குறிப்பு- இவர் தந்தியின் நீளம் 44 எண்கள் என்று வைத்துக்கொண்டு, அதின் மத்திய பாகத்தில் தாரஸ்தாய் ஷட்ஜம் பிரிக்கிறார். இது யாவரும் இலகுவாய் அறிந்து கொள்ளக்கூடியதே. தார ஷட்ஜத்திற்குக் கீழ் உள்ள மத்தியஸ்தாய் 22 எண்கள் நீளமுள்ளதாகிறது. இந்த 22 எண்களில் ஒவ்வொரு எண்ணுக்கு ஒவ்வொரு சுருதியாக 22 சுருதியாகிறது. திருஷ்டாந்தமாக 44 எண்களின் நீளத்தையும் 44 அங்குலமென்று வைத்துக் கொள்வோமேயானால் ஒவ்வொரு அங்குலத்துக்கும் ஒவ்வொரு சுருதியாக 22-வது சுருதியில் மத்தியஸ்தாயி அமைகிறது. இவர் ஷட்ஜத்திற்குரிய 4 சுருதிகளில் முதல் சுருதியை ஆதார ஷட்ஜமமாக வைத்துக் கொள்ளுகிறார். 44-ல் இருந்து 41 வரை ஷட்ஜமத்திற்குரிய 4 சுருதிகளாகவும் 40, 39, 38 ரிஷபத்திற்குரிய 3 சுருதிகளாகவும் 37, 36 காந்தாரத்துக்குரிய 2 சுருதிகளாகவும் 35, 34, 33, 32 மத்திமத்திற்குரிய 4 சுருதிகளாகவும் 31, 30, 29, 28 பஞ்சமத்திற்குரிய 4 சுருதிகளாகவும் 27, 26, 25 தைவதத்திற்குரிய 3 சுருதிகளாகவும் 24, 23 நிஷாதத்திற்குரிய 2 சுருதிகளாகவும் வருகிறது. ஆகவே, ஷட்ஜமம் 4, ரிஷபம் 3, காந்தாரம் 2, மத்தியமம் 4, பஞ்சமம் 4, தைவதம் 3, நிஷாதம் 2 ஆக 22 சுருதிகள் என்று சொல்லுகிறார். இதில் நாம் கவனிக்கக்கூடியது ஒன்று உண்டு. சாரங்க தேவர் சங்கீதரத்னாகரத்தில் உன்னால் குறைந்த ஓசையை முதல் தந்தியில் வைத்துக்கொள். அதற்கு மேல் வரக்கூடிய ஓசையை இரண்டாம் தந்தியில் வைத்துக்கொள். இரண்டுக்கும் நடுவில் வேறு ஓசையுண்டாகக் கூடாது. இப்படிப் படிப்படியாக ஓசைகளைக் கூட்டிக் கொண்டு போக அவைகள் தீவிரமாகுமென்று ஓசையைக் குறித்துச் சொன்னாரேயொழியத் தந்திகளின் அளவில் அவைகள் ஒத்திருக்க வேண்டுமென்று சொல்லவில்லையென்று நாம் முக்கியமாய்க் கவனிக்க வேண்டும். இதற்கு அர்த்தம் பண்ணின சகஸ்திரபுத்தி என்பவர் சங்கீத ரத்னாகரர் மந்தரஸ்தாயி ஓசை ஒரு பங்கானால் மத்தியஸ்தாய் இரு மடங்கும், தாரஸ்தாய் மத்தியஸ்தாயியினும் இருமடங்குமாக இருக்குமென்று சொல்லியிருக்கிறதை அறிவார் என்று நினைக்கிறேன். அப்படியானால் மத்திய ஸ்தாயிக்குள்ள எண்களில் அதாவது 22 அங்குலத்தில் அது முடிவாகிறதானால் தாரஸ் தாய் 11 அங்குலத்தோடு முடிவடைய வேண்டும். இப்படியே மேல் போகப் போக, அளவின் எண்கள் பாதி பாதியாகக் குறைந்தும் ஓசையின் அலைகள் இரண்டு இரண்டு மடங்காக மேல் கூடியும் போகிறதென்று அறியலாம். இதைப் போலவே ஒரு ஸ்தாயியிலுள்ள சுரங்களும் படிப்படியாகக் கூடுதலாகி இரண்டில் முடிவடைகிறது. ஒரு தந்தியின் பாதிக்குக் கீழாக மத்தியஸ்தாயியும் பாதிக்குமேல் நாலில் ஒன்றில் தார ஸ்தாயியும் எட்டில் ஒன்றில் அதிதாரஸ்தாயியும் ஜியாமெட்ரிகல் புரோகிரஷன்படி (Geometrical Progression) பேசுகிறதை நாம் யாவரும் அறிவோம். இதுபோலவே, ஒரு ஸ்தாயியிலுள்ள ஒவ்வொரு சுரமும் படிப்படியாகத் தந்தியின் நீளத்தில் ஜியாமெட்ரிகல் புரோகிரஷன்படி குறைந்து கொண்டே போகிறது. தார ஷட்ஜமத்தின் மேலுள்ள ரிஷபம் மத்திய ஸ்தாயியின் ரிஷபத்தின் தந்தி அளவிற்கு 2 மடங்கு அதிகமானதென்றும் நாம் பார்க்கலாம். ஆனால் தாரஸ்தாயி ஷட்ஜத்தின் கீழுள்ள நிஷாதம் மேலுள்ள ரிஷபத்தின் அளவுக்கு சுமார் 9ல் ஒன்று கூடியிருக்கிறது. தந்தியின் அளவில் ரிஷபம் இப்படிக் குறைந்திருந்தாலும் ஓசையின் அளவில் ரிஷபம் சுமார் 8ல் ஒன்று கூடியிருக்கிறதாகக் காண்போம். இப்படியே சப்த சுரங்களும் ஒருஸ்தாயியில் மேல் போகப்போக ஓசையில் கூடியும் தந்தியில் குறைந்துமிருக்க வேண்டியது. அப்படி இல்லாமல் சமமாகத் தந்தியை அளவிடும் போது ஓசையில் வேறுபட்டிருக்கும். அதாவது சங்கீத ரத்னாகரர் சொல்லிய ஓசையின்படி அது ஒத்திருக்க மாட்டாது. முடிவாக ஓசையின் அளவில் ஒன்றற்கொன்று பேதமின்றி ஒற்றுமையாய், ஒரே அளவாய் மேலே போக வேண்டுமென்று சொன்ன சாரங்க தேவர் அபிப்பிராயத்திற்கு, தந்தியின் அளவில்
|