பக்கம் எண் :

288
சகஸ்திரபுத்தி சொல்லியிருக்கும் 22 சுருதியின் முறை.

முதலாவது.

I. சாரங்கர் சுருதி முறைப்படி அளவில் ஒத்திருக்கும் முதல் வகுப்பு.
சகஸ்திரபுத்தி அவர்கள் சொல்லியிருக்கும் 22 சுருதியின் முறை.

தற்காலத்தில் பூனா காயன சமாஜத்தின் Honorary Secretaryயும் நம் இந்திய சங்கீதம் மிகுந்த விருத்தியடைய வேண்டுமென்று மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டவருமாகிய சகஸ்திரபுத்தி சுருதியைப் பற்றி எழுதிய அபிப்பிராயம் பின்வருமாறு.

Hindu Music and the Gayan Samaj. Part ii, P. 13.

"If a monochord with moveable bridge be taken, and a space equal to 44 units be measured and the Bridge shifted to this point, the string when struck will yield a note; if we start with this note as the tonic or key-note and run through the Gamut by shifting the bridge (the Sanskrit writers affirm) the following facts will be observed. Sa will be produced at the distance 44; Ri at 40; Ga at 37; Ma at 35; Pa at 31; Dha at 27; Ni at 24; and Sa again at 22; but the latter Sa will be twice as intense as the former."

"தந்தி ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் அங்குமிங்கும் தள்ளி வைக்கக்கூடிய ஒரு சிறு மரப்பாலமும் வைத்துக் கொள்வோம். ஏதாவது ஒரு நீளத்தை எடுத்துக்கொண்டு அதை 44 சரிபங்குகளாகப் பிரித்துக் கொண்டு அந்த மரப்பாலத்தை அதன் கடைசியில் வைத்துத் தந்தியை மீட்டினால் ஒரு சுரம் பேசுகிறது என்று வைத்துக் கொள்ளுவோம். இந்த சுரத்தை ஷட்ஜமமாக வைத்துக் கொண்டு, அந்தப் பாலத்தை அங்குமிங்கும் தள்ளுவதினால் ஒரு ஸ்தாயியிலுள்ள சுரமெல்லாம் தெரிந்து போகும் என்று கிரந்த நூல்கள் கூறுகின்றன. அது எப்படியென்றால் 44-வது பிரிவில் ஷட்ஜமமும் 40-வது பிரிவில் ரிஷபமும், 37-வதில் காந்தாரமும், 35-வதில் மத்திமமும், 31-வதில் பஞ்சமமும், 27-வதில் தைவதமும், 24-வதில் நிஷாதமும் மேல் ஸ்தாயி ஷட்ஜமம் 22-வதிலும் பேசும். மேல்ஸ்தாயி ஷட்ஜமம் முந்தின ஷட்ஜமத்தைவிட இரு பங்கு உள்ளதாயிருக்கும்."

இவர் சொல்லிய கணக்கு இப்புத்தகத்தைப் பார்க்கும் யாவருக்கும் நன்றாய் விளங்கும்படி முதல் 22 சுருதிகளுக்கு இவர் கொடுக்கும் அளவையும் அதன்பின் 32 அங்குலத்தில் அவைகளின் அளவுகளையும், அதன்பின் ஒரு ஸ்தாயியில் எந்த இடத்தில் அவைகள் நிற்கிறதென்று காட்டும் பின்னத்தையும் ஆதார ஷட்ஜம் 540 வைபரேஷனானால் மற்ற சுரங்களின் ஓசைகளின் அலைகள் இவ்வளவென்பதையும் பிரித்துக் காட்டும் அட்டவணை இதோடு சேர்க்கப்பட்டிருக்கிறது.

கவனிப்பு- சுருதிகளைப் பற்றிய அபிப்பிராயம் பலபலவாயும் அவர்களுடைய அளவும், ஓசைகளின் அலைகளும் வெவ்வேறாயுமிருப்பதினால், ஒத்துப்பார்ப்பது சங்கடம். ஆகையால் எல்லோரும் இலகுவாய் அறிந்து கொள்ளக்கூடியதாக தந்தியின் நீளம் 32 அங்குலமாகவும் ஓசையின் அலைகள் 540 ஆயும் வைத்துக் கொண்டு அவரவர்கள் கணக்குக்கு மாற்றியிருக்கிறேன்.

மேலும் 22 சுருதிகள் சேர்க்கும் முறைசொன்ன சாரங்க தேவருடைய முறைக்கு இது முற்றிலும் ஒவ்வாததாயிருந்தாலும் மற்றவைகளோடு ஒத்துப் பார்ப்பதற்கு ஒவ்வொரு சுருதிக்கும் இத்தனை சென்ட்ஸ்கள் என்றும் அவர்கள் ஒவ்வொன்றுக்குமுள்ள பேதம் இன்னதென்றும் அறிந்துகொள்ளக்கூடிய கணக்கும் இதோடு சேர்த்திருக்கிறேன். இதை வாசிக்கிறவர்கள் சுலபமாய் ஒத்துப்பார்த்துக் கொள்ளக்கூடுமாதலால் அவை சொல்லாமல் விடப்பட்டன.