பக்கம் எண் :

460
மகா-ள-ள-ஸ்ரீ ராவ் சாகேப், ப்ரபாகர் பண்டர்க்கார் அவர்களின் சுருதியின் முறை.

பதின்மூன்றாவது.

இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்கள் இன்னவையென்று
Mr. G. G. பார்வ் அவர்களின் அபிப்பிராயம்.

The Indian Musical Journal May and June 1912 Vol. II No. 2 edited by Mr. H. P. Krishna Rao. B. A., Page 36 and 37.

"In very recent years the verses in the Samgita Parijata which give the Scale by describing the necessary division of a stretched string, have attracted considerable attention. The first writer to my knowledge. to bring them to the public notice in print was Mr. Ganapatrao Gopal Rao Barve of Ahmedabad. According to his interpretation of the verses the division of the stretched string is as follows :-

Samgita-Parijata's scale according to Mr. Barve's interpretation.

Open String=1

Sa = 1 Pa =2/3
Ko  Ri =17/18 Ko -  Dha =11/18
Su Ri =11/12 Su - Dha =7/12
Su -  Ga =5/6 Su - Ni =5/9
Ti -  Ga =19/21 Ti -  Ni =19/26
Su - Ma = 3/4 Tara -  Sa =1/2
Tiv - Ma =25/36

 This interpretation is quite correct except for the note Su. Ri. and consequently, except for Ko. Ri. also. Sapayoh pureabhage cha, sthapaniyo tha ri swarah. It must be admitted that these lines are loosely worded."

"அதாவது ஒரு நீளமுள்ள தந்தியில் சுரங்கள் எப்படி வருகிறதென்று பாரிஜாதக்காரர் சொல்லும் சூத்திரங்களைச் சமீப காலத்தில் யாவரும் நன்றாய் விசாரித்திருக்கிறார்கள். ஆமடாபாத்திலுள்ள கணபதிராவ் கோபால்ராவ் பார்வ் அவர்கள் இவ்வபிப்பிராயத்தை முதல்முதல் அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கிறார்களென்று எனக்குத் தெரிகிறது. அவருடைய அபிப்பிராயத்தின்படி ஒரு தந்தியில் சுரங்கள் எப்படி வருகிறதென்று அடியில் வருமாறு சொல்லப்படுகிறது. சங்கீத பாரிஜாதக்காரரின் சுரங்கள் இன்னின்னவையென்று பார்வ் அவர்களின் அபிப்பிராயமாவது :-

ஒரு முழு தந்தியை எடுத்துக் கொள்வோம். அதில் ஒன்றில் ச, 17/18 ல் கோமள ரிஷபம். 11/12ல் சுத்த ரிஷபம். 5/6ல் சுத்த காந்தாரம். 19/14ல் தீவிரகாந்தாரம். 3/4ல் சுத்த மத்திமம். 25/26ல் தீவிரமத்திமம். 2/3ல் பஞ்சமம் 11/18ல் கோமளதைவதம். 7/12ல் சுத்த தைவதம். 5/9ல் சுத்த நிஷாதம். 19/36ல் தீவிர நிஷாதம். 1/2ல் தார ஷட்ஜமம்.

இந்த மொழி பெயர்ப்பானது சுத்த ரிஷபத்திற்குக் கொடுத்த அளவையும் கோமள ரிஷபத்திற்குக் கொடுத்த அளவையுந் தவிர யாவும் சரியாயிருக்கிறது. சபையோ பூர்வ பாகே சா ஸ்தாபதியோ த ரி சுரா என்னும் இந்த சூத்திரம் வெவ்வேறு விதமாக அர்த்தம் பண்ணக் கூடியதாயிருக்கிறது."

மேற்காட்டிய பாரிஜாதக்காரரின் அபிப்பிராயத்திற்கு Mr. G. G. பார்வ் கொடுக்கும் கணக்கை அடியில் வரும் அட்டவணையால் தெரிந்து கொள்ளலாம்.