பக்கம் எண் :

127
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

classifications in standard works forming the musicalliterature of the land. The primary distinction is into two classes, Marga (celestical) and Desi (terrestrial); the latter is now broadly divided into Hindustani and Karnata, the former representing the school established by Hanuma,. and the latter the much more ancient and authentic system introduced by Narada, the inventor of all arts and sciences. It is clear however that local tastes and methods of training have considerably upset the theories originally propounded.

In the extreme North, there is a system of six Ragas and thirty-six Raginis which are grouped together differently by different authors; in the west of India the divergencies are still wider, through the origin is traceable to the same source; in the extreme south only thirty-two are recognised as principal Ragas, of which 8 are classed as Purusha and 24 as Stri, while a few more are designated by other fanciful names. Another classification is into 32 ancient and 42 recent Ragas. All these are manifestly incomplete. Of late the Hindustani element (which has itself much deteriorated owing to foreign admixture) has been ingrafted on the Dravidian modes to an alarming extent, so that it is a matter of no small difficulty ot distinguish the purely classical from the adulterated systems. The tendency is at present to demolish all system and to sail clear of all trammels rules and regulations imposed by the ancient framers of the scinece; but it is evident that this is not the proper method of effecting reform or insuring progress. Each system should be taken up separetely by itself, and which its true original and individual character is jealously maintained, it should be divested of all uneless encumbrances and incrustations which obstruct or retard improvement."

கீழ்த்திசை சங்கீதத்தின் விசேஷ அம்சங்களும் அதைப்பற்றிய பல
அபிப்பிராயங்களும்.

"இந்திய ராஜ்யமானது அநேக ஜாதியார் நிறைந்துள்ளதாயும், மாகாணங்கள்தோறும் வெவ்வேறு பாஷைகள்வழங்குவதாயும் இருப்பதால், சங்கீத சாஸ்திரவிஷயத்தில் பலவித வித்தியாசங்களுள்ள பலமுறைகளும் சங்கீத சாஸ்திரப்புஸ்தகங்களை அட்டவணை முறையாய் ஒழுங்குபடுத்த முயன்ற முக்கிய நூல்களில் அநேகவித்தியாசங்களும் ஏற்பட்டு யாவும் குழப்பமாய்க்காணப்படுவது அவ்வளவு ஆச்சரியமான காரியமல்ல. ஆதியில் சங்கீதமானது இரண்டு பிரிவுள்ளதாகக் காணப்படுகிறது. அவை மார்க்கம் அல்லது தேவகானம், தேசிகம் அல்லது இவ்வுலககானம் என்பவைகளாம். இவைகளில் தேசிகமானது இந்துஸ்தானி, கர்நாடனம் என்ற இரண்டு பிரிவுகளாகக்காணப்படுகிறது. அவற்றுள் முந்தினது ஹனுமாரால் ஏற்படுத்தப்பட்டமுறையென்றும், பிந்தினது எல்லா சாஸ்திரத்துக்கும் ஆதிகாரணராகிய நாரதரால் ஏற்படுத்தப்பட்டமுறையென்றும் கொள்ளப்படுகிறது. இந்தப்பிந்தினமுறை முந்தினதைவிட பூர்வீகமென்றும், முற்றிலும் சரியென்று நம்பக் கூடியதென்றும் கொள்ளப்படுகிறது. ஆனாலும், ஆதியில் ஸ்தாபித்த முறைகள், இடபேதத்தினாலும் சொல்லிக்கொடுக்கும் முறைபேதத்தினாலும் அதிக வித்தியாசமுள்ளவைகளாய்ப் போயின என்று நன்றாய் வெளியாகிறது.

வடதேசத்தில், ஆறு இராகங்களும் 36 ராகினிகளும் அடங்கிய ஒருமுறை இருப்பதாகவும், அவை பல வித்வான்களால் பலவிதமாய் அடுக்கிச் சொல்லப்படுவதாயும் தெரிகிறது. மேற்குத்தேச சங்கீதமோ இதே முறையிலிருந்து உண்டானபோதிலும், வித்தியாசங்கள் இன்னும் அனந்தம் உடையன. தென்னாட்டில் தாய்ராகங்கள் 32 தான் என்றும், அவைகளில் 8 புருஷராகங்களென்றும், 24 ஸ்திரீ ராகங்களென்றும், சொல்வதுடன் மற்றவைகளுக்கு அநேகவேடிக்கைப்பெயர் கொடுத்தும் அழைக்கிறார்கள். இன்னொருமுறையென்னவென்றால், பூர்வராகங்கள் 32 என்றும், தற்காலராகங்கள் 42 என்றும் பிரிப்பது. ஆனால் இவையெல்லாம் முடிவற்ற வகுப்புகளேயென்று பரிஷ்காரமாய்த் தெரிகிறது.

தற்காலத்தில் வேற்றுச் சங்கீதத்தின் கலப்பால் அதிக வித்தியாசமடைந்திருக்கிற இந்துஸ்தானி சங்கீதம் திராவிட சங்கீதத்தோடு அபரிமிதமாய்க் கலந்திருப்பதானது, திராவிடசங்கீதத்துக்கு நேரிடக்கூடிய அபாயத்தையும் கலப்பில்லாத பூர்வசங்கீதத்துக்கும் கலப்புள்ள தற்கால சங்கீதத்துக்குமுள்ள வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாமைக்கு ஏதுவாயிருக்கிறது. இவ்விதக் கஷ்டங்களிருப்பதால் தற்காலத்தில் யாவரும்