35. | ஜாதிப்பண்கள் - அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் எனநாலாம். இவை நாலும் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்னும் நால்வித யாழ் பேதத்தால் பதினாறு வகையாகும். அவை அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம், அகநிலைக்குறிஞ்சி புறநிலைக் குறிஞ்சி என்றாற்போல அந்தந்த யாழின் பெயர்களை அடுத்து வரும். |
36. | அகநிலை - ஒவ்வொரு யாழின் ஆரம்ப சுரத்தில் வரும்இராகமே அகநிலையாம். |
37. | புறநிலை - நால்வகை யாழ்களின் ஆரம்ப சுரத்திற்குநாலாவதான நட்பு நரம்பில் தொடங்கும் இராகமாம். ச-க வைப்போல். |
38 | அருகியல் - நால்வகை யாழன் ஆரம்ப சுரத்திற்கு ச-பவைப்போல் இணையாக வரும் சுரத்தில் ஆரம்பிக்கும் இராகங்களாம். இது ச-ப முறையாம். |
39. | பெருகியல் - நால்வை யாழ்களில் ஆரம்பிக்கும் சுரத்திற்குமுடிந்த சுரமாக வரும் சுரத்தில் துவங்கும் இராகங்களாம். ப-நி யைப்போல். |
40. | குரல்இளியாய் - என்றது ச-ப ச-ப முறையாய் வலமுறைதிரிதலுக்குப்பெயர். |
41. | உழைகுரலாய் - என்பது ம-ச ம-ச வாக இடமுறைதிரிதல். |
42. | நரம்பு - பன்னிரு இராசிகளில் நின்ற சுரங்களாம். |
43. | நின்ற நரம்பு - எடுத்துக்கொண்ட சுரம். இச்சுரமே முடிந்தசுரமாகவும் வருவதினால் இதற்குப் பின்னுள்ள நரம்புகளே ஒன்று இரண்டு முதலிய நரம்புகளாகச் சொல்லப்படுகின்றன. மேருவில் நின்ற ஆதார சட்சம் பூச்சியமாக வைத்துக்கொண்டு ரிஷபம் 1, ரிஷபம் 2 காந்தாரம் 1, காந்தாரம் 2, . . . . . . நிஷாதம் 1 நிஷாதம் 2 சட்சம் 12 என்று தற்காலத்தில் நாம் கணக்கிடுவது போலவே இதுவு மிருக்கிறது. நின்றநரம்பு சட்சமமானால் முடிந்த பன்னிரண்டாம் நரம்பு மேல் சட்சமமாயிருக்கும். |
44. | இணைநரம்பு - நின்ற நரம்பிற்கு மேல் ஏழாவது இராசியில்வரும் பஞ்சமம். |
45. | கிளைநரம்பு - நின்ற நரம்பிற்கு ஐந்தாவது இராசியில் வருமஇரண்டு அலகுள்ள சுத்த மத்திமம். |
46. | நட்பு நரம்பு - நின்ற நரம்பிற்கு நாலாவது இராசியில் வரும்நாலலகு பெற்ற அந்தரகாந்தாரம் |
47. | இரண்டாம் நரம்பு - நின்ற நரம்பிற்கு இரண்டாவது இராசியில்வரும் நாலலகுள்ள ரிஷபம்; நின்ற சுரத்திற்கு இணை நரம்பிற்கு இணை நரம்பாய் வருவதினிமித்தம் இதை இணை நரம்பென்றும் சொல்லுவர். |
48. | பகை நரம்பு - நின்ற நரம்பிற்கு மூன்றாம், ஆறாம்இராசிகளில் வரும் சுரங்கள்; இவை நின்ற நரம்போடு பொருந்தாத நரம்புகளாம். |