பக்கம் எண் :

129
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

that the Tappa. Besides these, there is the southern Indian system, distinct in itself, and constituting and important section of the Indian musical system, termed the Carnataka system."

"மார்க்கம் என்னும் முறையானது, சங்கீத கிரந்த நூல்களில் இந்நாள் வரைக்கும் காணப்பட்டபோதிலும், அப்பியாசம், துரைத்தனத்தாரின் ஆதரிப்பு முதலிய விருத்திக்குரிய ஏதுக்கள் இல்லாமல் பெரும்பாலும் அருகிப்போய் விட்டது. ஆனால், தேசிகமும் அதில் கிளைத்த அநேக முறைகளுந்தான் தற்காலம் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்றன. சங்கீதமானது நிபதம், அநிபதம் என்று இருவகைப்படும். நிபதம் சாகித்தியமுடையது. அநிபதம் சாகித்தியமற்றது. முந்தினது மார்க்கம், பிந்தினது தேசிகம். தேசிகமுறையானது முதல்முதல் பௌத்த சங்கீத வித்வான்களால் பெருமையடைந்து பிறகு முகமதியரால் பூரணம் பெற்றது. மகம்மதியர் இந்து துருவபத முறையினின்று கியால் என்னப்பட்ட முறையையும், கியால் என்னும் முறையினின்று டப்பா என்னும் முறையையும் ஏற்படுத்தினார்கள். இந்த முறைகளையல்லாமல் தென்னிந்திய கர்நாடக முறையென்று ஒன்றும் உண்டு. இது மற்றவைகளோடு கலவாமல் இந்திய சங்கீத முறைகளில் வெகு முக்கியமான ஓர் முறையால் விளங்கிக்கொண்டிருக்கிறது."

மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில், மார்க்கம் என்னும் முறை அப்பியாசிப்பாரில்லாமல் அளவாகவே நின்றுவிட்டதென்றும், தேசிகம் பலவாறாகக் கிளைத்து விருத்தியாகிவிட்டதென்றும் தெரியவருகிறது. தென்னிந்திய சங்கீதத்தைப் பூர்ணமாயறியாத பௌத்தரும் அவர்க்குப் பின் மகம்மதியரும் தேசிகத்தைப்படித்து வந்தார்கள். சுரஞானமில்லாமல் பல சுரங்கள் கலந்ததேசிகம் அதிகமாய் வழங்கும் வடநாட்டிலுள்ள ஒருவர், மற்றவைகளோடு கலவாத கர்நாடக சங்கீதம் என்னும் ஒரு முக்கிய முறையிருக்கிறதென்று சொல்லுவதை நாம் கவனிக்கவேண்டும். மேலும், அவர்கள் வழங்கிவருகிற துர்பத், தில்லானா, கியால், டப்பா, டோமரி முதலிய கீத முறைகள் மிகச் சுலபமானவையென்று நாம் அறிவோம். ஆனால் கர்நாடகத்தில் வழங்கிவரும் கீதம், தானவர்ணம், சௌக்கவர்ணம், கீர்த்தனம், பல்லவி, ராகமாலிகை முதலியவை சங்கீத சாஸ்திரத்துக்குப் பொருந்தும்படி செய்யப்பட்டு மிகுந்த தாள அமைப்புடன் தேர்ச்சியடைந்திருப்பவை என்று நாம் அறிவோம்.

மகம்மதியரால் விருத்திக்குக் கொண்டுவரப்பட்ட இந்துஸ்தானி என்னும் தேசிகமுறையானது, தென்னிந்திய சங்கீதத்தினின்றே உண்டான முறையென்றும், தென்னிந்தியாவிலிருந்து வடநாட்டுக்குப் போனதென்றும், தென்னிந்திய சங்கீத வித்வான்கள் அல்லாவுடீன் என்பவரால் சிறைகளாக வடநாட்டுக்குக் கொண்டுபோகப்பட்டார்களென்றும், அவ்வாறு கொண்டுபோகப் பட்டவர்களில் தக்ஷணத்தைச் சேர்ந்த சங்கீத வித்வான் நாயக் கோபால் என்பவர் ஒருவரென்றும் பின்வரும் வாக்கியங்களில் காண்கிறோம். இதில்கண்ட நாயக் கோபால் என்பவர் சுமார் 400 வருஷங்களுக்குமுன் தாளார்ணவம், ராககதம்பம், பிரபந்தம் முதலிய நூல்கள் செய்தவரென்று சாரங்கதேவர் நூலுக்கு உரையெழுதிய கல்விநாதர் சொல்லுகிறாரென்று சுப்பாரமதீக்ஷதர் கூறுகிறார். இவர் சுருதியைப்பற்றி நன்றாய்த் தெரிந்தவரென்று சதுர்தண்டி பிரகாசியையெழுதிய வேங்கடமாகி சொல்லுகிறார். இவர் தீபகம் என்னும் ராகம் பாடி ஒருவரும் ஏற்றாமலே ஒரு விளக்கை எரியும்படி செய்தாரென்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

Universal History of Music, P. 84

"The Mahomedans as a ruling nation came in contact with the people of India for the first tune in the 11th century, and since then a change has been worked into the music system of the country. The Mahomedans did not encourage the theory of the art, but they patronized practiced musicians and were themselves instrumental in composing and introducing several styles of songs or devising new norms of musical instruments. It is a XXXX by Mahomedan historians of the period that when Dacca was invaded by Allaudin in 1294 and the conquest of the south of India