பக்கம் எண் :

452
சங்கீத பாரிஜாதக்காரர் நாரதர் முறைப்படி சுருதிகள் கண்டுபிடிக்கும் விதம்.

மேற்கண்ட அட்டவணையைக் கவனிக்கையில் பன்னிரு சுரங்களும் அவைகள் தந்தியின் இன்னின்ன அளவில் வருகின்றனவென்று மூன்றாவது கலத்திலும் அதற்குரிய பின்ன பாகங்கள் இன்னவையென்பது நாலாவது கலத்திலும் அவைகளுக்குரிய சென்ட்ஸ் ஆறாவது கலத்திலும் காண்போம். அதில் ஆறாவது கலத்தில்.

இரண்டாவது சுரமாகிய இரண்டாவது ரிஷபத்திற்கு ...204சென்ட்ஸும்
நாலாவது சுரத்திற்கு அதாவது இரண்டாவது காந்தாரத்திற்கு 404சென்ட்ஸும்
ஐந்தாவது முதல் மத்திமத்திற்கு498சென்ட்ஸும்
ஏழாவது பஞ்சமத்திற்கு 702 சென்ட்ஸும்
பத்தாவது முதல் நிஷாதத்திற்கு 1,018சென்ட்ஸும்
பதினொராவது இரண்டாவது நிஷாதத்திற்கு 1,106சென்ட்ஸும்
பன்னிரண்டாவது தாரஷட்ஜமத்திற்கு 1,200சென்ட்ஸும்

வருகிறதாகக் கணக்கினால் தெரிகிறது. இவைகளில் சற்றேறக்குறைய 100, 100 சென்ட்ஸ்களாக ஒவ்வொரு சுரமும் வருகிறதாகத தெரிகிறது. இது நீங்கலாக 1, 3, 6, 8, 9 முதலிய ஸ்தானங்களில் கிடைக்கும் சுரங்கள் 100க்கு மேல் கூடுதலாக வருகிறதாகக் காண்போம். இது தந்தியை பாகம் பண்ணினதினால் வந்த பேதமெயொழிய வேறில்லை. 2/3 ,3/4 என்ற பாகங்கள் மாத்திரம் இதன் முன் சொல்லப்பட்ட கணக்குகளோடு ஒத்திருந்தாலும் மற்ற சுரங்கள் மற்றவர்கள் சொல்லும் கணக்குகளைப் பார்க்கிலும் கர்நாடக சங்கீதத்திற்கு சற்று ஏறத்தாழப் பொருத்தமான சுரங்களையுடையதாயிருக்கின்றனவென்று தெிரிகிறது.

அதோடு இன்னும் சற்றுக் கவனிப்போமானால் இரண்டு முதல் நாலு வரையுமுள்ள இரண்டு சுரங்களின் இடைவெளி 204 முதல் 404 வரையும் 200 சென்ட்ஸ்கள் என்று கணக்கினால் தெரிகிறது. இரண்டாவது, முன்போலவே முதல் சுரம் 133 லிருந்து 9வது சுரத்திற்கு 933 என்று 800 சென்ட்ஸ் வருகிறது. இது 8 சுரங்களுக்குரிய சென்ட்ஸ்களாகிறதினால் ஒவ்வொரு சுரத்திற்கும் 100, 100 சென்ட்ஸ்களாகிறதாகக் காண்கிறோம். மூன்றாவது, ஆறாவது சுரத்திற்குக் கிடைக்கும் 631 சென்ட்ஸ்களுக்கும் 9வது சுரத்திற்கும் கிடைக்கும் 933 சென்ட்ஸ்களுக்கும் 302 சென்ட்ஸ்கள் இடைவெளி கிடைக்கிறதாகக் காண்போம். அவை 7வது, 8வது, 9வது என்ற 3 சுரங்களுக்குரிய சென்ட்ஸ்களாம். ஒரு சுரத்திற்கு 100, 100 சென்ட்ஸ்களா யருக்கவேண்டுமென்று மேல் சொன்ன 2, 3, 4, 5, 7, 8, 11, 12 சுருதி இடைவெளிகள் தெளிவாகக் காட்டுகின்றன.

இவர் தம் காலத்திலேயே துவாவிம்சதி சுருதிகளுக்கும் அக்காலத்துப் பாடல் முறைகளுக்கும் மிகுந்த பேதமிருந்ததைத் தெரிந்து சுருதி நிச்சயம் செய்ய நினைத்து சுரஸ்தானங்கள் நிச்சயிக்கிறார். இப்படி நிச்சயிப்பதில் தாம் சொல்லிய பன்னிரண்டு சுரங்களைத்தவிர மற்ற பத்துஸ்தானங்களும் அனுபோகத்திற்கு வராமல் சந்தேகத்தையுண்டுபண்ணக் கூடியவை யாயிருப்பதினால் அந்தப்பத்தையுந்தள்ளி இராகம் உண்டாகும் விதததைச் சொல்லுகிறேனென்று சொல்லுகிறார். ஒரு ஸ்தாயியில் இப்பன்னிரண்டு சுரங்களை அவர் எடுத்துக்கொண்டது மிகவும் இலகுவான காரியமென்று நாம் நினைக்கக் கூடாது.

துவாவிம்சதி சுருதிகளின்படி படித்தும் வழக்கப்பட்டு மிருந்தவர்கள் நடுவில் 12 சுரங்களை ஸ்தாவித்துப் பத்தைத்தள்ளியிருப்பாரானால் அக்காலத்திலிருந்தவர்கள் இவரைச் சும்மா விட்டிருக்கமாட்டார்கள். இவர் சொல்லிய பன்னிரண்டு சுரங்களும் தங்கள் அனுபோகத்தில் வருவதைக்கண்டே பதில் பேசாது ஒழிந்தார்கள். அன்றுமுதல் இன்றுவரையும் கானம்