was completed (1310) by his Mogul general Malik Kafer, music was in such a flourishing condition, that all the musicians and their Hindu preceptors were taken with the armies, and settled in the North. It is said that the celebrated Persian poet and musician Amir Khosru came to India during the rule of Allaudin and defeated a contest the musician of the South, Nayak Gopal,. who had come to Delhi with a view to challenge the musicians of the court. Amir Khosru is reported to have given the name of Satar to the Trilantri Vina of the classic days and to have divided the Rags into twelve Mokanis which were subsequently subdivided by other Mahomedan musicians into 24 sobhas and 48 Guswas." "மகம்மதியர் ராஜாங்கத்திற்குரிய ஓர் ஜாதியாராய் இந்துக்களுடன் முதல் முதல் கலந்தது 11-ம் நூற்றாண்டில்தான். அது முதல் இந்திய சங்கீதத்தில் ஓர்விதமாறுதல் உண்டாக ஆரம்பித்தது. மகம்மதியர் சங்கீத சாஸ்திரத்தை அதிகமாய் அபிவிர்த்திக்குக்கொண்டுவராமல், சங்கீத வித்தியாப்பியாசத்தை ஆதரித்து வந்ததாகத்தெரிகிறது. அவர்கள் தாங்களே சாகித்தியம், கவிகள் செய்ததாகவும் அநேக புதுவிதமான பாட்டுகளை உண்டு பண்ணினதாகவும், அநேக புதுமாதிரியான வாத்தியங்களை உண்டு பண்ணினதாகவும் தெரிகிறது. 1,294-ம் வருஷத்தில் Daeea நகரம் அல்லாவுடின் என்பவரால் முற்றுகைபோடப்பட்டு, 1,310-ம் வருஷத்தில் தென்னிந்தியாவானது அவருடைய தளகர்த்தனாகிய மாலிக் காபர் என்பவனால் பூரணமாய் ஜெயிக்கப்பட்டபோது, சங்கீதமானது வெகு திருப்தியான நிலைமையில் இருந்ததாகவும், எல்லாச்சங்கீத வித்வான்களோடு அவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த இந்து வித்வான்களையும் சிறைபிடித்துக்கொண்டுபோய் வடக்கே குடியேற்றினதாகவும் சொல்லப்படுகிறது. பேர்போன பாரசீககவியும் சங்கீத வித்வானுமான அமீர்குஸ்ரு என்பவன் அல்லாவுடின் அரசாண்டசமயத்தில் இந்தியாவுக்கு வந்ததாகவும், சமஸ்தான வித்வான்களின் திறமையைச்சோதிக்க வேண்டுமென்று டில்லிக்கு வந்திருந்த தக்ஷணத்தைச்சேர்ந்த நாயக்கோபால் என்பவனை ஜெயித்ததாகவும் சொல்லப்படுகிறது. அமீர்குஸ்ரு என்பவன் ஆதிகாலத்து திரிதந்திரி விணைக்கு satar என்னும் பேர்கொடுத்ததாகவும் அவன் இராகங்களை 12 மோகங்களாகப் பிரித்ததாகவும், அவைகள் பிற்பாடு மற்ற மகம்மதியாரால் 24 சோபங்களாகவும் 48 குஸ்வங்களாகவும் பிரிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.." இதைக்கொண்டு வடநாட்டில் தென்னிந்திய சங்கீதத்தைப்போல் உயர்வுள்ள சங்கீதமுறை இல்லையென்று கண்ட மற்றவர் தென்னாட்டிலிருந்து வித்வான்களைக்கொண்டுபோய் வடநாட்டில் குடியேற்றி, சங்கீதத்தை விருத்தி செய்தார்களென்று எண்ண இடமிருக்கிறது. இந்தியாவிற்குப் படையெடுத்து வந்த மகா அலெக்சாந்தரும் இந்தியாவிலிருந்து சங்கீத வித்வான்களையும் மற்றும் சில வித்வான்களையும் கூட்டிக்கொண்டு போனான் என்று பரம்பரையாய்ச் சொல்லப்படுகிறது.. வடஇந்தியாவில் வழங்கிவந்த இந்திய சங்கீதம் மகம்மதியருடைய காலத்தில் மிகவும் ஈனஸ்திதியடைந்து இந்துஸ்தான் என்ற பெயருடன் வழங்கிவந்தது என்பதைப் பின்வரும் வாக்கியங்களில் அறியலாம். The Music and the Musical Instruments of Southern India. by C.R.Day, P.5 "In later years music became a distinct trade, especially under Musalman rulers and passed into the hands of the lower orders and the unlearned; and to this cause operating through a long succession of years, the differences between the Hindustani and Karnatic systems must be in a great measure attributed." "பிற்காலத்தில் சங்கீதமானது விசேஷமாய் மகம்மதிய அரசாட்சியின் காலத்தில், ஒரு வியாபாரம் போல ஆகி, கீழ்ஜாதியாருடைய கையிலும் படிப்பறியாதவர்கள் கையிலும் போய்சேர்ந்தது. இந்தவிதமாய் அநேக ஆண்டுகள் கழியவே அநேக மாறுதல்கள் உண்டாய்விட்டன. இந்த மாறுதல்களே அநேகமாய் கர்நாடக சங்கீதத்துக்கும் இந்துஸ்தான் சங்கீதத்துக்குமுள்ள வித்தியாசத்திற்கு ஆதிகாரணம்."
|