ரகசியமாய் காதில் சொல்லப்பட்டு வந்ததாக அறிவோம். சில மந்திரங்களின் ரகசியங்களும் வேதாந்தத்தின் ரகசியமும் வாதத்தின் ரகசியமும் முப்பூவின் முறையும் போன்ற சில அருமையான வித்தைகள் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளால் பூர்த்திபெறக்கூடியவையாயிருந்தன. அப்படிப்பட்ட ரகசியமொழி அல்லது குருமொழியின்றி எழுதப்பட்ட புஸ்தகங்கள் ஏராளமாயிருந்து ஒரு பிரயோஜனத்தையும் தராது. இதோடு சில அரும்வித்தைகள் தொட்டுக்காட்ட அதாவது செய்துகாட்டவேண்டியவை களாகவும் இருந்தன. இச்செய்முறை தொட்டுக்காட்டாதவரையும் விளங்குவது கடினமாகும். வைத்தியம் வாதம் முதலிய தொழில்களில் வரும் இடைபாகம் பஞ்சபூத இனபாகமும் வானசாஸ்திரம் யோகசாஸ்திரம் முதலியவைகளில் வரும் கணிதமுறைகளும் வேதாந்தசாஸ்திரத்தில் வரும் பஞ்சீகரண தத்துவச் செயல்களும் முக்குண தத்துவச்செயல்களும் போன்ற அநேக ரகசியம் சொல்லப்படாமல் சாஸ்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றனவென்று நாம் அறிவோம். “எல்லார்கண் முன்னிற்கும் எடுத்துரைக்கும் குரு அருளில்லாமற் போனால் சொல்லாலும் வாராது” என்ற வாக்கியத்தின்படி மிக விரிவான நூல்களுக்கும் பெரியோர் தொட்டுக்காட்டவேண்டிய சில ரகசியங்கள் வைத்தெழுதியிருக்கிறார்கள். அக்குருமொழியில்லாமல் போனால் சாவியில்லாத ஒருவன் பூட்டிய வீட்டை எப்படிச் சுற்றிச் சுற்றி மயங்குவானோ அப்படியே குருமொழியில்லாத சாஸ்திரங்களும் விளங்காமல் அனர்த்தம் விளைவிக்கும். ஒரு நெருப்புக்குச்சியின் வெளிச்சம் எப்படி இருட்டின் அந்தகாரத்தை நீக்கி உள்ளதைக்காட்டுகிறதோ அப்படிப்போல் பெரியோர்கள் சொல்லு ஒரு வார்த்தையின் பின் வாசிக்கும் ஒரு சாஸ்திரம் மிகத்தெளிவாக அர்த்தமாகிறது. இப்படியே தென்னிந்திய சங்கீத சாஸ்திரத்தின் சுருதிமுறையிலும் ஒரு ரகசியம் மறைக்கப்பட்டிருக்கிற தென்பதை இதன்பின் பார்ப்போம்.. இச்சுருதிமுறைக்குரிய திறவுகோல் (ரகசியம்) தெரியுமானால் தென்னிந்திய சங்கீதம் மாத்திரம் சாஸ்திரயுக்தமுடைய தென்றும் மற்றவை குறைவுள்ளவையென்றும் நாம் இலகுவாய் அறிந்து கொள்வோம். தென்னிந்தியாவில் பாடப்பட்டுவரும் ராகங்களும் அவைகளுக்குரிய சுரங்களும் அணுப்பிரமாணமும் தவறாமல் பரம்பரையாய் நாளது வரையும் கோயில் ஊழியக் காரர்களால் பேணப்பட்டு வந்திருக்கிறதென்றும் அதுவே கர்நாடக சங்கீதம் சுத்தமாயிருக்கிறதற்கு காரணம் என்றும் நாம் அறியவேண்டும். இக்கர்நாடகமுறையின் ரகசியம் தெரிந்து கொள்ளாமையினாலேயே சுருதியைப் பற்றி பலர் பலவாறாக புஸ்தகங்கள் எழுதவும் வாதஞ்செய்யவும் நேரிட்டது. மேல்காற்றினால் கிழக்கேபோன பட்சிகளும் சருகுகளும் கீழ்காற்றினால் மறுபடி மேற்கே போவதுபோல மற்றவர் கீதமும் காலதருமத்திற்குத்தகுந்தபடி அப்படியும் இப்படியும் பல மாறுதல்களை யடைந்தாலும் தமிழ்நாட்டின் சங்கீதம் ஒன்று மாத்திரம் மாறாமல் நிற்கிறதென்று அறிவோம். தமிழ் நாட்டில் வழங்கிவரும் பாடமுறைகள் சங்கீதத்தின் ரகசியம் யாவும் அறிந்து கொள்வதற்குப் போதுமானவையென்றும் அம்முறையைக்கொண்டு சங்கீத சாஸ்திரத்தின் முக்கியமான தத்துவங்களை கண்டுபிடிக்கவும் அதுபோலவே மற்றொன்று நூதனமாய் உண்டாக்கவும் கூடிய விதமாயிருக்கிறதென்று நாம் நிச்சயம் சொல்லுவோம். ராகங்களைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கும் இரண்டாம் புத்தகத்தில் இதன் விபரம் யாவம் தெளிவாகக் காணலாம். ஒருசொல்லால் விரிந்த பலசொல் மறைந்த ஒருசொல்லை விளக்கி நிற்பதுபோல சங்கீதத்தில் விரிந்த பல உருப்படிகள் சொல்லாமல் விட்ட சுருதி ரகசியத்தை விளக்கிக் காட்டிக்கொண்டிருக்கின்றன. கரண பரம்பரையாய் வழங்கிவரும் கர்நாடக ராகங்களின் அழகே அவ்விராகங்களின் ரகசியத்தையும் காட்டிக்கொண்டு நிற்கிறதென்று இதன்பின் பார்ப்போம். எரிகிற விளக்கை விட்டில் பூச்சி
|