பக்கம் எண் :

462
மகா-ள-ள-ஸ்ரீ ராவ் சாகேப், ப்ரபாகர் பண்டர்க்கார் அவர்களின் சுருதியின் முறை.

மேற்கண்ட அட்டவணையைக் கவனிக்கையில் ஒன்றாவதான கோமள ரிஷபம், இரண்டாவதான சுத்த ரிஷபம் என்னும் இரண்டு ஸ்தானங்கள் தவிர மற்ற சுரங்கள் யாவும் சரியாயிருக்கின்றன. ஆனால் இந்த பேதமும் சபையோ பூர்வ சா ஸ்தபநியோ த ரி சுரா என்ற சூத்திரத்தின் அர்த்தபேதத்தினால் உண்டாயிற்றென்று தெரிகிறது. ஷட்ஜமத்திலிருந்து பஞ்சமம் வரையுமுள்ள தந்தியின் பாகத்தை இரண்டு பாகஞ்செய்து அதில் காந்தாரம் போடச் சொல்லுகிறார். அதாவது (1/3)x(1/2)=(1/6),1-1/6=5/6 . அந்த 5/6 காந்தாரத்திற்கும் ஷட்ஜமத்திக்கும் நடுவில் 11/12 பின்னமுள்ள சுரத்தை ரிஷபமாகச் சொல்லுகிறார். அதாவது 1-5/6=1/6; (1/6)x(1/2)=(1/12); 1-(1/12)=11/12 ஆகிறது. இது 151 சென்ட்ஸ்களுடையதாகிறது. பின்னும் அதன்கீழுமுள்ள மீதியான பாதிபாகத்தை மூன்று பங்கு செய்து அதில் கோமளரிஷபம் சொல்லுகிறார். அதாவது 1-11/12=1/12; (1/12)x(1/3)=1/36; 11/12+1/36=34/36=17/18 . இதைக் கோமள ரிஷபமாகச் சொல்லுகிறார். இது 99 சென்ட்ஸ்களுள்ள ஒரு சுரமாகிறது. இதன்கீழ் சுமார் 50 (49) சென்ட்ஸ்களுடைய 35/36 என்கிற வேறொரு சுரமும் இருக்கிறதாக நாம் காணலாம். எப்படி என்றால் 5/6 ஐ 30/36 என்று வைத்துக்கொள்வோமேயானால் 30/36 ,31/36, 32/36, 33/36, 34/36, 35/36, 36/36என்ற ஏழு ஸ்தானங்களிருக்கிறதாக வைத்துக்கொண்டால் அதில்  36/36 என்ற முதல் எண், ஷட்ஜமம் ஆகும் 30/36அல்லது 5/6 என்றது காந்தாரம். இந்த இரண்டு சுரங்களையும் நீங்கி மீதி யானவைகளில் 31/36 காந்தாரத்திற்குரிய சுருதியாகவும் வரலாம். அதில் 33/36 என்பதை காந்தாரத்தின் கீழுள்ள இடைவெளியில் பாதியாக வரும் சுருதியென்றும் 151 சென்ட்ஸ்களுடையதென்றும் சொல்லியிருக்கிறோம். இதன் கீழுள்ள இடைவெளியை மூன்று பாகஞ்செய்து அதில் 34/36 என்ற பாகத்தை 17/18 என்னும் பின்னமுள்ள சுரமாகக் கொடுக்கிறார். இது 99 சென்ட்ஸ்களாகிறது. ஆனால் இதில் 32/36 அல்லது 8/9 என்ற சுரத்தை பண்டர்க்கார் அவர்கள் குறிக்கிறார்கள். இது 204 சென்ட்ஸ்களாகிறது. இது எப்படியென்று கேட்டால் ச-ப விற்கு நடுவிலுள்ள பாகத்தை 3 பங்குசெய்து முதல்பாகம் என்று தெரிகிறது. எப்படியென்றால் 1-2/3=1/3; 1/3x1/3=1/9; 1-1/9=8/9 இதை சுத்த ரிஷபமாக வைத்துக்கொண்டு அதன் கீழுள்ள பாகத்தை மூன்று பாகஞ் செய்து முதல் பாகமாகிய 25/27ஐ கோமளரிஷபமாகச் சொல்லுகிறார். அது 133 சென்ட்ஸ்களாகிறது. இதன்முன் நாம் காட்டியிருக்கிறபடி இரண்டாவது, நாலாவது, ஐந்தாவது, ஏழாவது, பத்தாவது, பதினோராவது பன்னிரண்டாவதாகிய சுரங்கள் ஏறத்தாழ நூறு நூறுசென்ட்ஸ்களாக வருகிறதுபோலவே, கோமளரிஷபமு மிருக்கவேண்டும். அப்படியானால் பார்வ் அவர்கள் சொல்லுகிற 17/18 என்றதும் 99 சென்ட்ஸ்களுள்ளதுமான கோமளரிஷபமே சரியானமுதல் சுரமாகுமென்று தோன்றுகிறது.

மேற்கண்டபடி Dr. பண்டர்க்கார் அவர்கள் சொல்லுகிற 204 சென்ட்ஸ்களாக வரும் 8/9 என்ற ரிஷபத்தையும் Mr. பார்வ் அவர்கள் சொல்லுகிற 99 சென்ட்ஸ்களுள்ள 17/18 என்ற கோமள ரிஷபத்தையும் எடுத்துகொள்வது சுரவரிசைக்கு சற்றேறத்தாழ பொருத்தமாயிருக்கு மென்று எண்ணுகிறேன். இவ்விரண்டு விதமான அர்த்தமும் மேற்படி சூத்திரத்தில் பொருந்தியிருப்பதாகவும் காணலாம். "சபையோ பூர்வபாகே சா" ச-ப வின் நடுவிலுள்ள பாகத்தை மூன்று பாகஞ்செய்து அதில் பூர்வ பாகத்தில் அதாவது முதல் பாகத்தில் ரிஷபம் வைக்க இதன்படி 8/9 என்ற ரிஷபம் வருகிறது. இது பொதுவாக அர்த்தம் செய்யக்கூடிய விதமே. மற்றொரு விதமாக ஆதார ஷட்ஜத்திற்கும் பஞ்சமத்திற்கும் மத்தியில் காந்தாரமும் பஞ்சமத்திற்கும் தாரஷட்ஜத்திற்கும் மத்தியில் தைவதமும் வைக்கச் சொன்னவர் ஆதார ஷட்ஜமத்திற்கும் காந்தாரத்திற்கும் பஞ்சமத்திற்கும் தைவதத்திற்குமுள்ள பூர்வபாகத்தின் மத்தியில் ரிஷபமும் தைவதமும் போடச்சொன்னார் என்றும் அர்த்தமாகும், ச-க என்றதை பூர்வ பாகமும் க-ப என்றதை உத்தரபாகமாக வைத்துக்கொண்டு ச-க என்ற பூர்வ பாகத்தின் நடுமத்தியையும் எடுத்துக் கொள்ளலாம். மூன்று பாகஞ்செய்து என்று சொல்லாததினாலும் ச-ப வையும் ப-ச வையும்