பக்கம் எண் :

326
ராவ் பகதூர் நாகோஜி ராவ் அவர்களின் 22 சுருதியின் முறை.

நி(1), நி(4), , ரி(2), (2) என்கிறஸப்தகமாகிறது. இதைக்காந்தாரக்கிராமம் என்று சொல்லக் காரணம் காந்தாரத்தை -வாக வைத்துக்கொண்டு வேறு ஸ்வரங்கள் வருவதேயாம்.

இதில் (1), (4) இரண்டும் விவாதிஸ்வரங்கள். அப்படியே நி(1), நி(4) இரண்டும் விவாதிக்களாம். இவ்விரண்டுகளில், ஒவ்வொன்றை விட்டுவிட்டால்தான் ராகம் பேசும்.

நான் முன்னே சொன்னதுபோல, இக்காலத்தில் ஸங்கீத வித்வான் நமது சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி 22 சுருதிகள் இருக்கின்றனவென்பதை ஒருபோதும் பொய்யென்று சொல்லுகிறதில்லை. ஆனாலும் நிச்சயமாய் இந்தச் சுருதிகள் இன்னின்னவையென்று தெரியாமலிருப்பதாலோ, அல்லது சாதாரணமாய்ப் பாடுங்காலத்தில் அந்தச் சுருதிகள் இன்னதுதான் என்று தெரிந்துகொள்ளாமலே பாடும்போது உபயோகப்படுத்திக்கொண்டு சுகமாய்ப் பாடிவிடுவதனாலோ, ஒரு ஸ்தாயியில் 4 முழுஸ்வரங்களும், 7 அரை ஸ்வரங்களும் ஆகப் பன்னிரண்டு ஸ்வரங்கள் மட்டும் இருப்பதாக வழக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது மாத்திரமன்று ; வீணை முதலிய வாத்தியங்களில் 12 மெட்டுக்கள் மட்டும் வைத்து அமைத்திருக்கிறார்கள். விசேஷமாய் அவ்வாத்தியத்தின் கிருஹங்களில் மட்டும் கை வைப்பதனால் ஒரு ராகங்கூட வாசிக்கமுடியாது. மேலும் ஒவ்வொரு வைணிகரும் ஒரு ராகத்தின் களை நன்றாய் வரவேண்டுமென்றால் வீணையின் தந்திகளைக் கொஞ்சம் கொஞ்சம் இழுத்துவிட்டு வாசிக்கவேண்டுமென்று சொல்லுகிறார்கள். அதாவது அந்த ராகத்துக்குரிய சுருதி வரவேண்டுமென்றால் தந்தியை இழுத்தால்தான் ஏற்படுகிறதென்பது தான்.

இதையெல்லாம் பார்த்தால் அவர்கள் சொல்லுகிறதற்கும் வாத்தியத்தில் வாசிக்கிறதற்கும் விரோதமிருப்பதாகத் தெரிகிறது. ஆகவே, ராகங்களை 72 மேள கர்த்தாக்களாகப் பகுத்திருப்பது சரியன்று. சில வேளைகளில் அது நம்மைத் தவறான வழியில் கொண்டுபோய்விடும். அதில் உள்ள விஷயமென்னவென்றால் ரி(1) ரி(2) ஆகிய இரண்டையும் சுத்தரிஷபம் என்றும் சொல்லுகிறார்கள். ரி(3) ரி(4) இரண்டையும் சதுர்ச்சுருதிரிஷபமென்றும், (1) (2) இரண்டையும் ஸாதாரணகாந்தாரமென்றும், (3) (4) இரண்டையும்அந்தரகாந்தாரமென்றும், (1) (2) இரண்டையும் சுத்த மத்தியமம் என்றும், (3) (4) இரண்டையும் பிரதி மத்தியமமென்றும், (1) (2) இரண்டையும் சுத்ததைவதமென்றும், (1) (2) இரண்டையும் சதுர்ச்சுருதிதைவதமென்றும், நி(1) நி(2) இரண்டையும் கைசிகநிஷாதமென்றும், நி(3) நி(4) இரண்டையும் காகலி நிஷாதமென்றும் சொல்லுகிறார்கள்.

எப்படியிருந்தாலும், இந்த 72 மேளங்களாகப் பிரித்ததானது மிகவும் புத்திசாலித்தனமாய் ஏற்பட்டுள்ளது. அது நமக்குக் கொஞ்சம் பிரயோஜனமுள்ளது என்று மேலே காண்பிக்கப்படும்.

72 மேளகர்த்தாக்கள் எவ்விதம் ஏற்படுகின்றனவென்பதற்குச் சில ஸம்ஜ்ஞைகளை உபயோகித்துக் கொள்ளுகிறேன்.

குறிப்பு :- சுருதிகளைப்பற்றி மகா---ஸ்ரீ நாகோஜிராவ் அவர்கள் சொல்லியிருப்பதானது இதற்குமுன் சுருதியைப்ற்றிச் சொல்லியிருக்கும் இங்கிலீஷ் என் ஆர்மானிக் ஸ்கேலையும் (English Enharmonic Scale), மகா---ஸ்ரீ தேவால் அவர்களுடைய ஸ்கேலையும், 1913uத்தில் வெளிவந்த Mr. கிளமெண்ட்ஸ் அவர்களின் ஸ்கேரையும் அனுசரித்ததாக இருந்தபோதிலும் மிகுந்த தேர்ச்சியுடையதாயிருக்கிறதென்று நாம் சொல்லவேண்டியதாயிருக்கிறது. இங்கிலீஷ் என்ஆர்மானிக் நோட்ஸி (English Enharmonic notes) லிருந்து 16 சுரங்களையும் மகா---ஸ்ரீ சின்னசாமி முதலியார் அவர்கள் சொல்லிய ஸ்கேல் (scale) என்று சொல்லுகிற (25/32) அல்லது 307.20 ஓசையின் அலைகளையுடைய சுரத்தையும் சேர்த்தால் 17 சுரங்கள் மகா---ஸ்ரீ நாகோஜிராவ் அவர்கள் கணக்கில் ஒத்திருக்கின்றன. மகா---ஸ்ரீ தேவால் கணக்கில் சொல்லிய சுருதிகளில் 17 சுருதிகள் ஒத்திருக்கின்றன. Mr. கிளமெண்ட்ஸ் சங்கீத ரத்னாகரர் அபிப்பிராயத்தின்படி 25 சுருதிகளிருக்கலாமென்று சொன்ன அட்டவணையில், ராயரவர்களின் 2-வது