“Mr. Krishnaji Mahadev Gokhale of Miraj who makes use of considerably more than 22 Shrutees has kindly sung over to me 83 Ragas and Raginis and given me the names of the notes used in them. It appeared to me that the extra shrutees used were chiefly those necessary to give the exact septimal intervals in some of those cases which I have marked ‘nearly’ in the footnote. An additional ‘Atikomal Gandhar’ of 280 relative number of vibrations was also used but in one Raga only. Mr. Deval tells me that some singers use a similar septimal ‘Atikomal Nishad’. The ‘Atikomal Nishad’ chosen by him is however a vital necessity as the fourth above madhyam and if the Shrutees are to be restricted to 22 I am afraid one must give up these two septimal notes. pleasing though their effect must be acknowledged to be. “The intervals between each shrutee and next as given in Mr. Deval’s table D. are of no great significance.” மகா- - -ஸ்ரீ தேவால் அவர்களின் 22 சுருதிகளைப்பற்றிக் கிளமெண்ட்ஸ் அவர்களின் அபிப்பிராயம். “இரண்டாவதாக, தேவால் என்பவர் தம்முடைய சுருதிகள் ஆர்மானிக் இடைவெளிகளாகிய 5 : 4, 6 : 5, 7 : 6 முறையே அதாவது Major Third, Minor Third and Septimal Third என்பவைகளுக்கு ஒத்திருக்கிறதோ என்று சோதித்துப்பார்க்காவிட்டாலும், அந்த இடைவெளிகளை ஆதாரமாய் வைத்துக்கொண்டு தான் சுருதி நிச்சயம் செய்திருக்கிறார் என்பதற்குத்தடையில்லை. “ஏழாவது ஆர்மானிக் சுரமாகிய இந்த Septimal இடைவெளியை விசேஷித்துக்கொள்வதே இந்திய சங்கீதம் யுக்தி பூர்வமாய் முன்னுக்கு வந்திருக்கிற வித்தைகளில் முதன்மையானது என்பதற்கு ஓர் அறிகுறியாயிருக்கிறது. கோமளமத்திமத்திற்குச்சரியான Subdominant (அதாவது ஆர்மோனியத்தில் 6வது சுரம்) உம் அதிகோமள மத்திமத்திற்குச்சரியான ஏழாவது Dominant உம் அநேகமாய் ஒரேசுரந்தான் என்ற நிச்சயத்தின் பேரில் சிலர் பல கொள்கைகளை ஸ்தாபித்திருக்கிறார்கள். ஆனால் இந்திய இராகங்களை நுட்பமாய்க் கவனித்த எவராவது அது சரியென்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் சாதாரண ஏழாவது சுரத்தைவிட Septimal சுரமானது சுருதி குறைந்தது என்றும் 7 : 6 என்னும் இடை வெளியானது 6 : 5 என்னும் இடை வெளியைவிட சுருதியில் குறைந்தது என்றும் சங்கீத ஞானமில்லாதவர்கள் கூட எளிதில் கண்டுகொள்ளலாம். “மகா- - -ஸ்ரீ தேவால் சொல்லுகிறபடி 22 சுருதிகளும் இந்திய இராகங்கள் இராகினிகள் இவைகளில் உபயோகிக்கப்படுகிற சுருதிகளினின்று பொருக்கி எடுக்கப்பட்டவை. அவர் பல வித்துவான்களுடைய சங்கீதங்களினின்றும் இன்னின்ன சுருதிகள் அவைகளில் உபயோகப்படுகின்றன என்றும் முதலில் நிச்சயித்துப்பின்பு விசேஷமானவை என்று கொள்ளத்தக்க இந்த 22 சுருதிகளையும் அவைகளினின்று பொருக்கி யெடுக்கவேண்டியதாயிற்று. “22 சுருதிகளுக்குமேல் அநேக சுருதிகளுண்டு என்று கொண்ட Miraj பட்டணத்து KrishnaiMahadev Gokhale என்பவர் 83 இராகங்கள் இராகினிகளை எனக்குப் பாடிக்காட்டினதுமல்லாமல் அவைகளில் உபயோகிக்கப்படும் சுரங்களின் பேர்களும் இன்னின்னவை என்று எனக்குச் சொன்னார். அவர் சொன்ன 22க்கு மேற்பட்ட சுருதிகள் யாவும் சரியாய் Septimal இடைவெளிகளில் வரக்கூடிய சுரங்கள்தான். அவைகளில் சிலவற்றைப் பக்கத்தின் அடியில் “nearly” (அதாவது கொஞ்சம் குறையசரியானது) என்ற குறிப்பால் காண்பித்திருக்கிறேன்.) 280 துடிகளுள்ள இன்னொரு அதிகோமள காந்தாரமும் ஒரே ராகத்தில் உபயோகிக்கப்பட்டதாகத் தெரிந்தது. சிலபாடகர்கள் அதேவிதமாய் Septimal அதிகோமள நிஷாதத்தை உபயோகிக்கிறார்கள் என்று சொல்லுகிறார். மத்திமத்திற்கு மேல் நாலாவது சுருதியாகவரும் அந்த அதிகோமள நிஷாதம் கட்டாயம் இருக்கவேண்டியது. அதில்லாவிட்டால் ஜீவனில்லை. ஆனால் சுருதிகள் இருபத்திரண்டு என்று சொல்லும் விஷயத்தில் மிகவும் இனிமையான இந்த இரண்டு செப்டிமல் சுரங்களையும் விட்டுவிடவேண்டுமே என்று அதிக வருத்தப்படுகிறேன். “மகா- - -ஸ்ரீ தேவால் புஸ்தகத்தில் D. Table என்னும் அட்டவணையில் இந்த சுருதிக்கும் அடுத்த சுருதிக்கும் நடுவிலுள்ள இடைவெளிகளைப்பற்றிச் சொல்லியிருப்பதானது அதிக முக்கியமானதல்ல.”
|