இது விஷயத்தைப்பற்றி Captain Willard என்பவர் சொல்லுவது யாதெனில், இந்துதேசத்திலுள்ளோர் உபயோகிக்கும் ஆரோகண அவரோகணங்கள் (authentic modes) சொற்பமானவையாதலால், இந்தியருடைய இராகவித்தியாசங்கள் கணக்கிலடங்காதவையாயிருக்கும் என்று எண்ணுவது பிசகு. அப்படி எண்ணுவதும் நியாய விரோதமாயிருக்கும். இந்த ஆரோகணங்கள் (authentic modes) சங்கீதத்தில் வித்வத் திறமையையும் உருவாக்கும் திறமையையும் உடைத்தாயிருந்த பல வித்வான்களால் அமைக்கப்பட்டவையென்று யாவரும் ஒப்புக்கொள்வதால், அவர்களுடைய வரையைக்கடந்து நாம் செல்வது குற்றமாயிருக்கும். தற்கால வித்வான்கள் அந்த ஆரோகணங்களைத் தாங்களும் அங்கீகரித்து உபயோகத்துக்குக் கொண்டவந்ததுமல்லாமல் அவைகளில் இரண்டொன்றை ஒன்று சேர்த்ததால் புதிதான சிலவற்றைக் கண்டுபிடித்துமிருக்கிறார்கள். இவ்வளவு தூரம் இவர்கள் செய்யலாமேயொழிய இதற்குமேல் நூதனமாய் ஒன்றையும் அவர்கள் செய்ய அதிகாரமேயில்லை. தற்காலம் உண்டுபண்ணப்பட்ட சங்கீதமானது எவ்வளவு மதிப்பை உடைத்தாயிருந்தபோதிலும், தேசத்தில் பரம்பரையாய் வழங்கப்படும் ஆரோகண அவரோகணங்களுக்கு ஒத்திரவிட்டால் குற்றமென்று கொள்ளப்படும். இப்போது இருக்கிற ராகங்களோடு புதிதாய் ஏதாவது ஒன்றையாவது சேர்ப்பது கூடாதகாரியம் என்று இந்துவித்வான்கள் நிச்சமாய் நம்புகிறார்கள். பழமையை விடாப்பிடியாய்ப் பிடித்தல் என்கிற வழக்கம் இவர்களுக்குள் இருப்பதால் இப்படி நினைக்கிறார்கள். தனிசுரங்களாலான இராகங்களையே விருத்திசெய்து பல அனுசுரங்களை ஏக காலத்தில் சேர்த்துச் சொல்வதைக் (Harmony) கட்டோடே விட்டுவிட்டதுதான் இந்திய சங்கீதமானது மற்ற தேச சங்கீதம் விருத்தியடைந்ததுபோல அடையாததற்குக் காரணம். ஐரோப்பியருடைய காதுக்கு இந்திய ஸங்கீதம் இனிமையாயிராமல் ஒரே ரீதியுடையதாய்க்காணப்படுவதற்கும் இதுவே காரணம். இந்துதேச சரித்திரத்தின் ஆரம்பகாலமுதல் இந்திய சங்கீதமானது சாஸ்திர சம்பந்தமான விஷயத்தில் தேர்ச்சியை அடைந்திருந்ததேயொழிய பாடுதல், வாத்தியங்களில் வாசித்தல் முதலிய விஷயங்களில் அதிக விருத்தியடைந்திருந்ததாகத் தெரியவில்லை. இராகங்களைச் சுத்தமாய் யாவருக்கும் விளங்கக்கூடிய முறையில் சொல்வதைப் பெரியதாய் நினைக்காமல் இராகங்களைக் கஷ்டமாய் ஆக்கிக் காண்பிப்பதே வித்தையென நினைத்தார்கள். ஆகையால்தான் புதிது புதிதான முறைகள் தோன்றி ஆதியில் இராகங்களுக்கு இருந்த அழகைக் கெடுத்துவிட்டன. சங்கீதத்தின் அழகு யாவருக்கும் எளிதில் விளங்கும் அதின் லேசான முறையன்றோ? இப்படிச் சங்கீதம் கெட்டுப்போனதற்கு முக்கிய காரணம் யாதென்றால், படிப்பறியாத பாடகர், வாத்தியக்காரர் முதலியவர்கள் கையில் சங்கீதம் அகப்பட்டுக் கொண்டதுதான். ஆனால் சங்கீதமானது இப்படிச் சுத்தமின்றிக் கலப்பாவதினாலும் லேசான முறைகளை விட்டுவிடுவதினாலும் கெட்டுப்போவதற்குக் காரணமானயிருந்தவர்கள் இப்போது வரவர ஒழிந்துபோகிறார்கள். ஆகையால் இப்போது சங்கீதமானது முன்னிருந்த ஆதித் தனிநிலைமைக்குத் திரும்பி வருகிறது என்பதற்குச் சந்தேகமில்லை. எல்லாச் சங்கீதத்தினுடைய முக்கிய அம்சம் என்னவென்றால், கல்லையும் கரையப்பண்ணும்படியான அவ்வளவு இனிமையைக் கொடுப்பதுதான். தற்கால சங்கீதம் இவ்வழியில் திரும்புகிறது என்கிறதற்கும் போதுமான ஆதாரங்கள் உண்டு." இதில் மேற்றிசையார் ஒரு ஆரோகண அவரோகணத்தில் ஏற்படும் ராகம் ஒன்றை அதற்குரிய அழகோடு பாடுவதை விட்டுவிட்டு ஷட்ஜமம், காந்தாரம், பஞ்சமம், மேல்ஷட்ஜமம் முதலிய அனுசுரங்களை வைத்துக்கொண்டு நாலு பாகமாகப் படிக்கும் அழகையே விருத்திசெய்தார்களென்றும், இந்தியர்கள் அப்படிச் செய்யாமல் ராகத்தையே படிப்பது மேலென்று நினைத்தார்களென்றும் சொல்லுகிறார். இவ்வுண்மையை நாமும் அங்கீகரிக்க வேண்டியதே. பூர்வத்தில் இரண்டு மூன்று நாலு சுரங்களோடு வேதத்தைக் கானம் செய்த காலத்தில், சிலர் ஷட்ஜமத்திலும் சிலர் மேல் ஷட்ஜமத்திலும் துவக்கிப்பாடுவது வழக்கம். இவ்வழக்கம் வேதபாராயணம் பண்ணும் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் நாளதுவரை பழக்கமாயிருக்கிறதென்றும் இதுவே பலர் சேர்ந்து பாடும் முறையாயிருந்ததென்றும் நாம் அறியவேண்டும். இவ்வழக்கத்தினின்றே மற்றதேசத்தார் சேர்ந்துபாடும் முறையை விருத்திக்குக் கொண்டுவந்தார்களென்றும், ஆனால் இம்முறை மிகப்பூர்வமாய் இந்தியாவிலேயே வழங்கிவந்ததென்றும் ஒவ்வொரு இந்தியனும் பெருமை பாராட்டக்கூடியதாகவு மிருக்கிறது. உற்சவ காலங்களில் ஸ்வாமி வெளிப்புறப்படும்பொழுது ஸ்வாமியின்
|