பக்கம் எண் :

118
இந்திய சங்கீதத்தைப்பற்றிய பொதுவான அபிப்ராயம்

of this juice are recapitulated in the ninth book of the Rig Veda, from which mainly the words for the Saman chants are taken. Soma is translated moon plaint; and the Samaveda is specially connected with the worship of ancestors, whose abode was the moon. Great care was taken not to deviate from the original melody-types and rhythms and the religious efficacy of the hymns was held to depend largely on the right application of directions contanined in the Brahmanic explanations (Brahmana not later than the sixth century B.C) of the Vedic text "Samhita." The expense of the full cermonial was not small; the Soma sacrifice involved days in performance and months in preparation. A full description of its elaborate and gorgeous ritual is to be found in the Aitareyabrahmana of the Rig Veda translated into English by Martin Haug, 1863, and its close connection with the fire-worship of the Zorastrians is there detailed."

"சாமவேதம். சாமவேதத்தில் சொல்லப்பட்ட அதிமேன்மையான சடங்காசாரங்கள் எல்லாவற்றிலும் முக்கியமானது என்னவென்றால் சோமலதையின் ரசத்தைக் குடிப்பதாகிய பலியே. இவ்விரசத்தின் பெருமையைப்பற்றி ரிக்குவேதத்தின் ஒன்பதாவது அதிகாரத்தில் விஸ்தாரமாய்ப் பார்க்கலாம். சாமவேதத்தின் சுலோகஞ் சொல்லுதலும் இதிலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது. சோம என்றால் சந்திரச்செடி. சாம வேதத்திற்கும் பிதிர் வணக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு. அதென்னவென்றால் அப்பிதிர்கள் சந்திரனில் வசிக்கிறார்கள் என்னும் நம்பிக்கையே. இந்தச்சுலோகங்கள் ஆதியில் எழுதப்பட்ட இராகமேரையிலும் தாளத்திலும் இப்போது சொல்லப்படுகிறதா என்பதைப்பற்றி அதிக கவலையுள்ளவர்களா யிருந்தார்கள். வேதங்களைச் சேர்ந்த பிராமணக்ளில் சங்கீதத்தைப்பற்றிச் சொல்லியிருக்கும் விதிகளின்படி இந்த சாமவேத சுலோகங்கள் சொல்லப்படாவிட்டால் அவைகளில் யாதொரு பயனுமில்லை யென்று கொண்டார்கள். (பிராமணங்கள் கி.மு. ஆறாவது நூற்றாண்டில் உள்ளவை). சடங்காசாரங்களுக்குச் சென்ற செலவானது கொஞ்சமல்ல. சோமரச பலி ஒன்றைச் செலுத்துவதற்கு அநேக நாள் பிடித்தன. அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் முடிவுபெற அநேக மாதங்கள் சென்றன. இந்த பலியின் அதிகாம்பீரமான சடங்குகளைப்பற்றியறிய வேண்டுமானால் ரிக்கு வேதத்திலுள்ள ஆய்த்தரிய பிராமணத்தில் பார்க்கலாம். இந்த நூல் Martin Haug என்பவரால் 1863-ல் இங்கிலீஷில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த சடங்குகளுக்கும் பார்சிகளால் செய்யப்படும் அக்கின் வணக்கத்திலுள்ள சடங்குகளுக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தம் இதில் நன்றாய் வெளிப்படும்."

சோமனைப்பார்த்து பிரார்த்திக்கும் கானத்திற்கு சோமகானம் அல்லது சாமகானம் என்றும் சோமரசம் குடித்துச் சொல்லும் பாட்டிற்கு சாமகானமென்றும் பெயர் வரலாம். ஆனால் ராவணேஸ்வரன் பரமசிவனை இன்னிசையுடன் பாடியபின்பே அதற்கு சாமகானம் என்று பெயர் வந்திருப்பதாக நாம் நினைக்கவேண்டும். ரிக்குவேதத்திலுள்ள சுலோகங்களே ராவணனால் கானம் செய்யப்பட்டபின் சாமவேதமென்று அழைக்கப்பட்டன என்று நாளது வரையும் உலக வழக்கத்தில் சொல்லப்படுகிறது.

மேற்கண்ட வாக்கியங்களில் கண்ட சரித்திரத்தை நாம் இதன்முன் கேள்விப்பட்டிருக்கிறோம்., இச்சரித்திரத்தை ஞாபகப்படுத்துவதற்காக மதுரை ஆலயத்தில் செய்யப்பட்டிருக்கும் சொரூபத்தையும் பார்த்திருக்கிறோம். இதில் ராவணேஸ்வரன் ஒரு வீணையை வைத்துக்கொண்டு தன் இருபது கைகளினாலும் வாசிக்கிறதாகக் காணப்படுகிறது. மேலும் மதுரைக்கு சமீபத்திலுள்ள ஆவிடையார்கோயிலிலும் மற்றைய சிவஸ்தலங்களிலும் ராவண வாகனம் (கைலாசவாகனம்) என்ற வெள்ளிவாகனத்திலும் ராவணன் வீணைவாசிக்கிறதாகவே தோன்றுகிறது. சுமார் 2,000-3,000, வருஷங்களுக்கு முன்னுள்ள ஆலயத்தின் சித்திரத்தையும் வாகனத்தின் சித்திரத்தையும் கவனிக்கையில் ராவணேஸ்வரம் ஒரு வில்வாத்தியம் என்று நினைக்க இடமில்லை. ஆனால் இந்து சங்கீதத்தின் ஆதி பூர்வமாயுள்ளதும் தற்காலத்தில் இல்லாததும் ஆயிரம் தந்தி பூட்டியதுமாகிய பேரீயாழ் என்பதை ராவணன் செய்து தன் 20 கரங்களினாலும் அவைகளை மீட்டிவாசித்தானென்று சொல்வது மிகவும் பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது.