பக்கம் எண் :

278
தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தைப் பற்றிய சில முக்கிய குறிப்புகள்

9. தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தைப் பற்றிய
சில முக்கிய குறிப்புகள்

இச் சங்கம் ஏற்படுத்துவதற்கு வேண்டிய முக்கிய அவசியங்களை யோசிக்குங் காலத்தில் அரிகேசவநல்லூர் மகா---ஸ்ரீ முத்தையா பாகவதர் அவர்கள் முக்கிய உதவியாயிருந்தார்கள். பல விதமான சங்கடங்கள் நேரிட்டாலும் ஊக்கத்தோடு நடத்திவர விஜயநகரம் வீணை வித்துவான் மகா---ஸ்ரீ வேங்கடரமணதாஸ் அவர்கள் மிகுந்த ஆதரவு செய்தார்கள். என் பிள்ளைகளுக்கு கர்நாடக சங்கீதத்தை வாய்ப்பாட்டிலும் பிடிலிலும் பாடும்படி மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்ட தஞ்சாவூர் மகா---ஸ்ரீ பஞ்சாபகேச பாகவதர் அவர்களும், இங்கிலீஷ் மீயூசிக் (English Music) சொல்லி வைத்த தஞ்சாவூர் மகா---ஸ்ரீ பிச்சைமுத்துப் பிள்ளை B. A., L. T., அவர்களும், வீணை சொல்லி வைத்த தஞ்சாவூர் மகா---ஸ்ரீ வெங்கிடாசலமையர் அவர்களும் ஒவ்வொரு கான்பிரன்சிலும் ஒவ்வொரு சபை துவங்கும் பொழுதும் முடியும் பொழுதும் சபையோர் கேட்டு ஆனந்திக்கும்படி என் பிள்ளைகளோடு பாடி சபையைச் சிறப்பித்து வருகிறார்கள். சங்கத்தின் நோக்கத்திற்கிணங்க குறிக்கப்பட்ட விஷயங்களைத் தங்களால் கூடியவரை பிரயாசப்பட்டு இராகங்களை மிகுந்த உற்சாகமாய்ப் பாடிக்காட்டியும் அதில் வரும் நுட்ப விஷயங்களை ஊக்கமாய் விசாரித்தும் வருகிறார்கள். சங்கத்தில் வந்திருந்தவர்களுக்கு வேண்டிய முக்கிய உதவிகளை மகா---ஸ்ரீ V.இராமையா காரு B. A. அவர்கள் மிகுந்த சிரத்தையாடு செய்து வருகிறார்கள்.

கர்நாடக இராகங்களில் வரும் சுருதிகளைப் பற்றி விசாரிக்கையில் கர்நாடக சங்கீதத்திற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத துவாவிம்சதி சுருதி, என் ஆர்மானிக் ஸ்கேல், (Enharmonic Scale) போசான்கே (Bosanquet) 53, கிலேமெண்ட்ஸ் (Clements) 27 போன்ற பல முறைகள் ஆராய்ச்சிக்கு வந்திருக்கின்றன. இதனால் சற்று கால தாமதம் போல் தோன்றினாலும் தென்னிந்திய சங்கீதத்தில் வரும் சுருதிகளை அறிவதற்கு முன் மற்றவர் சொல்லும் முறைகளையும் ஆராய்வது நல்லதென்று நினைத்தே பூரணமாய் விசாரணை நடந்து வருகிறது. அநேகர் தாங்கள் பாடிக் கொண்டிருக்கும் சிறந்த கீதத்தின் சுருதிகளை அறிந்து கொள்ள பல வழியாகவும் விசாரணை செய்து வருகிறார்கள். கர்நாடக சங்கீதத்தைப் பற்றிய பல விஷயங்களிலும் பல பேர் விசாரிக்கவும் சபையில் சேரவும் ஆதரிக்கவும் எண்ணமுடையவர்களாயுமிருக்கிறார்கள். பரோடா திவான் மகா---ஸ்ரீ மாதவராவ் C. I. E. அவர்களும், பாலக்காடு மகா---ஸ்ரீ இராமகிருஷ்ணையர் B. A., B. L., Retired Sub-Judge அவர்களும், கும்பகோணம் மகா---ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஐயர் B. A., B. L., Retired Sub-Judge அவர்களும், சங்கீத சங்கத்திற்குத் தலைமை வகித்து சபையோரை உற்சாகப்படுத்திப் பல அரிய விஷயங்களையும் போதித்தார்கள். பாப்ப நாடு ஜமீந்தார் மகா---ஸ்ரீ சாமிநாத விஜயதேவர் அவர்கள், பூண்டி மகா---ஸ்ரீ அப்பாசாமி வாண்டையார் அவர்கள், உக்கடை மகா---ஸ்ரீ ராவ் பகதூர் அண்ணாசாமித் தேவர் அவர்கள், மகா---ஸ்ரீ K. V. ஸ்ரீநிவாச ஐயங்கார் B. A., L. T., Dy. Collector அவர்கள், மகா---ஸ்ரீ திருவேங்கடாச்சாரியார் அவர்கள், மகா---ஸ்ரீ கோதண்டராமானுஜலு நாயுடு B. A., B. L., Sub-Judge அவர்கள், மகா---ஸ்ரீ சேஷையர் B. A., Dy. Collector அவர்கள் மகா---ஸ்ரீ ராவ் சாகேப் திரவிய நாடார் B.A., Dy. Collector அவர்கள், மகா---ஸ்ரீ Y. V. சீனிவாச ஐயர் B. A., Dy. Collector அவர்கள், மகா---ஸ்ரீ விஜயராகவாச்சாரியார் M. A., Post Master அவர்கள், மகா---ஸ்ரீ ராவ் பகதூர் K. S. சீனிவாச பிள்ளை அவர்கள், அரித்துவாரமங்கலம் மகா---ஸ்ரீ கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் அவர்கள் போன்ற மற்றும்