செய்கிறதென்னவென்றால், எல்லாமுறையையும் தவிர்த்து முற்காலத்து வித்வான்களால் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குகள் எல்லாவற்றையும் ஒழித்துவிடுவதே. ஆனால் இப்படிச்செய்வது சீர்திருத்தஞ் செய்தலுக்கும் விருத்திசெய்தலுக்கும் அழகல்ல. ஆனால் செய்யவேண்டியது என்னவென்றால், ஒவ்வொருமுறையையும் தனித்தனியே எடுத்துக் கொண்டு, அதனுடைய விசேஷித்த ஆதி அம்சத்தைவிட்டு நிலைபெயரவிடாமல் அதின் விருத்திக்கு இடையூராயிருக்கக்கூடிய பிரயோசனமற்ற வழிவகைகள் யாவையும் விலக்கி, அவைகளைச் சீர்திருத்த வேண்டியதேயாம்." இதைக் கவனிக்கையில் மார்க்கம் என்கிற பிரிவுகள் இரண்டும் சங்கீதத்திலிருந்ததென்றும் மார்க்கம் என்பது தேவகானமென்றும், தேசிகம் என்பது இந்துஸ்தானி கர்நாடகமென்ற இரண்டு பிரிவுகளுள்ளதென்றும், முந்தினதாகிய இந்துஸ்தானி அனுமாரால் செய்யப்பட்டதென்றும், பிந்தினதாகிய கர்நாடகம் நாரதரால் ஏற்படுத்தப்பட்டதென்றும் சொல்லுகிறார். எல்லாச் சாஸ்திரங்களுக்கும் ஆதிகாரணமாகிய நாரதரால் ஸ்தாபிக்கப்பட்ட முறை சரியானதென்றும், பூர்வீகமானதென்றும், இடபேதங்களினால் மாறுதல் அடைந்ததென்றும் சொல்லுகிறார். ஆனால் மார்க்கம் என்ற முறையே ரிஷிகளால் உண்டாக்கப்பட்டதென்றும், அதனையே அநுமார், நாரதல், ராவணேஸ்பரன் முதலியவர்கள் கானம் செய்ததென்றும், அதுவே சரியான முறையென்றும், தென்னிந்தியாவின் சங்கீதமாகிய கர்நாடகம் சுத்தம் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியுள்ளதென்றும் நாம் அறியவேண்டும். அநுமாரால் இந்துஸ்தானி உண்டாயிற்றென்று சொல்லுவது முற்றிலும் ஒவ்வாது. நாரதரால் செய்யப்பட்ட மார்க்க முறை வட தேசத்தில் சென்று தேசங்கள்தோறும் வெவ்வேறு சுரங்கள் கலக்கப்பெற்றதினால் தேசிகமென்று பெயர்பெற்றது. சுரஞானமில்லாத சிறுவர்களும் ஸ்திரீகளும் பிறகும் தேசிக முறையை அனுசரிக்கலாமென்றும் சொல்லப்படுகிறது. தேசிகம் என்பது சங்கீத இலக்கணம் தவிர்ந்து வழங்கிய வழுவமைதியான ஒரு முறையென்று நாம் ஞாபகத்தில் வைக்கவேண்டும். மேலும் தென்னாட்டில் பூர்வகாலத்திலேயே 11,991 பன்களிருந்ததாக சிலப்பதிகாரத்தின் பழைய உரைகாரர் சொல்லியிருக்கிறார். தென்னாட்டில் பிரதிமத்திமத்தோடு பாடப்படும் கல்யாணி வட நாட்டிற்குப்போய் கிரமம்மீறி பிரதிமத்திமத்தோடு வேறு இரண்டு மத்திமங்களையும் அப்படியே காந்தார நிஷாதங்களிலும் இரண்டு இரண்டு சுரங்களையும் சேர்த்துக்கொண்டு தென்னாட்டுக்குவர, தென்னாட்டிலுள்ளோர் அதை மிகவும் அழகாயிருக்கிறதென்று பழகுகிறார்கள். இப்படியே ஆனந்த பைரவி, காம்போதி, தோடி முதலிய ராகங்களும் வரவரக் கலப்புற்றதாய் மார்க்க முறையை இழந்து, முற்றிலும் தேசிகமாகி, கர்நாடக சங்கீதத்தின் உயர்வைக் கெடுக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன. இப்படிச் சுரங்கள் கலக்கக் கலக்க, கர்நாடக ராகங்கள் யாவும் ஒரே ராகம் போல் தோன்றும் படியாகிவிடும். இந்துஸ்தானி முதலிய கீதங்களில் தற்காலத்தில் நாம் சொல்லும் குறைகளையே கர்நாடக சங்கீதத்திற்கும் சொல்ல நேரிடும்., கர்நாடக சங்கீதம் மிகவும் ஒழுங்குள்ள மேலான சங்கீதமென்றும், பௌத்த சங்கீதமும் மகம்மதிய சங்கீதமும் தேசிகமென்று வழங்கிவந்தனவென்றும் பின்வரும் வாக்கியங்களில் காணலாம்.. Hindu Music and the Gayan Samaj, P.I. P. 8. "The Margi System, although preserved still in Sanskrit works on Music, owing to want of cultivation, political influence, and other adventitious circumstances has almost become extinct. Desi with its numerous ramifications is the system now obtaining in India. Music is divided into Nibadha and Anibadha, that set in words and that not, the former being Margi and the latter Desi. The Desi System first acquired importance from the Buddhist musicians, and received fuller development from Mussulmans who introduced khyal from the Hindu Dhruvapada system and from
|