பக்கம் எண் :

291
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-இரண்டாவது பாகம்-இருபத்திரண்டு சுருதிகள்.

ஒன்றற்கொன்று பேதமின்றி ஒத்திருக்க வேண்டுமென்ற சகஸ்திரபுத்தி அவர்களின் அபிப்பிராயம் முற்றிலும் ஓசையில் ஒவ்வாது என்று நான் நினைக்கிறேன். ஆனால் நாதமானது சம அளவாயிருக்க வேண்டுமென்ற அபிப்பிராயம் இவருக்குண்டானதை நாம் மிகவும் கவனிக்க வேண்டும். இவர் தந்தியில் எடுத்துக் கொண்ட அளவையும், சாரங்க தேவர் எடுத்துக் கொண்ட அளவையும் இதின் பின் வரும் அட்டவணையில் காணலாம். அப்படியே இவர் எடுத்துக் கொண்ட கணக்கின்படி வரும் ஓசையின் அளவுக் கணக்கையும் சாரங்க தேவர் எடுத்துக் கொண்ட கணக்கின்படி வரும் ஓசையின் அளவுக் கணக்கையும் இதின் பின்வரும் அட்டவணையில் பார்க்கலாம்.

இவர் ஒரு ஸ்தாயியை 22 பாகங்களாகப் பிரித்து அதில் முதல் நாலு சுருதியையும் ஷட்ஜமத்துக்குரியதென்கிறார். ஆனால் ஷட்ஜமத்தின் நாலாவது சுருதி மேருவினிடமாகப் பேசுகிறதை நாம் யாவரும் அறிவோம்.