பக்கம் எண் :

459
கருணாமிர்த சாகரம் - முதல் புஸ்தகம் - இரண்டாவது பாகம் - இருபத்திரண்டு சுருதிகள்.

மேற்காட்டிய கணக்குகளை நாம் கவனிக்கும்போது பாரிஜாதக்காரரின் சுருதி முறையில் இந்நூல் 444-வது பக்கம் 33-வது அட்டவணையில் காட்டிய பின்னங்களின் அளவைப் போலவேயிருக்கிறது. பாரிஜாதக்காரரின் அபிப்பிராயத்தை அவர் நூலின் முறைப்படி தெளிவாக அர்த்தஞ் செய்திருக்கிறார். இதற்கு முன்னுள்ளவர்கள் பாரிஜாதக்காரரின் முறையை எடுத்துக் கொண்டு கணக்குகள் சொன்னாலும் சில இடங்களில் வித்தியாசப்படுவது போல இவர் திருத்திச் சொல்லாமல் உள்ளது உள்ளபடியே சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். இவர் கொடுக்கும் அளவை 35-வது அட்டவணையால் தெரிந்து கொள்க.

மேற்காட்டிய அட்டவணையை நாம் கவனிக்கையில் 444வது பக்கம் 33வது அட்டவணையைப் பற்றிச் சொல்லிய குறிப்புகள் இங்கேயும் சொல்லக் கூடியதாயிருக்கிறது. அது தவிர தமது சொந்த அபிப்பிராயமென்று கொடுத்த 35வது அட்டவணையில் 3வது சுரம் 5/6 ம், 5வது சுரம் 3/4இ 7வது சுரம் 2/3ம், 10வது சுரம் 5/9ம் ஆக 4 சுரங்கள் தவிர மற்ற ஏழு சுரங்களும் இதற்கு முன்னுள்ளவர்கள் சுரங்களோடு ஒத்திருப்பதாக நாம் காணலாம்.

முடிவாக பாரிஜாதம் என்ற நூலின் அபிப்பிராயத்தைத் தெளிவாக அறிந்திருந்தாலும் அதன்படி நிலைக்காமல் மேல்நாட்டு சுருதி முறைகளுக்கிணங்க தம் கருத்தை மாற்றிக் கொண்டார் என்று தெளிவாகத் தெரிகிறது.