பொருளை (உண்மையை) யுடையதாயிருக்குமானால் எல்லாமுள்ளதாகவும் அதுகுறையக் குறைய படிப்படிய் ஒன்றுமில்லாததாகவும் ஆகிறதை நாம் அறிவோம். நல்ல உள்ளம் இல்லாதவன் நல்ல வார்த்தைகளை யில்லாதவனாகிறான். உண்மை அவன் வாயினின்று வருகிறதில்லை என்பதையும் நாம் அறிவோம். ஒருவன் சொன்ன இனிய வசனங்களும் இன்பமான ஓசைகளும் சொன்ன அவனிடத்திலேயே திரும்பப் போய்ச் சேருகின்றன. இப்படி மாறிமாறி உண்டாகும் செயலே ஒருவனில் நிலைத்திருக்கும்பொழுது அவன் ஆனந்தமுடையவனாகிறான். உண்மையான ஆனந்தத்திற்கு உண்மையான நாதமே ஆதிகாரணம். இவ்வுண்மை விருத்திக்கு மூலகாரணத்தையே ஆத்மம் என்றும் பரம் என்றும் அறிவுடையோர்கள் சொல்வார்கள். உண்மையினின்று தோன்றும் ஆனந்தமும் ஆனந்தத்தினின்று தோன்றும் கீதமும் எவ்விடத்திலிருந்து உண்டாயிற்றோ அந்த இடத்தையே அலங்காரப்படுத்துகிறது. அதாவது அதில் உண்மையாய் விளங்கும் தெய்வத்தினிடத்தில் நிலைக்கும்படி செய்கிறது. தெய்வத்திலேயே நிலைத்திருந்த தபோதனர்கள் சங்கீதத்தை உதவியாகக்கொண்டு தங்கள் தபசை செய்துவந்தார்கள். ஜீவகாருண்யம், அடக்கம், பொறுமை, கீழ்ப்படிதல், அன்பு முதலிய உத்தமகுணங்கள் விளங்கி தெய்வபுத்திரராக உலகத்தில் பிரகாசித்தார்கள். இதற்கு மாறாக அதாவது உண்மைக்கு மாறாகச் செய்யும் கானங்கள் செய்தவனை பல அல்லல்செய்து பொய்யனாக்குமென்பது நிச்சயம். வேதமுண்டான காலத்திலேயே அவைகள் ராகத்தோடு பாடப்பட்டதென்றும் ஒரு சுரத்தைக் கொண்டும் இரண்டு சுரத்தைக்கொண்டும் மூன்று சுரத்தைக்கொண்டும் கானம் பண்ணிக் கொண்டிருந்தார்களென்றும் அதன்பின் ஐந்து, ஆறு, ஏழு என்னும் சுரங்களையும் அந்தந்த சுரங்களுக்குப் பொருத்தமுள்ள மேல் சுரங்களையும் சேர்த்து உதாத்த, அனுதாத்த, ஸ்வரிதம் என்று வழங்கிவந்தார்களென்றும் பின்வரும் வாக்கியங்களால் தெரிகிறது. Hindu Music and the Gayan Samaj, P. 4. "As has been already observed, our Rishi ancestors, in very early times, had been chanting vedic hymns and setting them to music, and mention of this fact in the vedas is frequently made in the Rigveda, as for instance, in such assertions as Archino Gayanti, Ganthino Gayanti and Samino Gayanti. Again, in later times Panini and other acharyas or teachers describe the science, and all this goes to show distinctly that music was cultivated among our ancestors to a large extent, and with great assiduity and taste. The Arka system of music, it is said, was based upon only one note, the Gathika system upon two, and the Samika upon three, and to these was subsequently added another system termed the swarantara (another note) based upon four notes. There was thus vital difference between the system adopted by the Rishis and those adopted by the Acharyas; and Panini, to make up the difference, while regarding in his vyakarana Sutras, the three swaras" (Udatta, Anudatta and Swarita), as the main notes, points out in his (Siksha), the connection between the system by three and those by seven notes thus: (Udatta) includes (ni and ga) (Anudatta) includes (ri and dha) and (Swarita) includes (sa, ma, pa).
|