சுருதியென்று சொல்லும் 250 ஓசையின் அலைகளையுடைய சுருதியும் 12 வதாகச் சொல்லும் 345.6 ஓசையின் அலைகளையுடைய (25/36) சுருதியும், 14 வதாகச் சொல்லும் 375 ஓசையின் அலைகளையுடைய சுருதியும் (16/25) ஒத்திருக்கின்றன. இவைகள் என் ஆர்மானிக் ஸ்கேலே தவிர வேறல்ல. இவர்கள் 10 வதாகச் சொல்லும் 324 ஓசையின் அலைகளையுடைய சுருதியானது Mr. கிளமெண்டஸ், தேவால் அவர்களின் அபிப்பிராயத்தை அனுசரித்து எழுதிய 2 சுருதிகளினின்றும் தாம் நூதனமாகக் கண்டுபிடித்த 324 ஓசையின் அலைகளையுடைய 11-வது சுருதி. இதை மகா- - -ஸ்ரீ நாகோஜிராவ் அவர்கள் அட்டவணையில் 10-வது சுருதியாகக் காணலாம். 460.8 ஓசையின் அலைகளையுடைய (25/48) சுருதி 21வதாகச் சொல்லப்படுகிறது. இதுதான் இதன் முன்னுள்ள ஒருவரும் சொல்லாத சுருதி. சுருதிகளைக் காட்டிய அட்டவணையை அடுத்தபக்கத்தில் காண்க. பின்வரும் அட்டவணையில் கண்டிருக்கிற 22 சுருதிகளும் நம் சங்கீத சாஸ்திரங்களில் வழங்கிவரும் 22 சுருதிகளாயிருக்கலாமென்று நினைக்கிறேன் என்று சொல்லுகிறார்களேயொழிய சாரங்கதேவர் இப்படிச் சொல்லுகிறார், பாரிஜாதக்காரர் இப்படிச் சொல்லுகிறாரென்று சொல்லவில்லை. மேலும் ஆரோகண அவரோகணக் கிரமத்தில் ஆரோகணத்தில் சுரங்கள் எந்த இடைவெளி களையுடையவைகளாயிருக்கின்றனவோ அப்படியே அவரோகணத்திலும் ஒத்திருக்கவேண்டுமென்பது சங்கீத சாஸ்திரத்தின் இன்றியமையாத பிரமாணம். இவ்விஷயத்தில் மகா- - -ஸ்ரீ நாகோஜி ராவ் அவர்கள் முதலாவது சுருதியாகிய (24/25) ஓடு 21 வது சுருதியாகிய (25/48) என்ற பின்னத்தைப் பெருக்கினால் 1/2 வரவேண்டுமென்ற பொது விதியை அனுசரித்து 460.8 ஓசையின் அலைகளையுடைய (25/48) என்ற சுருதியைக் கண்டது மிகவும் முக்கியமானது. மகா- - -ஸ்ரீ தேவால் அவர்களுடைய ஸ்கேலிலோ முதலாவது சுருதியாகிய (20/21) ஓடு 21-வது சுருதியாகிய (128/243) ஐ பெருக்கினால் 1/2 வருகிறதில்லை. இப்படியே இன்னும் சில இடங்களில் இவ்வொற்றுமைக்கு விரோதமான சுருதிகளை மகா- - -ஸ்ரீ தேவால் ஸ்தாபித்திருக்கிறார். ஆனால் இவ்விஷயத்தில் மகா- - -ஸ்ரீ நாகோஜி ராவ் அவர்கள் ஒற்றுமை அறிந்து சுருதிகள் கண்டு எழுதியிருப்பது மிகவும் கொண்டாடத்தக்கது. என்றாலும், சுத்த மத்திமத்திற்கு மேலுள்ள 10 வது சுருதியும் பஞ்சமத்திற்குக் கீழுள்ள 12 வது சுருதியும் இந்தப் பொது விதியை அனுசரித்ததாகவில்லை. அவைகளும் சரியாயிருந்தால், ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் இருக்கவேண்டுமென்ற முறைக்கு ஒருவாறு ஒத்திருக்கும். ஆனால் இதோடு சுருதிகளெல்லாம் சம ஓசையுள்ள இடைவெளிகளுடையதாயிருக்குமானால் பூர்ணமாயிருக்கும். மத்திமத்திற்கும் பஞ்சமத்திற்கும் நடுமத்தியில் 3 சுருதிகளையும், மத்திமத்திற்கும் காந்தாரத்திற்கும் நடுமத்தியில் ஒரு சுருதியையும் நாகோஜிராவ் அவர்கள் குறித்ததானது மிகவும் சிலாக்கியமானதே. ஆனால் தேவால் அவர்களோ பஞ்சமத்திற்கும் மத்திமத்திற்கும் நடுமத்தியில் மிக நெருங்கிய இரண்டு சுருதிகளையும் மத்திமத்திற்கும் காந்தாரத்திற்கும் நடுவில் மிக நெருங்கிய இரண்டு சுருதிகளையும் ஸ்தாபித்திருக்கிறார். மூன்று சுருதிகளிருக்கவேண்டிய இடத்தில் இரண்டையும் ஒரு சுருதி இருக்கவேண்டிய இடத்தில் இரண்டு சுருதியையும் குறிப்பிடுகிறார். முன் இவருடைய அட்டவணையில் கண்டபடி ஷட்ஜம பஞ்சம முறையாய் வந்த கணக்கு 303(3/4) இலிலிருந்து 3(3/4) ஐத் தள்ளி 300ஐ வைத்துக் கொண்டார். 300க்கு மேல் தான் தள்ளிய 3(3/4) ஐயும் ஒரு சுருதியாக வைத்துக்கொள்வார்களானால் அக்கணக்கைப்பற்றி நாம் என்னசொல்ல இருக்கிறது. அதாவது பஞ்சமத்திற்கும் மத்திமத்திற்கும் அல்லது 2/3 க்கும் 3/4 க்கும் நடுமத்தியில் (26/27),(32/45).(25,36) என்னும் பின்னங்களுக்குச் சரியான சுருதிகளை மகா- - -ஸ்ரீ நாகோஜிராவ் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதற்குப் பதில் மகா- - -ஸ்ரீ தேவால் (32/45),(45/64) என்ற பின்னங்களுக்குச் சரியான சுருதிகளைச் சொல்லுகிறார். மேலும் மத்திமத்திற்கும் காந்தாரத்திற்கும் நடுவில் அல்லது (3/4),(4/5) என்ற பின்னங்களுக்கு நடுமத்தியில் (25/32) என்ற
|