பக்கம் எண் :

122
இந்திய சங்கீதத்தைப்பற்றிய பொதுவான அபிப்ராயம்

பின்னல் வேதகானம் பண்ணுவதை நாம் கவனித்தால் இவ்வுண்மை விளங்கும். ஆனால் ஸப்த சுரங்களுமுண்டாகி அவைகளின் பிரஸ்தாரபேதத்தினால் அநேக ராகங்கள் உண்டானதை அறிந்த பின், ஒன்று சேர்ந்து பாடும் வழக்கத்தில் தனித்துப்பாடும் அழகு உண்டாகமாட்டாதென்று அறிந்தார்கள். ஷட்ஜமத்தில் ஆரம்பித்து சங்கராபரண ராகஞ்சொல்லும் ஒருவருக்கு, காந்தாரத்தில் ஆரம்பித்துப்பாடுவது அனுமத்தோடி ராகமாகவும், பஞ்சமத்தில் ஆரம்பித்துப்பாடும் மற்றவருக்கு ஹரிகாம்போதி ராகமாகவும் வரும். ஆக மூன்று ராகங்களையும் ஒன்று சேர்ப்பதினால் காதுக்கு இனிமையையும் மனதுக்கு ஒடுக்கத்தையும் தராது. ஆனால் முடியும் இடங்களில் அல்லது சில சுரங்கள் ஒன்று சேருமிடத்தில் சற்று இனிமையாயிருக்கும். மெய்மறந்த உன்னத நிலைக்கு அனுசுரங்கள் சேர்ந்த சங்கீதம் உதவியாயிருக்கமாட்டாது, ஆனால் மனதைப் பலவழிப்படுத்தி சரீரத்தை உற்சாகப்படுத்திவைக்கும், இவ்வுண்மையை அறிந்தே தனித்துப் பாடும் முறையை இந்தியாவில் தனித்துத் தபசு செய்துகொண்டிருந்த பெரியோர் விருத்திசெய்து கொண்டு வந்தார்களென்று நிச்சயமாய்ச் சொல்லலாம். இந்தியாவைப்போலொத்த உஷ்ண பிரதேசத்திலுள்ளோர் கருவி, கரணங்கள் ஒடுங்கி நிற்க நீண்ட ஜீவனையும் விரிந்துநிற்க குறுகிய ஆயுளையும் உடையவராவார்கள். ஆனால் ஐரோப்பாவைப்போன்ற குளிர்ந்த பிரதேசங்களிலுள்ளோர் கருவி, கரணங்கள் ஒடுங்கி நிற்க நீண்ட ஜீவனையும் விரிந்துநிற்க குறுகிய ஆயுளையும் உடையவராவார்கள். ஆனால் ஐரோப்பாவைப் போன்ற குளிர்ந்த பிரதேசங்களிலுள்ளோர் கருவி, காரணங்கள் ஒடுங்கி நிற்கில் குளிரினால் விறைத்து ஆயுள் குறுகிப்போவார்கள். தங்களை உஷ்ணப்படுத்துவதற்கு வேண்டிய ஆகாரமும், உடையும் அனலும், ஆட்டமும் அவர்களுக்கு மிகவும் அவசியமே. இதற்கேற்ப உஷ்ணப்பிரதேசத்தில் குளிர்ந்த நீரூற்றுக்களும் சீதளப் பிரதேசத்தில் வெந்நீருற்றுக்களும் அமைந்திருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது. இவ்வியற்கையை அனுசரித்தே எல்லோரும் பாடவும் ஆடவும் கூடியவிதமாக குளிர்ந்த தேசத்தின் சங்கீதம் அமைந்திருக்கிறது. இந்தியாவில் பகிர்முகப்பட்ட மனதை ஒருவழிப்படுத்தி தியான நிலைக்குக் கொண்டுவரக்கூடிய விதமாகவும், நெடுநேரம் சமாதி கூடும் விதமாய் ராகவிஸ்தாரமுடையதாகவும் மிகவும் சிறந்த அமைப்புடையதாகவும் அழகுடையதாகவும் செய்யப்பட்டிருக்கிறது. ஆடவும் பாடவும் விரும்புவோன் மேற்றிசை சங்கீதத்தில் பிரியப்படுவான். அமைந்து மனமடங்கி தியான நிலையில் நிற்க விரும்புவோன் தென்னிந்திய பிரியப்படுவான். அமைந்து மனமடங்கி தியான நிலையில் நிற்க விரும்புவோன் தென்னிந்திய சங்கீதத்தின் ஒரு ராகத்தை ஆறுமாதமானாலும் தொடர்ந்து பாடிக்கொண்டும் கேட்டுக்கொண்டுமிருப்பான். இது இயற்கை அமைப்பே. குளிர்காலமாகிய மாரிகாலத்தில் காய்த்தகாய்கள் தித்திப்பில்லாமலும் பழுக்காமலும் நெடுநாள் மரத்தில் நிற்பதையும், புஷ்பங்கள் வாசனையின்றி சிலநாள் உதிராமலிருப்பதையும் நாம் அறிவோம். ஆனால் உஷ்ணகாலத்தில் வெகு சீக்கிரத்தில் காய்கள் அதிக மதுரமுடையவையாகி விடுவதையும் புஷ்பங்கள் அதிக வாசனையுடையனவாய் சீக்கிரம் உதிர்ந்துவிடுவதையும் நாம் காணலாம். அதிகக் குளிர்ச்சியான தோப்புகளுள்ள ஆற்றோரங்களிலும் மலைகளின் குகைகளிலும் தபசு செய்துகொண்டிருந்த பெரியோர் தங்கள் தபசுக்கனுகூலமாக வீணை என்னும் சிறந்த வாத்தியத்தை வைத்துக்கொண்டு ஒரு ராகத்தை அநேக காலம் அபிப்பியாசித்து ஆலாபனை செய்து தனித்துப்பாடும் வழக்கத்தை விருத்திசெய்து வந்திருக்கிறார்கள் என்று நாம் அறிய வேண்டும். மாலைக்காலத்தில் உதயமும் உதயகாலத்தில் மாலையும் இருப்பதுபோல் உணரக்காட்டும் ராகத்தின் அழகு, அனுசுரங்களைச் சேர்த்துப்பாடுவதினால் உண்டாகமாட்டாதென்பது திண்ணம். ஆகையினால் ஆரோகண அவரோகணத்தில் ஒளடவ, சாடவ, சம்பூரணம் என்னும் சுரப்படி வக்கிர வர்ஜிய விதிப்படி காலக்கிரமம் அறிந்து ஒரு ராகத்தைப்பாடி அதின் இனிமை தெரிந்துகொண்டவர்கள் அதையே விரும்புவார்கள் என்பது நிச்சயம்.

பழமையை விடாப்பிடியாய் பிடிக்கிற வழக்கம் இந்துக்களுக்குள்ளிருப்பதால் புதிதாக ஒரு ராகம் உண்டாக்குவது கூடாத காரியமென்று சங்கீத வித்வான்கள் நிச்சயமாய்