பக்கம் எண் :

305
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-இரண்டாவது பாகம்-இருபத்திரண்டு சுருதிகள்.

நன்மையாயிருக்கும். மற்றும் சுருதிகளையும் சுரங்களையும் இவர் குறிக்கும் முறையானது சங்கீத ரத்னாகரத்தின்படி கரியான தென்று நான் நினைக்கவில்லை. ஆகையால், அதைப்பற்றி நான் அதிகமாகச் சொல்லவில்லை. முடிவாக இவர் சங்கீத ரத்னாகரத்தில் சொல்லிய 22 சுருதிகளைச் சொல்லாமல் பாரிஜாதக்காரர் சுரங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு அளவைச்சொல்லி சப்தசுரங்களையும் குறித்துவிட்டு அதற்குப் பின்வரும் சுரங்களையும் சுருதிகளையும் தம் மனம்போன போக்கில் குறிக்கிறார் என்று தோன்றுகிறது. அதற்கு எந்த நூலிலும் ஆதாரமில்லை. மேலும் காந்தாரத்திற்கும் நிஷாதத்திற்கும் மேல்வரும் சிறு சுருதிகளின் இடைவெளிகள் போன்ற அதாவது 300-3003/4, 450-4555/8 போன்ற எத்தனையோ இடைவெளிகள் வரலாம்.

இது தவிர சப்த சுரங்களின் வரிசைக்கிரமத்தில் இடைவெளிகளில் அரை சுரங்களின் வரிசைகளையும், சுருதி வரிசைகளையும் குறிப்பதற்காக இவர் வழங்கிவரும் முறை சமஸ்கிருத நூல்களில் சொல்லப்படவில்லை. தாமாக வைத்துக்கொண்டதாகத் தோன்றுகிறது. ஷட்ஜமத்திற்கும் ரிஷபத்திற்கும் நடுவிலுள்ள இடைவெளியை அதாவது 36 அங்குலமுதல் 32 அங்குலமுள்ள இடைவெளியை 4 சுருதிஸ்தானங்களாகப் பிரிக்கிறார். அதில் முதலாவது 1 போலவும், (2) 21ல் 20 போலவும் (3) 16ல் 15 போலவும் (4) 10ல் 9 போலவும் (5) 9ல் 8 போலவும் முறையே 36 அங்குலத்திலும் 242/7அங்குலத்திலும், 333/4 அங்குலத்திலும், 322/8 அங்குலத்திலும், 32 அங்குலத்திலும் பாகிக்கிறார். இவைகள் ஒன்றற்கொன்று ஏற்றத்தாழ்ச்சியாயிருக்கின்றன. இவை முறையே ஆதார ஷட்ஜம் 240இலிருந்து 252, 256, 2662/3, 270 ஆக வருகின்றன. முதல் சுருதி ஆதாரஷட்ஜத்துக்கு 12 ஓசையின் அலைகள் கூடிய தாகவும், இரண்டாவது முந்தினதற்கு 4 வைபரேஷன் கூடின தாகவும், மூன்றாவது இரண்டாவதற்கு 102/3 கூடினதாகவும், நான்காவது மூன்றாவதற்கு 31/3 கூடினதாகவும் வருகிறது. இப்படியே சில சுரஸ்தானங்களுக்கு ஒன்றற்கொன்று ஒத்திராத பல பின்னங்களை உபயோகிக்கிறார். இது இவருடைய சொந்த அபிப்பிராயம் என்று நினைக்கிறேன். 22 சுருதிகளைத் தெளிவாய்க் காட்டவந்த இவர் எங்கேயாவது ஒரு இடத்தில் தவறிப்போனால், திருத்திச் சொல்வது பிரயோசனமாயிருக்கும். ஆயினும் இவர் சுருதிகளை அறிய விரும்பிய விருப்பத்தை நான் மிகவும் மெச்சிக்கொள்ளுகிறேன்.

இவர் ஏற்படுத்தியிருக்கும் சுருதிஸ்தானங்களைப்பற்றி கிளமெண்ட்ஸ் எழுதிய அபிப்பிராயம் அடியில் வருமாறு :-

In his Introduction to Hindu Musical scale and the 22 Srutis of Deval Mr. E. Clements says

“Secondly it will be found that although Mr. Deval did not test his Shrutees throughout by the harmonic intervals 5 : 4, 6 : 5 and 7 : 6 which may be called the Major Third, Minor Third and Septimal Third, they are clearly built up from those intervals.

“Indeed the importance attached to the Septimal intervals, that is those derived from the seventh harmonic, places the Music of India in the first rank of intellectual developments of the musical art. some writers on Harmony have claborated theories based upon the supposition that the subdominant (corresponding with Komal madhyam) and dominant seventh (that is Atikomal madhyam) are for all practical purposes the same note. No one who has attentively listened to Indian Ragas could entertain such an idea for a moment, as the Septimal Seventh. is very much flatter than the ordinary seventh. the interval 7 : 6 being easily distinguished even by the untrained ear from the interval 6 : 5.

“The 22 shrutees are as Mr. Deval points out a selection from the total number of shrutees used in Indian Ragas and Raginis. Mr. Deval had not only to ascertain what shrutees were made use of by different singers but also to pick out the 22 which might justly be considered essential.”