பக்கம் எண் :

126
தென்னிந்திய சங்கீதத்தில் தேசியக் கலப்பு வந்த விதம்.

கூடியசுருதியும் சுரத்துக்குக் கொஞ்சம்குறைந்த சுருதியுமாக மூன்று என்றும் எழுத்து ஆதாரங்கள் மூலமாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவரையும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிற சில எழுத்துகளும், கிரந்த நூல்களும் இதை ஒட்டியே ஸ்திரமாய்ப் பேசுகின்றன. இந்தக் கொள்கையானது சாஸ்திரசம்பந்தமுள்ளதாயும் இருக்கிறது. உலகமெங்கும் கானத்துக்கு ஆதாரமாகிய சுரங்கள் ஏழு என்ற சத்தியம் வழங்கி வந்தபோதிலும், இந்தியசங்கீதத்திலும் ஐரோப்பிய சங்கீதத்திலும் வழங்கப்படும் ஆரோகணங்களும் இராகங்களும் அநேகங்களாயும் ஒன்றுக்கொன்று அனந்த வித்தியாசமுள்ளவைகளாயும் இருக்கின்றன. இது விஷயத்தில், ஆதிமுறைகளோ, தற்கால முறைகளோ, வடதேசமுறைகளோ, தென்தேசமுறைகளோ எவையானாலும் ஒன்றுக்கொன்று வித்தியாசங்கள் அநேகமுள்ளவைகளா யிருக்கின்றன. தென்தேச அல்லது திராவிட சங்கீதமானது, வடதேச இந்துஸ்தானி டங்காவைவிட வேதங்களை ஓதுவதற்கு அதிக பிரயோசனமுள்ள தாயிருக்கிறதாகத் தெரிகிறது. மகாராஷ்டிரத்தில் மாறாத ஆரோகணம் (Constant mode) என்ற ஓர்முறையுண்டு, வேதத்திலுள்ள சங்கீதங்களை ஓதும்முறையினின்று மீந்த ஓர் முறையாம் இது. அது ஆரம்பத்தில் மெதுவான ஏற்றத்தாழ்ச்சியான பேதங்களாய் ஆரம்பித்து வரவர கம்பீரித்துப்போவதான ஓர்வித கோஷ்டிகானம், பிறகு வரவர உயர்ந்தசுரங்களுக்குப் பின் இரண்டுவித கானங்களும் ஒன்றுசேர்ந்து ஒருஅடி கானஅமைதலான முடிவுக்கு வருகிறது. கிறிஸ்துவுக்கு முன் மூன்றாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட ஓர் சங்கீதநூலானது ஓர் நாளின் பல நிமிஷங்களுள் மனிததேகத்தில் இருக்கும் இரத்த ஓட்டத்தின் நிலைக்கும் இதன் மூலமாய் மனிதகுணம் மாறும் நிலைக்கும் சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறது."

இதில் நாம் கவனிக்கவேண்டிய தொன்றுண்டு. ஸப்த சுரங்களும் மும்மூன்று பிரிவுகளுடையன வாயிருந்தனவென்றும், அதாவது சுரமும், சுரத்திற்குக் கொஞ்சங்கூடிய சுருதியும், சுரத்திற்குக் கொஞ்சம் குறைந்த சுருதியுமாக மூன்று என்றும் சொல்லுகிறார். இதை கவனிப்போமானால், எவ்வளவு கூடியிருந்த தென்றும் எவ்வளவு குறைந்திருந்ததென்றும் ஒரு கேள்வியுண்டாகும். சுருதிகளைப்பற்றிய சந்தேகம் இன்னும் அதிகப்படுமேயொழிய ஒரு நிச்சயத்திற்கும் வராது. சுரங்கள் ஏழுக்கும் முன்மூன்றாக 21 சுருதிகளாகின்றன. 22 என்றுசொன்ன சுருதிகளுக்கு இது விரோதப்படுமே. இப்படி நிச்சயமில்லாத வார்த்தைகளைச் சொல்லுவதே சுருதிகளைப்பற்றிப் பலபல அபிப்பிராயங்கள் உண்டாவதற்குக் காரணம். மேலும் தென்தேச அல்லது திராவிட சங்கீதமானது வேதங்களை ஓதுவதற்கு அதிகப் பிரயோசன முள்ளதாயிருக்கிறது என்கிறார். வடதிசை சாஸ்திர விற்பன்னர் ஒருவர் தென்னிந்தியாவின் சங்கீதம் வேதம் ஓதுவதற்கு ஏற்றதாயிருக்கிறதென்று சொல்லுவதை நாம் இங்கே கவனிக்கவேண்டும். தென்னிந்தியாவில் ராவணேஸ்வரன் ஸப்த சுரங்களைக்கொண்டும் சாமவேதத்தை கானம் பண்ணும் முறைக்கு முந்தினவனாயிருந்தானென்றும் அவன் தென்னிந்தியாவின் சமீபத்திலுள்ள இலங்கைக் கரசனென்றும் நாம் அறிவோம். ஸப்த சுரங்களோடு சேர்ந்து வழங்கிய பல சுருதிகளும் பூர்வமுள்ள தமிழ் நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இதைக் கொண்டு, பூர்வமான வேதகானத்திற்கும் மற்றும் கானத்திற்கும் தென்னிந்தியாவே முந்தினது என்று சொல்ல நியாயமிருக்கிறது.

2, தென்னிந்திய சங்கீதத்தில் தேசியக் கலப்பு வந்த விதம்.

தென்னிந்திய சங்கீதமானது வடதேசத்திற்குப் பலராலும் கொண்டு போகப்பட்டதென்றும், மற்றவர்களால் அது கையாளப்படுங் காலத்தில் அவரவர்கள் பாஷைக்கும் தேசத்துக்கும் தகுந்தபடி பலபேதங்களையும் அடைந்ததென்றும் பின்வரு வசனங்களில் காணலாம்.

Oriental Music, P. 82 P. 30 Chinnasawmi Moodr., M.A.

"Considering the prodigious number of nationalities and the diversity of provincial dialects in existence throughout the length and breadth of the Indian Empire, it should be no matter for astonishment if there be found any number of heterogeneous systems, as well as incongruous