"நாம் முன்னே சொன்னபடி, நம்முடைய முன்னோர்களாயிருந்த ரிஷிமார்கள் ஆதிகாலத்திலேயே வேதத்திலுள்ள பிரார்த்தனைகளைப் பாடி சுரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதைப்பற்றி ரிக்கு வேதத்தில், அநேக இடங்களில் அடிக்கடி சொல்லப்படுகிறது. உதாரணமாக, அர்ச்சினோகாயந்தி, காயந்தினோகாபந்தி முதலிய முறைகள் சொல்லப்படுகின்றன. பிற்காலங்களில் பாணினி முதலிய ஆசிரியர்களும் வித்வான்களும் இந்த வித்தையை விஸ்தரித்துச் சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாம் நாம் கவனிக்கும்போது, சங்கீதமானது நமது முன்னோரால் வெகு சிரத்தையோடும் பிரியத்தோடும் விருத்தி பண்ணப்பட்டுவந்தது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். 'அர்க்கா' என்னும் முறையானது ஒரே சுரத்தையும் 'காதிகா' என்பது இரண்டு சுரத்தையும், 'சாமிகா' என்பது மூன்று சுரத்தையும் உடைத்தாயிருந்தது என்றும், இவைகளோடுகூட நாலு சுரத்தையுடைய 'ஸ்வராந்தம்' என்னும் வேறொரு முறைஉண்டாயிற்று என்றும் தெரிகிறது. ஆசையால், ரிஷிகளின் முறைக்கும் ஆசாரியரின் முறைக்கும் அனந்த வித்தியாசமிருந்ததால் இந்த இரண்டு முறையையும் சம்பந்தப்படுத்தும்படியாக என்ன செய்தாரென்றால், தம்முடைய 'வியாகரண சூத்திரத்தில்' மூன்று சுரங்களாகிய உதாத்தம், அனதாத்தம், ஸ்வரிதம் என்பவைகளை மூல சுரங்களாக வைத்துக்கொண்டும், தம்முடைய "சிக்ஷை"யில் அந்த மூன்று சுரங்களுக்கும் சப்தசுரங்களுக்குமுள்ள சம்பந்தத்தை பின்வருமாறு காண்பிக்கிறார்" "உதாத்தம் நிஷாதத்தையும் காந்தாரத்தையும்" அனுதாத்தம் ரிஷபத்தையும் தைவதத்தையும்" ஸ்வரதிம் சட்ஜ மத்திம பஞ்சமங்களையும் உள்ளடக்கியிருக்கின்றது என்கிறார்." இவ்வாக்கியங்களைக் கவனிக்கையில் வடமொழி இலக்கணம் சொன்ன பாணினி (Panini) முனிவரின் காலத்தில் ஸப்த சுரங்களும் சங்கீதத்தின் சில முக்கிய அம்சங்களும் சொல்லப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. வடதேசத்திலிருந்து வந்த ஆரியர் முதல் முதல் ஒன்று, இரண்டு மூன்று சுரங்களோடு உதாத்த அனுதாத்தமாகக் கானம் செய்து வந்தார்களென்று தெளிவாக அறிகிறோம். ஆனால் இந்தியாவின் தென்பாகத்திலுள்ள பாவணேஸ்பரன் என்னும் ராஜன் சாம வேதத்தை வப்த சுரங்களினாலும் பாடினானென்றும் அதன் பின்பே ஸ்ப்த சுரங்களும் அவற்றின் விக்ருதி சுவரங்களும் சாமவேதத்தில் பழக்கத்திற்கு வந்தனவென்றும் எண்ண இடமிருக்கிறது. இடைச்சங்கத்தின் துவக்கத்திலிருந்த தொல்காப்பியரின் காலத்திற்கு முன்னாலேயே சங்கீத சாஸ்திரம் மிகஉன்னத நிலையிலிருந்ததென்று நாம் முன்னே பார்த்தோம். இது பாணினியின் காலத்திற்கு அநேக ஆயிரவருஷங்களுக்குமுன்னுள்ளது. பாணினி பாவணனுடைய காலத்திற்கும் தொல்காப்பியரின் காலத்திற்கும் மிகப்பிந்தினவரென்றும் இளங்கோவடிகள் காலத்திற்குச் சமீபித்தவர் என்றும் சொல்லவேண்டும். பாணினியின் காலத்திற்கு முன்னாலேயே சாம வேதம் பாடும் விதம் ராவணேஸ்பானால் கற்பிக்கப்பட்டதென்றும் அதற்கு முன்னாலேயே இசை நூல் அகத்தியராலும் நாரதராலும் சொல்லப்பட்டிருந்ததென்றும் நாம் அறியவேண்டும். ராவணேஸ்பரனால் சங்கீத வாத்தியம் செய்யப்பட்டதாக பின்வரும் வசனங்களில் காணலாம். History of Music by Hunt P. 141. "The family of stringed instruments played with a bow has been a very numerous one. The most ancient Viol on record appears to be the ravenstrom (or ravanstron), still played in India by the mendicant monks of Buddah. Tradition says that this primitive instrument was invented by one of the kings of Ceylon, but the date assigned to this monarch is somewhat about five thousand years before Christ. It said, that the revenstrom was the precursor of the gondok, or Russian Fiddle; and the Welsh crwth, which had six strings strung across a flat bridge, and was played partly with the bow, and partly by plucking with the fingers. வில்லினால் வாசிக்கப்படும் தந்திவாத்தியங்களின் தொகை அனந்தம். அவைகளில் வெகு பூர்வமாயுள்ளதாகச் சொல்லப்படும் (Viol) கின்னரம் என்ற வாத்தியமானது, தற்காலத்திலும் இந்தியாவில் பௌத்தமத சந்நியாசிகளால் உபயோகப்படுத்தப்பட்டு வருகிற ராவணேஸ்வரம் என்னும் வாத்தியமே. இந்த
|