பக்கம் எண் :

117
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

ஆதிவாத்தியமானது இலங்கையை ஆண்ட அரசர்களில் ஒருவனால் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த அரசன் அரசாண்டகாலம் கிறிஸ்துவுக்குமுன் 5,000 வருஷங்கள் என்று பரம்பரையாய்ச் சொல்லப்படுகிறது. Russian Fiddle அல்லது Gondok என்னும் வாத்தியமானது, இந்த இராவணே ஸ்வரம் என்னும் வாத்தியத்திலிருந்து உண்டானது என்பதற்குத் தடையில்லை. வேல்ஸ் தேசத்தில் உபயோகப்படுத்தப்படும் Crwth என்னும் வாத்தியமும் இதிலிருந்து உண்டானதுதான். அதற்கு ஏழு தந்திகள் உண்டு. அது வில்லினால் வாசிக்கப்படலாம், அல்லது விரலினால் மீட்டவும் படலாம்."

மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கும்பொழுது ராவணேஸ்வரம் நாம் சாதாரணமாய் தெருவில் பார்க்கும் அகப்பைக் கின்னரியைப்போலிருக்குமென்று நினைக்க ஏதுவிருக்கிறது. இதை அல்லது இதற்கு சற்று பெரியதாயுள்ளதும் வில்லினால் வாசிக்கக்கூடியதுமான ஒரு வாத்தியத்தை ராவணேஸ்வரன் செய்தானென்று சொல்வதை நம்ப இடமில்லை. அவனுடைய சாஸ்திர வல்லமைக் கேற்பச் சங்கீதத்தில் தேர்ந்த ஆரியர்கள் கண்டு பிடிக்காத சுரங்களையும் கண்டுபிடித்து அதில் சாமவேதத்தைப்பாடிப் பரமசிவன் கிருபையை பெறுதற்குத் தகுந்ததான உயர்வுடைய வாத்தியமொன்று செய்திருப்பானேயோழிய, குறவர்செய்து ஆறுபைசாவுக்கு விற்று ஜீவனம்பண்ணும் ஒரு அகப்பைக் கின்னரியைச் செய்தானென்று சொல்வது முற்றிலும் ஒவ்வாது. ராவணன் ஆண்டதீவுகளில் தேங்காய் பெரிதாயிருந்ததினால் அக்கொட்டாங்குச்சிகளைக் கொண்டு அகப்பைக்கின்னரிசெய்து சிறுவர்களுக்கும் சொற்பத்தில் ஜீவனம் பண்ணும் பரதேசிகளுக்கும் விளையாட்டுப் பொருளாக விற்று வந்தார்கள். இதற்கு ராவணேஸ்வரம் என்று பெயர் வந்திருக்கலாமென்று நினைக்கிறேன். 10,417 சுலோகங்களையுடைய ரிக்குவேதமே மிகப்பூர்வமாயுள்ளது. இவ்வேதம் எசுர், சாமம் அதர்வணம் என்ற மூன்று வேதங்களையும் தன்னிலடக்கிக் கொண்டிருந்தது, ராவணேஸ்வரன் ரிக்குவேதத்தை நன்றாய்த் தெரிந்தவனாயிருந்ததினால், அவைகளுள் பரம சிவனை தோத்தரிக்கக் கூடியனவாயிருந்த சில சுலோகங்களைத் தன்காலத்தில் பழக்கமாயிருந்த தென்னாட்டுச் சங்கீதமுறைப்படி ஸப்த சுரங்களையுமுடையதாகிய இனிய பண்ணில் கானம் பண்ணினானென்று விளங்குகிறது. இக்காணத்தில் மிகப் பிரீதியுடையவராய் ராவணண் பிழையை மன்னித்ததின் நிமித்தம் சிவனை சாமகானப்பிரியர் என்று நாளதுவரையும் சொல்லப்பட்டு வருகிறது. சாம, பேத, தான, தண்டம் என்னும் ராஜ தந்திரம் நான்கையும் அறிந்த ராவணேஸ்வரன், பகவான் தன்னை மன்னிக்கும்படியாக ரிக்குவேதத்தின் சில பாகத்தை வீணையுடன் கானம் பண்ணினான். சாமம்+வேதம் = சாமவேதம்; சாமம் = சமாதானம் பண்ணுதல், தன் மேல்கொண்ட கோபம் தணிந்து சமாதானமாகும்படி பிரார்த்தனை பண்ணினதினால் இக்கீதத்திற்கு சாமகானம் அல்லது சாமவேதம் என்று பெய்ர வந்திருக்கலாம்.

சோமயாகஞ் செய்யுங்காளத்தில் தெய்வத்தைத் தோத்தரிக்கும் பாடல்களுக்கு சாமகானம் என்று பெயர் வழங்குகிறது. சோமம் என்பது ஒரு விருக்ஷத்திற்கும் ஒரு செடிக்கும் பெயராக வழங்கி வருகிறதென்று தெரிகிறது. சோம விருக்ஷம் காடாயிருந்ததென்றும் சோமக்கொடி (சோமலதை)யை கொண்டுவந்தானென்றும் சொல்லப்படுகிறது. சோமச்சொடியிலிருந்துண்டாகும் ஒருவித குடிநீர் ஆனந்தத்தை விளைவித்து மயக்கத்தை உண்டாக்கும் வஸ்துவாயிருந்ததென்று தோன்றுகிறது. யாகத்திற்குரிய பதார்த்தங்களை பாகஞ்செய்து அவரவர்கள் யாகபாகம் பெற்றுக்கொண்டபின் தங்களுக்குப் போதுமான அளவு சோமரசபானம் பண்ணும்பொழுது சந்திர லோகத்திலிருக்கிறதாக நினைக்கும் தங்கள் பிதிர்களுக்காக சோமனை அல்லது சந்திரனைப்பார்த்து கானம் பண்ணுவார்கள் என்று பின்வரும் வாக்கியங்களில் காணலாம்.

Music of Hindustan by Fox Strangways P. 249 250.

"Samaveda. The symbol round which the elaborate ritual of the Samaveda gathers is that sacrifice of which the drinking of the juice of the Soma plant was the central point. The virtues