இரண்டாவது. ராஜா சுரேந்திர மோகன தாகோர் அவர்களின் 22 சுருதியின் முறை. இவர் கல்கத்தாவாசி. நம் இந்திய சங்கீதத்திற்கு உதவியாயிருக்கும் வாத்தியங்கள் பலவற்றை சேகரித்து பாரீஸ் நகரத்தின் கண்காட்சிக்கு அனுப்பி, இந்திய சங்கீதம் மேற்றிசையாருக்கும் விளங்கும் வண்ணம் அநேக நூல்கள் செய்தவர். 1875-ம் வருஷத்தில் நம் இந்திய சக்கரவர்த்தினி அவர்கள் பேராலும் அவர்கள் முன்னோர்கள் போரலும் "விக்டோரிய கீதிகா" என்ற சங்கீத புஸ்தகம் எழுதினவர். இந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளைக் காண்பதற்காக அடியில் வரும் விவரப்படி பிரித்திருக்கிறார். அதைப் பற்றி இவர் எழுதிய புஸ்தகம் எனக்குக் கிடைக்காவிட்டாலும் தேவால் எழுதியிருக்கிறதைக் கொண்டு இவரது சுருதி முறையைச் சொல்லுகிறனே். Hindu Musical Scale and 22 Srutis by K. B. Deval P. 34. Mr. Deval says that he (Raja Surendra Mohan Tagore) divided the whole speaking length of the wire into two halves, the whole length giving the sa or fundamental note and the half giving this sa the octave; both these notes are correct. Again he divided the first half into two equal parts each being of the whole length. The first quarter of the wire he sub divided into 9 equal parts calling each part a Sruti. And at the end of the 9th part is sounded a note ma (at of the wire) which is correct. In the next quarter of the wire he made 13 equal sub divisions each being also called a Sruti. Thus in all he got the 22 Srutis. "அதாவது ஒரு தந்தியை இரண்டு சமபாகமாகப் பிரிக்கிறார். முழுத் தந்தியில் ஆதார ஷட்ஜம் பேசுகிறது. அதன் பாதியில் தார ஷட்ஜம் பேசும். இந்த நோட்டுகள் சரியாயிருக்கின்றன. முதல் பாதியை இரண்டு சமபாகமாகப் பிரிக்கிறார். அதில் ஒவ்வொன்றும் மொத்தத்தில் நாலில் ஒன்றாகிறது. முதலாவது 1/4பங்கு தந்தியை 9 சம பாகங்களாகப் பிரிக்கிறார். அதில் ஒவ்வொன்றும் ஒரு சுருதியென்று சொல்லுகிறார். அதில் ஒன்பதாவது பாகத்தில் முடிகிற சுருதி ம வென்று அழைக்கப்படும். அதுவும் சரியாயிருக்கிறது. தந்தியின் அடுத்த கால் பாகத்தை 13 சமபாகங்களாகப் பிரிக்கிறார். இதன் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு சுருதி என்று அழைக்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் 22 சுருதிகளும் கிடைத்திருக்கின்றன." ஷட்ஜமும் மத்திமமும் சரியாயிருக்கின்றன என்று தேவால் தம்முடைய புஸ்தகம் 34, 35-ம் பக்கங்களில் சொல்லுகிறார். இதைக் கவனிக்கையில் ஒரு ஸ்தாயியை 22 சுருதிகளாகப் பிரிக்க வேண்டுமென்று அவர் அபிப்பிராயப்படுகிறார் என்பது திட்டமாய்த் தெரிகிறது. ஆனால் சகஸ்திரபுத்தியவர்களுடைய அபிப்பிராயத்திற்கும் இவர்களுடை அபிப்பிராயத்திற்கும் கொஞ்சம் வித்தியாசமிருப்பதாக நாம் அறியலாம். அதாவது, தந்தியின் நாலில் ஒன்றை 9 பாகமாகவும் அதின் மேலுள்ள நாலில் ஒன்றை 13 சம பாகங்களாகவும் வகுத்ததே. மொத்தத்தில் சம பாகங்களென்று நினைத்தது சரியாயிருந்தாலும், காஸ்தானங்களில் சற்றுப் பேதமிருப்பதாக நாம் பார்க்கலாம். ஒரு ஸ்தாயியை 22 சம பாகங்களாகப் பிரிக்கையில் சகஸ்திர புத்தியின் அபிப்பிராயத்தின்படி 12-வது சுருதி அந்த ஸ்தாயிக்கு மத்தியாகிறது. அப்போது 10-வது சுருதியாகிய மத்திமத்திற்குமேல் 2 சுருதிகள் சேர்ந்து வரும். அதாவது, மத்திமத்தினுடைய 4 சுருதிகளில் 3வது சுருதி மத்தியாகும். ஆனால் ராஜா சுரேந்திர மோகனதாகோர் அபிப்பிராயத்திலோ ஒருஸ்தாயியின் மத்திய பாகமானது 9 சுருதிகளுடைய மத்திமம் ஆகுமென்று சொல்லுகிறார். சகஸ்திர புத்தியவர்கள் மத்தியஸ்தாயியை சரி பாகங்களாகப் பிரிக்கையில்
|