விழுந்து கெடுத்து தானும் கெட்டதுபோலாகாமல் புதிதான தேசிக ராகங்களைக் கேட்டு சில அவாந்தர சுரங்களை கர்நாடகசங்கீதத்தில் கலந்து வழங்கும் கெடுதல்களை நீக்கி கர்நாடகமுறைப் படி தங்கள் கானத்தைக் காப்பாற்றிக்கொள்ளும்படி கர்நாடக சங்கீதம் பயிலும் கனவான்கள் யாவரையும் மிகவும் கேட்டுக்கொள்ளுகிறேன்.. பின்வரும் வாக்கியங்களில் இந்திய சங்கீதத்தின் இனிமையை மற்றவர்கள் அறிந்துகொள்ளாததற்குக் காரணம் கூறுகிறார். The Indian Empire by W. W. Hunter. P. III "Melodies which the Indian composer pronounces to be the prefection of harmony, and which have for ages touched the hearts and fired the imagination of Indian audiences, are condemned as discord by the European critic. The Hindu ear has been trained to recognise modifications of sound which the European ear refuses to take pleasure in. Our ears on the other hand, have been taught to expect harmonic combinations of its own. The Indian musician declines altogether to be judged by the few simple Hindu airs which the English ear can appreciate." "இராகங்களில் அதிக இனிமையுடையவை யென்றும், சிரேஷ்ட சுரப்பொருத்த முள்ளவையென்றும், நீண்ட காலங்களாக இந்தியருடைய மனதை உருகச்செய்து பரவசப்படுத்தினவை என்றும் யாவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டவைகள், சுரப்பொருத்தம் அற்றவையென்று ஐரோப்பியரால் தள்ளிவிடப்படுகின்றன. இந்தியருடைய காதுக்கு இனிமையென்றெண்ணப்படும் நுட்பமான சிறு சுரங்கள் ஐரோப்பியருடைய காதுகளுக்கு வெறுப்பாயிருக்கின்றன. நம்முடைய காதுகளோ ஐரோப்பியருடைய சுரங்களுக்கு மாறுபட்ட ஒற்றுமைச் சுரங்களையே கேட்டு ஆனந்திக்கும் பழக்கத்தையடைந்திருக்கின்றன. இந்து சங்கீதத்தின் சில இலேசான துண்டுகளை ஐரோப்பியர் இனிமையாயிருந்ததாக ஒப்புக் கொள்வார்கள். ஆனால் இந்து வித்வான்கள் இந்து சங்கீதத்தின் இனிமைக்கு இந்தச் சிறு துண்டுகள் சாட்சி என்று ஒப்புக்கொள்ளத்தயாராயில்லை." இந்திய சங்கீதம் வெகுநாளைக்கு முன்னுள்ளதென்றும் ஒவ்வொரு சுரமும் முன்மூன்று பிரிவுடையதாயிருந்ததென்றும் தென்னிந்திய சங்கீதம் வேதங்களை ஓதுவதற்கு மிக அனுகூலமாய் இருக்கிறதென்றும் பின்வரும் வசனங்களில் காணலாம்.. Hindu Music and the Gayan Samaj P.ii P. 36 (Kunte.) "It is now positively established by documentary evidence that at least 7,000 years before Christ, India had developed a system of musical notation, that the seven notes were scientifically arranged, each note being divided into three - the sharp, flat, and the proper note itself. All the incriptions as yet discovered, and the Sanskrit literature that has been brought to light, place this statement beyond doupt. This fact has a scientific side. Though all the world over, notes, the elements of music, are seven only, yet the great variety of modes and melodies differ in European and Indian music, which is either ancient or modern, Southern or Northen. The Southern or the Dravidian system is more Vedic than the Northern or Hindustani Dhanga. There is what is called a constant mode in Maharastra. This is the remnant of the system of singing vedic psalms. It consists of opening modulation, soft, steady and slow in its progress. This is followed by notes the pitch of which is high, the modulation is strong, varied and rapid in its flow. This is followed by a combination of both leading to agreeable cadences. In a treatise on music, which is at any rate as ancient as the third century before Christ, a connection between physiological condition of human blood in the course of a day, and the changes of temper which these conditions necessitate are explained." "குறைந்தபக்ஷம் கிறிஸ்து பிறக்க 7,000 வருஷங்களுக்கு முன் இந்தியாவில் சங்கீத சுரங்கள் எழுதும்முறை உண்டாயிருந்ததென்றும் சப்த சுரங்களும் சாஸ்திர விதிப்படி ஒழுங்காய்க் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன என்றும், ஒவ்வொரு சுரமும் மூன்று பிரிவுள்ளதாயிருந்தது. அதாவது சுரமும் சுரத்துக்குக் கொஞ்சம்
|