அக்காலத்திற்கு முன்னமேயே சங்கீதம் பூரண தேர்ச்சியடைந்திருந்த தென்று நாம் நிச்சயிக்கலாம். அக்காலத்தில் பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் முதலிய வீணைகளிலிருந்தனவாகக் காணப்படுகின்றனவே யொழிய இந்த அகப்பைக் கின்னரி இருந்ததாக ஓரிடத்தும் சொல்லக்காணோம். வாத்தியங்களின் உதவியைக்கொண்டு ஒருவனாய்த் தனித்துப் பாடும் வழக்கம், இந்திய சங்கீதத்திற்கு மிகப் பூர்வமாகவேயுள்ளது என்று பின்வரும் வாக்கியங்களில் காணப்படுகிறது. H.M. Scale & Srutis, By K.B. Deval P. 46 "The essential basis of music is melody and this is contained admittedly in the Hindu scale to its full extent. This has been the main charm of the Hindu system of music for thousands of years in the past and will continue to remain so for a number of years in the future." "எல்லாச் சங்கீதத்துக்கும் ஆதாரம் தனிச்சுரங்களை ஒன்றின்பின் ஒன்றாய்ச் சொல்லுவதுதான் (Melody). இது சங்கீதத்தில் பூரண அளவாய் இருக்கிறது என்று எல்லோரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். அநேக ஆயிரவருஷங்களாய் இந்திய சங்கீதம் இனிமையாயிருப்பதற்குக் காரணம் இதுவே. இது காரணம் பற்றியே வரப்போகிற வருஷங்களிலும் அது வெகு பிரசித்தமாயிருக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை." இவ்வாக்கியங்களில் ராகம் பாடுவது மிக இனிமையுடையதென்று சொல்லுகிறார். இனி வரப்போகுங் காலங்களிலும் இது மிகவும் மேன்மையுடையதாக எண்ணப்படுமென்றும் நிச்சயஞ் சொல்லுகிறார். உண்மையிலேயே அவைகள் மேன்மையுடையவைகளா யிருப்பதற்குக் காரணம் பின்வரும் வாக்கியத்தில் காணலாம். The Indian Empire by W.W. Hunter. P. III. "It is, indeed, impossible to adequately represent the Indian system by the European notation; and the full range of its effects can only be rendered by Indian instruments a vast collection of sound-producers, slowly elaborated during 2,000 years to suit the special requirements of Hindu music. The complicated structure of its musical modes (rags) rests upon three separate systems, one of which consists of five, another of six, and the other of seven notes. It preserves in a living state some of the early forms which puzzle the student of Greek music, side by side with the most complicated developments." "இந்திய இராகங்களை ஐரோப்பிய சங்கீதத்தில் வழங்கிவரும் கோடுகள் நோட்டுகள் மூலமாய் சுரப்படுத்துவது கூடாதகாரியம். அந்த இராகங்களின் முழு இனிமையையும் பிரஸ்தாரத்தையும் அறியவேண்டுமானால் இந்திய சங்கீத வாத்தியங்கள் மூலமாய்த்தான் அறியலாம். இந்த வாத்தியங்கள் ஒன்றிரண்டல்ல, நேற்று முன்றாநாள் உண்டானவையுமல்ல. அவைகளின் தொகை அதிகம். அவையுண்டான காலமும் 2,000 வருஷங்களுக்கு முன்னாகும். அவை ஒரே காலத்தில் உண்டானவையுமல்ல. அந்தந்தக் காலத்துக்கும் அவசியத்துக்கும் தக்கபடி படிப்படியாய் 2,000 வருஷங்களாகச் சோதிக்கப்பட்டும் பிரஸ்தாரத்துக்குக் கொண்டுவரப்பட்டவை. இந்திய சங்கீதத்துக்கு ஆதாரமாயிருக்கப்பட்ட ஆரோகண அவரோகணங்கள் மூன்று வகையுள்ளன. ஒன்று 5 சுரங்களும், ஒன்று 6 சுரங்களும், ஒன்று 7 சுரங்களுமுள்ளன. ஆதியில் ஏற்பட்டுள்ள இந்த ஆரோகண அவரோகணங்கள் அவ்வளவு சிக்குமுக்காய் இருப்பதால் கிரேக்க சங்கீதம் அறிந்தவர்கள்கூட அவைகளைக் கண்டால் யாதென்றறியாமல் திகைப்பார்கள்." இவ்வசனங்களை கவனிக்கையில் இதை எழுதியவர் இந்திய சங்கீத சாஸ்திரத்தின் நுட்பங்களை நன்றாய் அறிந்தவரென்பது விளங்குகிறது. முதல் முதல் ஐரோப்பியர் சுரத்தைக் கோடுகளில் குறிக்கும் வழக்கம்போல் குறிக்கக்கூடாத விதமாக நுட்பமான சுரங்களிருக்கின்றனவென்று சொல்லுகிறார். அந்நுட்பமான சுரங்களையும் இந்திய சங்கீத வாத்தியங்களின் மூலமாய்த்தான் அறியலாமென்றும் அந்நுட்பமான சுரங்களே இந்திய ராகங்களின் இனிமையுடையனவென்றும் சொல்லுகிறார். இந்நுட்பமான சுரமே இந்திய சங்கீதத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கிறதென்று அறிந்தாலும் இலகுவாய்ச் சொல்லிக்காட்டவும் இன்னின்ன அளவில்
|