குறிப்பு :- இந்த அட்டவணை முற்றிலும் தேவால் அவர்களின் புஸ்தகத்தில் 29-வது பக்கத்திலுள்ள D. அட்டவணையாகவேயிருக்கிறது. என்றாலும் தேவால் எடுத்துக்கொண்ட 10-வது சுருதிக்குப் பின் ஒரு சுருதியும், 17-வது சுருதிக்குப்பின் ஒரு சுருதியும், நூதனமாய்ச் சொல்லுவதே இதில் கவனிக்கப்பட வேண்டியது. பத்தாவது சுருதிக்கு 320 ஓசையின் அலைகளும் 11-வது சுருதிக்கு 3371/2 ஓசையின் அலைகளுமிருக்கவேண்டுமென்று தேவால் சொல்லுகிறார். அதை கிளமெண்ட்ஸ் ஒப்புக்கொண்டு 320 ஓசையின் அலைகளுக்குப்பின் 324 ஓசையின் அலைகளையுடைய ஒரு சுருதியிருக்க வேண்டுமென்று சொல்லுகிறார். அப்படியே தேவால் சொல்லிய 17-வது சுருதி 405 ஓசையின் அலைகளையுடையதென்றும் 18-வது சுருதி 4262/3 ஓசையின் அலைகளை யுடையதென்றும் ஒப்புக்கொண்டு, இதன் நடுமத்தியில் 405க்குப்பிறகு 420 ஓசையின் அலைகளை யுடைய ஒரு சுருதியிருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறார். இவ்விரண்டு சுருதிகளும் அப்துல் கரீமால் பாடப்பட்டு மிகுந்த இனிமையுடையதாகத் தம் அனுபவத்தில் கண்ட சுரங்கள் என்றும் சொல்லுகிறார். இவ்விரண்டு நுட்பமான சுரங்களையும் தம் காதினால் கேட்டு அறிந்து கொண்டதும் தான் கேட்டதை எவ்வித சந்தேகமுமின்றி மற்றவர்களுக்குச் சொல்ல நினைத்ததும் மிகவும் மேலானதே, ஒரு மேற்றிசை சங்கீத வித்துவான் இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளை ஆராய்வதும், அவைகள் இன்னது தான் என்று நிச்சயிப்பதும் இலகுவான காரியமல்ல. இவ்விரண்டு சுருதிகள் மத்திமத்திற்குமேல் ஒன்றும், தைவதத்திற்கு மேலொன்றுமாக இருப்பது போலமற்ற சுரங்களுக்கு நடுமத்தியிலும் இவற்றைப்போலவும் இவற்றிற்குச் சிறிதாகவும் அநேகம் வழங்கிவருகின்றனவென்று நம் இந்திய தேசத்துச் சங்கீத வித்துவான்களில் எவரும் கணிதப் படி ருசுப்படுத்திக் காட்டக்கூடியவர்கள் அல்ல. ஆனால் படித்துக்காட்டமாத்திரம் கூடியவர்களாயிருக்கிறார்கள். இதனாலேயே இந்திய சங்கீத வித்துவான்களுக்குள் சுருதி விஷயமாய் ஒற்றுமை யுண்டாகவில்லை. 320க்கும் 3371/2க்கும், 405க்கும் 4262/3க்கும் உள்ள இடைவெளிகளைப் போலவே, 4555/8க்கும் 480க்கும் நடுவிலும், 432க்கும் 450க்கும், 384க்கும் 400க்கும் நடுவிலும், 360க்கும் 378க்கும் நடுவிலும், 3411/3்கும் 360க்கும் நடுவிலும், 288க்கும் 300க்கும் நடுவிலும், 270க்கும் 2844/9க்கும் நடுவிலும், 240க்கும் 252க்கும் நடுவிலும் போல இன்னும் எத்தனையோ இடங்களில் நுட்பமான சுருதிகள் வரலாம். 320க்குப்பின் 324ல் ஒரு சுருதி பேசுகிறதென்றால், 328ல் ஓன்றும் 332ல் ஒன்றும் ஏன் பேசமாட்டாது ? அப்படியே 4262/3ல் ஒரு சுருதியும் 420ல் ஒரு சுருதியும் பேசுமானால், 414ல் ஒன்றும் 408ல் ஒன்றும் ஏன் பேசக்கூடாது ? இப்படி யிருப்பதனால் மிகுந்த ஒற்றுமையுடையதும் இனிமையுடையதுமான அநேக சுருதிகள் இந்திய சங்கீதத்தில் வழங்கிவருகின்றனவென்று நாம் அறியவேண்டும். அவைகளை யெல்லாம் பின்வரும் தென் இந்திய சங்கீதத்தின் சுருதிகளைப்பற்றிச் சொல்லும் அட்டவணையில் காணலாம். மேற்றிசையார் சுரங்களுக்குச் சொல்லும் ஓசையின் அலைகளை ஒத்திருக்க வேண்டுமென்று தேவால் செய்த திருத்தங்களுக்கு உபயோகித்த கணக்குகள் சரியல்லவென்று சொன்னது போலவே இதற்கும் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. 21-வது சுருதிக்குத் தேவால் 4555/8 என்று சொல்லுகிறார். ஆனால் கிளமெண்ட்ஸ் 4554/9 என்று சொல்லுகிறார். இது தாங்கள் எடுத்துக்கொண்ட பின்னங்களினால் வந்த சொற்பக்குறைவு. இது ஒன்று தவிர, மற்ற எந்த எண்களிலும் தேவாலை ஒத்திருக்கிறார்.
|