பூர்வ இசைத் தமிழில் (சங்கீதத்தில்) காணப்படும் அரும்பத விளக்கமும் சில குறிப்புகளும். 1. | முத்தமிழ் - இயல், இசை, நாடகமென்னும் மூவகைத் தமிழ். | 2. | இயற்றமிழ் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணிஎன்னும் ஐந்து இலக்கணங்களும், இலக்கியங்களும். | 3. | இசைத்தமிழ் - சுரம், சுருதி, இராகம் என்னும் மூன்றின்இலக்கணங்களும் பன்னீராயிரம் ஆதி இசைகளும் பண்களும். | 4. | நாடகத்தமிழ் - தாளம், பாவனை, அலங்காரம், இரசம்என்னும் நாலு அங்கங்களையுடையது. எழுத்தொடு சொற்பொருள் யாப்பணி யென்னா வழுத்துஞ் சுருதிசுர வன்னம் - அழுத்துந் தனிவொற்றுப் பாவனை தான மிரசம் பனிரண் டிலக்கணமாம் பார். (மதிவாணன்) | 5. | இசை - பண், சுரம், காமரப்பாட்டு, கானம், கொளை, வரி,கந்திருவம், கீதம், இராகம், கேயம், நாதம் எனவும் அழைக்கப்பெறும். | 6. | ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரிதாரம் என்று பூர்வ தமிழ்மக்களால் வழங்கப்பட்டன. அவற்றுள், | 7. | குரல் - முதல் சுரம் (ச) சட்சமம் என்றும் | 8. | துத்தம் - இரண்டாம் சுரம் (ரி) ரிஷபம் என்றும் | 9. | கைக்கிளை - மூன்றாம் சுரம் (க) காந்தாரம் என்றும் | 10. | உழை - நான்காம் சுரம் (ம) மத்திமம் என்றும் | 11. | இளி - ஐந்தாம் சுரம் (ப) பஞ்சமம் என்றும் | 12. | விளரி - ஆறாம் சுரம் (த) தைவதம் என்றும் | 13. | தாரம் - ஏழாம் சுரம் (நி) நிஷாதம் என்றும் தற்காலத்தில்வழங்குவர் | 14. | ஏழிசைப்பிறக்கும் இடம் - மிடற்றால் குரல், நாவினால் துத்தம்அண்ணத்தால் கைக்கிளை சிரத்தால் உழை, நெற்றியால் இளி, நெஞ்சால் விளரி, மூக்கால் தாரம் பிறக்கும். |
|