இருக்கிறார். இந்நூலில் சுருதிகளைப் பற்றித் தெரிய விரும்பும் யாவரும் அறிய வேண்டிய விபரம் சொல்லப்படுவதினாலும், இது பழமையாக எண்ணப்படுவதினாலும், சுருதிகளைப் பற்றி இவர் என்ன சொல்லுகிறார் என்று தெரிந்து கொள்வது முதல் கடமையாகும். இவர் செய்த சங்கீதரத்னாகரத்தில் சுர அத்தியாயத்தில் சொல்லப்படும் சில சூத்திரங்களின் கருத்தை உள்ளது உள்ளபடியே மொழி பெயர்த்து இங்கு எழுதுகிறேன். "இரண்டு வீணை தயார் செய்து கொள். ஒவ்வொன்றுக்கும் 22 தந்திகள் போடு. அதில் ஒரு வீணையில் முதல் தந்தியில் உன்னால் கூடிய ஆரம்பநாதம் வரும்படி வை. அதன் கீழ் வேறுநாதமிருக்கக்கூடாது. அதன் மேல் கொஞ்சம் கூடுதலாக 2-ம் தந்தியை அமைத்துக் கொள். இரண்டு தந்திக்கும் நடுமத்தியில் வேறு நாதம் உண்டாகாதபடியிருக்கட்டும். இதே பிரகாரமாக ஒன்றின்மேலொன்றாய் சுருதி சேர்த்துக்கொள். இப்படி மேல் தந்திகள் போகப் போக ஒன்றுக்கொன்று தீவிரமாகும். இப்படி இரண்டும் தயார் செய்து கொள். அதில் ஷட்ஜமம் 4 சுருதி கொண்டது. இதில் நாலாவது சுருதியை ஷட்ஜமமாக வைத்துக்கொள். ரிஷபத்திற்கு 3 சுருதி, 5-வது 6-வது 7-வது தந்திகளில் ரிஷபம் நிற்கும். காந்தாரத்திற்கு 2 சுருதி, 8-வது 9-வது தந்திகளில் வரும். மத்திமத்திற்கு 4 சுருதி, 10, 11, 12, 13-வது தந்திகளில் நிற்கும். பஞ்சமத்திற்கு 4 சுருதி, 14, 15, 16, 17-வது தந்திகளில் தொனிக்கும். தைததத்திற்கு 3 சுருதி, 18, 19, 20-வது தந்திகளில் பேசும். நிஷாதத்திற்கு 2 சுருதி, அதுவும் 21, 22-ல் முடிகிறது. இவற்றில் ஒன்று துருவ வீணை, மற்றொன்று சல வீணை என்று வைத்துக்கொள். அதில் சல வீணையை நான் சொல்லுகிறபடி மாற்று. 4-வது ஷட்ஜமத்தின் பின்னுள்ள ஷட்ஐமத்தின் 3-வது சுருதியிலிருந்து முன் கிரமப்படி சப்த சுரங்களை வைத்தால், ஒரு சுருதி குறையும். இரண்டாவது 2 சுருதி குறைத்துக் கொண்டு போக க வும் நி யும் ரிஷப தைவதத்தின் சுருதிகளில் ஒன்றை அடையும். மூன்றாவது 3 சுருதி குறைத்துக் கொண்டுபோக ரிஷப தைவைதம் ஷட்ஜம பஞ்சமத்தின் 4 சுருதியைப் பெறும். 4 சுருதி மாற்றும்போது துருவ வீணையிலுள்ள நி, க, ம வில் சல வீணையின் ச, ம, ப லயத்தை அடைகிறது. அதாவது 22-ல் ஷட்ஜமமும் 9-ல் மத்திமமும், 13-ல் பஞ்சமமும் ஆரம்பிக்கும். இந்த நாலுவிதம் சுருதி குறைப்பதினால் துருவ வீணையிலுள்ள சுரங்களின் லயத்தையடைகிறது. இதினால் சுரங்களின் கணக்கு அறியப்படும். இப்படிப்பட்ட சுருதிகளிலிருந்தும் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் சுரங்கள் உண்டாகின்றன." இவ்விடத்தில் சங்கீத ரத்னாகரருடைய சூத்திரங்களை அவற்றிலுள்ளபடியே அர்த்தம் செய்திருக்கும் கிளமெண்ட்ஸ் (Mr. Clements)அவர்களின் சில வாக்கியங்களையும் இங்கே எழுதுவது நல்லதென்று தோன்றுகிறது. சங்கீத ரத்னாகரர் துவாவிம்சதி சுருதிகளைப் பற்றிச் சொல்லிய சில சூத்திரங்களுக்கு Mr. கிளமெண்ட்ஸ் I. C. S. எழுதிய அர்த்தத்தின் மொழி பெயர்ப்பு. Introduction to the Study of Indian Music by E. Clements P. 53. THE SANGIT RATNAKAR "Take two Vinas with 22 wires each and tune as follows. Let the first wire give the lowest possible note. The next a note a little higher and so on, so that between the notes given by any two adjacent wires a third note is impossible. These successive notes are the Srutis. Sa will stand on the fourth wire, being a svara of four Srutis; ri will be on the third wire counting from the fifth; ga which has only two Srutis will fall on the second, counting from the eighth; ma being of four Srutis on the fourth, counting from the tenth; Pa on the fourth, counting from the fourteenth; Dha on the third after pa; ni on the second after Dha; so Ni will fall on the twenty-second Sruti."
|