பக்கம் எண் :

123
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

நம்புகிறார்கள் என்கிறார். இவ்விஷயத்தில் இவர் அபிப்பிராயத்தை முற்றிலும் ஒப்புக்கொள்ளுகிறோம். பூர்வத்தில் இந்தியாவிலிருந்த பெரியோர் ஒவ்வொரு ராகத்தையும் விஸ்தாரம் செய்வதற்கு வேண்டிய கிரமத்தை கீதமாகச் செய்து வைத்தார்கள். அக்கீதமே தற்காலத்திலுள்ள வத்வான்களுக்கு ராகத்தை விஸ்தாரம் பண்ணுவதில் ஊன்றுகோல்போல் உதவுகிறது. இப்படிப்பட்ட கீதம் செய்யக்கூடிய விதிமுறைகள் அழிந்துபோயின. ஆகையினால் முன்னோர் செய்துவைத்த கீதங்கள் எத்தனையோ அத்தனை ராகங்கள் மாத்திரந்தான் இப்போது பாடப்பட்டு வருகின்றன. புதிதாக ஒரு ஆரோகண அவரோகணத்தில் ஒரு ராகம் ஒருவர் பாடுவாரானால், அதில் அநேகதப்பிதங்கள் ஏற்பட்டு இதைப்பாடாமல் விட்டுவிடுவதே நல்லதென்று அவருக்கே தோன்றும். திறவுகோலில்லாத பூட்டைத் திறக்கவும் பின்பூட்டவும் முடியாததிருக்கிறது எப்படியோ அப்படியே இந்திய சங்கீதத்தின் நிலையுமிருக்கிறது. இது தவிர "சாஸ்திர சம்பந்தமாகத் தேர்ச்சி யடைந்திருந்தார்களேயொழிய, பாடுவதில் அவ்வளவு தேர்ச்சியடையவில்லை" என்று சொல்லுகிறார். அனுபோகம் வேறு சொல்வேறாயிருந்த சில சங்கீதசாஸ்திரங்களினால் இப்படிச் சொல்ல நேரிடுகிறதே யொழிய சாஸ்திரத்தின் மர்மம் தெரியுமானால் இவ்விதம் நினைக்கமாட்டோம். மேலும் அவர் சொல்லியது போலவே, இழிவான தொழில் உள்ளவர்களாலும் அறியாமையுள்ளவர்களாலும் சங்கீதம் தன் மதிப்பை இழந்ததென்று நாமும் சொல்லுகிறோம். ஆத்மலாபம்பெற உண்டான கீதம் அர்த்த நிமித்தம் விற்கப்படுவதை அறிந்த பெரியோர் அருவருப்பது நியாயந்தானே.

கிரீடாதிபதிகளாலும் அவதார மூர்த்திகளாலும் ரிஷிகளாலும் ஆடிக்கொண்டாடப்பட்டுவந்த சங்கீதம், களைக்கூத்தாடிகளாலும் கூத்தாடு கிறவர்களாலும் நடனஞ்செய்பவர்களாலும் அரை குறையாய் அப்பியாசிக்கப்பட்டும், சங்கீதவித்வான்களென்று தங்களைக் காட்டிக்கொள் ளுகிறவர்களால் தற்காலத்தில் பெருபாலும் படிக்கப்பட்டும் வருவதே சங்கீதம் குறைவான நிலைக்கு வந்ததற்கு காரணமென்று சொல்ல இடந்தருகிறது. இந்திய சங்கீதத்திற்கு முக்கியமான மார்க்கவிதி தவறி, பெரும்பாலும் தேசிகமானதற்குக் காரணம் இந்திய தேசத்துப்பிரபுக்களின் கவனக்குறைவே யொழிய வேறல்ல. இந்தியாவில் சங்கீதம் மிக உயர்வாகக் கொண்டாடப்பட்ட தென்றும் வாய்மொழியால் பரம்பரையாய்ப் பாடப்படும் கீதங்களை நாம் ஆதாரமாகக் கொள்ளவேண்டு மென்றும் பின்வரும் வசனங்களில் தெரிகிறது.

Doctor coomarasawmy's Foreword to "The Study of Indian Music" by E. Clements.

"Long anterior to this, however, music was a most highly cultivation - perhaps the most highly cultivated of Indian arts, and to the present day it has remained the most continuously vital and most universally appreciated art of India."

"காளிதாசன் பரதர் காலத்துக்கு முன்னேயே சங்கீதமானது எல்லா இந்தியசாஸ்திரவித்தைகளிலும் அதிகமாய்ப் பயிலப்பட்டு வந்தது என்றும் ஆதிகாலமுதல் தற்காலம்வரை தொன்றுதொட்டு உயிருள்ளதாயும், இந்தியாவில் எல்லா வித்தைகளிலு சிரேஷ்டமானதாயும் கொண்டாடப்பட்ட தென்றும் தெரிய வருகிறது."

"It is far better that the method of oral transmission should be maintained."

"வாய்மொழியால் பரம்பரையாய் வரும் முறையே விசேஷமாகக் கொள்ளப்படவேண்டும்."

வாய்மொழியாய் பரம்பரையாய் வரும்முறைறையே விசேஷமாய்க் கொள்ளவேண்டும். இவ்வார்த்தையை நாம் நன்றாய் இங்கே கவனிக்கவேண்டும். இந்தியாவின் முக்கியமான வழக்கம் ஒன்று இதினால் அறிவோம். இந்தியாவில் அருமையான அநேக கலைகளும் தொழில்களும் தகுதியுள்ள ஒருவனுக்கு கரணபரம்பரையாய் அதாவது தன் அந்தியகாலத்தில் வெகு