44 | |
| 15. | ஏழிசை தம்மில் பிறப்பதற்குத் தகுதி - தாரத்து உழை, உழையிலகுரல், குரலில் இளி, இளியுள் துத்தம், துத்தத்துள் விளரி, விளரியுள் கைக்கிளையும் பிறப்பது தகுதி. சட்சமத்தின் ஓசை ஒன்றானால், பஞ்சமத்தின் ஓசை ஒன்றரையாய் வருவதால் இரண்டு ஓசையும் ஒன்றுபோல் பொருத்தமுடைய ஒசையாய் வரும். பஞ்சமத்தை சட்சமமாகவைத்துகாண்டு அதற்குமேல் பொருந்தும் ஓசையாய்ப்பஞ்சமத்தைக் கண்டுபிடித்து மற்றும் சுரங்கள் யாவும் இம்முறையே பிறப்பதற்குக் காரணமாய் இருப்பதாலும் ப-ம வைப் போல் மற்றும் சுரங்கள் குறைந்த பொருத்தமுடையவைகளாய் இருப்பதாலும் பஞ்சம மத்திம முறையைச் சுரங்கள் பிறப்பதற்குத் தகுதியான முறையென்று சொன்னார். | 16. | பாலை - பகுப்பு அல்லது வகை ; அது, ஆயப்பாலை,வட்டப்பாலை, திரிகோணப்பாலை, சதுரப்பாலை என நான்கு வகைப்படும். | 17. | ஆயப்பாலை - ஒரு இராசி வட்டத்தில் ச-ப ச-ப முறையாகவலமுறையாய் வரும் அரை, அரையான பன்னிரு சுரங்களும், ச-ம ச-ம வாக இடமுறையாய்வரும் பன்னிரு சுரங்களும் அவைகளில் கிரமாற்றும் பொழு துண்டாகும் செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை முதலிய ஏழு பாலைகளும் மற்றும் சிறு பாலைகளும் உண்டாகும் விதத்தைச் சொல்லும் முறை | 18. | வட்டப்பாலை - ஒரு இராசிவட்டத்தில் ச-ப, ச-ம முறையில்வரும் பன்னிரு அரைச்சுரங்களையும் இரண்டிரண்டு அலகாகப்பிரித்து 24 அலகாக்கி விளரி கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கமகமாய் வாசிக்கும் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்னும் நால்வகை யாழ்களையும் அவை ஒவ்வொன்றி லுண்டாகும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் போன்ற 16 ஜாதிப் பண்களையும் பற்றிச் சொல்லும் முறை. | 19. | திரிகோணப்பாலை - ஒவ்வொரு அலகில் கமகமாய்ப் பாடியவட்டப்பாலை முறையைப்போல் லு அலகு கமகமாய்ப் பாடும் முறை. | 20. | சதுரப்பாலை - திரிகோணப்பாலை முறையைப் போல ச-பமுறையில் வரும் இரண்டு சுரங்களில் கால், கால் அலகு கமகமாய் வாசிக்கும் முறை. | 21. | ஆயப்பாலைப்பண்கள் - ஆயப்பாலையில் பிறக்கும் இராகம். அதுஏழுவிதமாம். அவை செம்பாலைப்பண், படுமலைப்பாலைப்பண், செவ்வழிப்பாலைப்பண், அரும்பாலைப்பண், கோடிப்பாலைப்பண், விளரிப்பாலைப்பண், மேற்செம்பாலைப்பண் என்று சொல்லப்படும். அவைகள் ச, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு எழுத்தையும் முறையே கிரக மாற்றிச் செல்லும் பொழுது உண்டாகும் இராகங்களாம். அவைகளைத் தற்காலத்தில் முறையே சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி, கல்யாணி, அரிகாம்போதி, பைரவி, சுத்ததோடி என்னும் இராகங்களாக வழங்குகிறோம். |
|
|
|