பக்கம் எண் :

284

கடவுள் துணை.

கருணாமிர்த சாகரம்.

முதல் புஸ்தகம்.

2-வது பாகம்.

இருபத்திரண்டு சுருதிகள்.

சிறப்புற்றோங்கிய நம் இந்தியாவில் சுருதிகளைப் பற்றிச் சொல்லும் ஒவ்வொருவரும் சாரங்கதேவர் சொல்லிய துவாவிம்சதி சுருதிகள் 22 இவை தான் என்றும், இவைகளாயிருக்கலாமென்றும், இவைகளாயிருக்குமென்று நாம் எண்ணலாமென்றும், நாம் நிச்சயிக்கலாமென்றும் சொல்வதினாலும், தென்னிந்திய சங்கீதவித்துவான்களில் சிலரும் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் 22 என்றும், சாரங்கருடைய அபிப்பிராயம் இது தான் என்றும் சொல்வதினாலும், முதல் முதல் துவாவிம்சதி சுருதிகளைப் பற்றி மற்றவர் சொல்லும் அபிப்பிராயங்களையும் சாரங்கர் துவாவிம்சதி சுருதியைப் பற்றிச் சொல்லும் அபிப்பிராயத்தையும் ஆராய்ச்சி செய்து, அவைகளின் முடிவு தெரிந்து கொண்டு அதன்பின் கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளைப் பார்க்க வேண்டும்.

சாரங்கதேவரைப் பற்றியும் சுருதியைப் பற்றி அவர் சொல்லிய
சூத்திரங்களைப் பற்றியும் சில குறிப்புகள்.

சங்கீத ரத்னாகரம் எழுதினவர் சாரங்கதேவர், இவர் காஸ்மீர (Kashmir) தேசத்தில் பிறந்தவர். வருணகணரிஷி குலத்தவர். கி. பி. 1210-ம் வருஷமுதல் 1247-ம் வருஷம் வரை தௌலதபாத் (near Aurangabad in Hyderabad) அல்லது தேவகிரியில் ஆண்டு கொண்டிருந்த சிம்மணராஜன் காலத்திலிருந்தவர். இந்தச் சோம ராஜாவினுடைய கேட்டுக் கொள்ளுதலுக்கிணங்கி இந்நூல் செய்ததாகத் தோன்றுகிறது. இவர் தம் காலத்தில் வழங்கி வந்த சங்கீதத்துக்குரிய அம்சங்கள் யாவையும் சமஸ்கிருதத்தில் வெகு நன்றாக எழுதி