22. | செம்பாலைப்பண் - குரலே குரலாக அதாவது ச-வே ச-வாகஆரம்பித்துப் பாடப்படுவது; இதுவே தீரசங்கராபரணம். |
23. | படுமலைப்பாலைப்பண் - துத்தம் குரலாக அதாவது ரிஷபம்சட்சமமாகக் கிரக மாற்றிப் பாடுவது; இதுவே கரகரப்பிரியா. |
24. | செவ்வழிப்பாலைப்பண் - கைக்கிளை குரலாக அதாவதுகாந்தாரம் சட்சமமாக வைத்துக் கிரகசுர மாற்றிச்சொல்வது; இதனைத் தோடி என்பர். |
25. | அரும்பாலைப்பண் - உழை குரலாக அதாவது மத்திமம்சட்சமமாக வைத்துப் பாடுவது; இது கல்யாணி என்று பெயர் பெறும். |
26 | கோடிப்பாலைப்பண் - இளி குரலாக அதாவது பஞ்சமம்சட்சமமாக வைத்துப் பாடுவது; இதற்கு அரிகாம்போதி என்று பெயர். |
27 | விளரிப்பாலைப்பண் - விளரி குரலாக அதாவது தைவதம்சட்சமமாகப் பாடப்படுவது; இதுவே பைரவியாம் |
28. | மேற்செம்பாலைப்பண் - தாரம் குரலாக அதாவது நிஷாதம்சட்சமமாக ஆரம்பித்துப்பாடுவது; இதனை சுத்த தோடி என்பர். இவை ஏழும் ஆயப்பாலையில் வரும் ஏழு பெரும்பாலைகளாம். |
29. | வலிது - மேல் சுரமுடையது; செம்பாலைக்குப் படுமலைப்பாலைவலிது. அதாவது ச-வில் தொடங்கும் செம்பாலைக்கு ரி-யில் தொடங்கும் படுமலைப்பாலை மேல் சுரத்தைக்கொண்டு ஆரம்பிப்பதால் வலிதென்றார். இதைப்போலவே மற்றைப்பாலைகளும் ஒன்று மற்றொன்றினும் வலிதாகும். |
30 | பெரும்பண்கள் - நாலுவிதமாம். அவை மருதப்பண், குறிஞ்சிப்பண்,நெய்தற்பண், பாலைப்பண் என்பவைகளாம். அவைகளை மருதயாழ், குறிஞ்சியாழ், நெய்தல்யாழ், பாலையாழ் எனவும் கூறுவர் |
31. | மருதயாழ் - குரலே குரலாக ஆரம்பிக்கும்பொழுதுஉண்டாகும் செம்பாலைப் பண்ணில் விளரி கைக்கிளைகளில் ஒவ்வெரு அலகு குறைத்துக் கமகமாய்ப் பாடுவது. |
32. | குறிஞ்சியாழ் - உழை குரலாக அதாவது மத்திமத்தைசட்சமமாக ஆரம்பித்துப்பாடும் அரும்பாலைப் பண்ணில் விளரி கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்துப் பாடுவது. |
33. | நெய்தல்யாழ் - இளி குரலாகப்பாடும் கோடிப்பாலைப்பண்ணில்விளரி கைக்கிளையில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கமகமாய்பப் பாடும் இராகமாம். |
34. | பாலையாழ் - தாரங் குரலாகப் பாடும் மேற்செம்பாலையில்விளரி கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்துப்பாடும் இராகமாம். இவைகள் விளரி, கைக்கிளைகளில் ஒவ்வொரு அலகு குறைத்து பாடப் படுவதால் வட்டப்பாலையின் உட்பிரிவாக அடங்கும். |