பக்கம் எண் :

313
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-இரண்டாவது பாகம்-இருபத்திரண்டு சுருதிகள்.

ஐ ந் தா வ து.

சங்கீத ரத்னாகரர் முறைப்படி கிராமம் மாற்றுகையில் நூதனமாகக் கிடைக்கிறதென்று E. கிளமெண்ட்ஸ் அவர்கள் சொல்லும் 3 சுருதிகள்.

சங்கீத ரத்னாகரம் 3-வது பிரகரணம் 24 முதற்கொண்டு 38 வரைக்குமுள்ள சூத்திரங்களின்படி செய்யப்பட்டது.

இந்த அட்டவணையில் 3 சுருதிகளை 22 சுருதிகளோடு சேர்த்துச் சொல்லியிருக்கிறார். 22 சுருதிகளை இப்படிச் செய்யவேண்டுமென்று சொன்ன சங்கீத ரத்னாகரரே ஷட்ஷம கிராமம், மத்திம கிராமம், காந்தார கிராமம் என்னும் மூன்று கிராமத்தில் சுருதிகளை மாற்றவேண்டும் என்று சொல்லியிருக்கிறதிலிருந்து இந்த நூதனமான 3 சுருதிகளும் கிடைத்தன என்று சொல்லுகிறார். அதாவது, 300 ஓசையின் அலைகளையுடைய அந்தர காந்தாரத்துக்குக் கீழ் 2968/12 ஓசையின் அலைகளையுடைய ஒரு சுருதியும், 360 ஓசையின் அலைகளையுடைய பஞ்சமத்தின் கீழ் 3555/9 ஓசையின் அலைகளையுடைய ஒரு சுருதியும் வருகிறதென்றும், 450 ஓசையின் அலைகளையுடைய காகலி நிஷாதத்திற்குக் கீழ் 4444/9 ஓசையின் அலைகளையுடைய ஒரு சுருதியும் வரவேண்டுமென்றும் சொல்லுகிறார். தேவால் அவர்களின் அபிப்பிராயத்தில், முதல் சுருதி 252 ஓசையின் அலைகளுக்குப் பதில் 250 என்றும் ஒன்பதாவதில் 315 ஓசையின் அலைகளுக்குப் பதில் 3161/81 என்றும், 12 வதில் 3411/3 க்குப் பதில் 3452/3 என்றும், 14 வதில் 378 க்குப்பதில் 375 என்றும் நாலு இடங்களில் சொற்ப வித்தியாசம் சொல்லுகிறாரே யொழிய மற்ற எல்லா விடங்களிலும், அவருடைய அபிப்பிராயத்தைத் தழுவியே எழுதியிருக்கிறார். சங்கீத ரத்னரகருடைய அபிப்பிராயத்தின்படி ஷட்ஜம மத்திம காந்தார கிராமங்கள் வைத்துக்கொண்டு போகுங் காலத்தில் 22 சுருதிகளைத்தவிர வேறு எந்த சுருதிகளும் பிறக்கமாட்டா. அரை அரை சுரங்களாய் அமைந்த ஒரு ஸ்தாயியில் ஒரு சுரம் மாற்றிக்கொண்டு மேல் போவதனால் அதில் இருக்கும் சுரங்கள்தான் பிறக்குமேயல்லாமல் நடுவில் வேறு ஒரு சுரம் பிறக்கமாட்டாது. அதுபோலவே 22 சுருதிகளுள்ள ஸ்தாயிகளில் ஷட்ஜம மத்திம காந்தார கிராமங்கள் மாற்றுவதனால் 22 சுருதியின் வரிசையில் வருமேயொழிய வேறு வரிசை உண்டாகமாட்டாது. கிராமம் என்பது ஒவ்வொரு சுரமும் இத்தனை இத்தனை சுருதியோடு வரவேண்டுமென்று அமைத்துக்கொண்டு ஆரோகண அவரோகண விதிப்படி கானம் செய்வதாம். கிராமத்திற்காக சுருதிகளை எப்படி மாற்றிக்கொண்டாலும், மொத்தத்தில் எல்லா சுருதிகளும் சேர்ந்து 22 தானிருக்கவேண்டுமென்பது பொதுவாய் அமைந்திருக்கிறது. இவற்றில் ஷட்ஜம கிராமமாவது ஷட்ஜமம் 4, ரிஷபம் 3, காந்தாரம் 2, மத்திமம் 4, பஞ்சமம் 4, தைவதம் 3, நிஷாதம் 2 என்று 22 சுருதிகள் வருவதாம். இவை முறையே ஷட்ஜமத்தின் 4, 3, 2, 1 என்ற சுருதிகளில் ஆரம்பித்து முடிவடையும். மத்திம கிராமம் ஷட்ஜமம் 4, ரிஷபம் 3, காந்தாரம் 2, மத்திமம் 4, பஞ்சமம் 3, தைவதம் 4, நிஷாதம் 2 என்னும் 22 சுருதிகளோடு வருவது. இதுவும் முன்போலவே ஷட்ஜமத்தின் 4, 3, 2, 1 என்னும் சுருதிகளின் முறையே ஆரம்பித்து ஸப்த சுர கிராமப்படி கானம் செய்யப்படும். காந்தார கிராமமாவது ஷட்ஜமம் 4, ரிஷபம் 2, காந்தாரம் 4, மத்திமம் 3, பஞ்சமம் 3, தைவதம் 3, நிஷாதம் 3 ஆக 22 சுருதிகளையுமுடைய ஸப்த சுரங்கள் முறையே ஷட்ஜமத்தின் 4, 3, 2, 1 என்னும் சுருதிகளில் ஆரம்பித்துக் கானம் செய்யப்படுவதென்றே சொல்லவேண்டும்.