இரண்டு இரண்டு பாகமாகப் பிரித்திருப்பதினாலேயும் இதையும் அப்படியே இரண்டு பாகமாகப் பிரித்துப் பூர்வபாகமாகுமென்று சொல்லியிருக்கலாம். இந்த விதமே G. G. பார்வ் அவர்களும் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதில் ச.க வின் மத்தியிலுள்ள ரிஷபத்தை அதாவது 151 11/12 சென்ட்ஸ்களுள்ள ரிஷபத்தை எடுத்துக் கொண்டால், 99 சென்ட்ஸ்களுள்ள 17/18 ரிஷபஸ்தானமும், 204 சென்ட்ஸ்களுள்ள 8/9 ரிஷபஸ்தானமும், இருக்கிறதென்று தெரிகிறது. இம்முறைப்படி சுருதி ஸ்தானங்கள் கண்டுபிடித்துக் கொள்வோமேயானால் ஒரு ஸ்தாயியில் வரவேண்டிய சுருதிகள் யாவும் கிடைக்குமென்று தோன்றுகிறது. Dr. பண்டர்க்கார் அவர்கள் G. G. பார்வ் அவர்களைப் பற்றிச் சொல்வதை நாம் கவனிக்கையில் பாரிஜாதக்காரர் முறைப்படி சுருதி கண்டுபிடிக்கும் விதத்தை இவர் அச்சடித்துப் பலருக்கும் பிரசுரப்படுத்தினாரென்று தெரிகிறது. ஆகையினால் இந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளைக் கண்டு பிடிப்பதில் முதல்வராயிருந்திருக்கிறாரென்று கொண்டாடத் தகுந்ததாயிருக்கிறது. மொத்தத்தில் சற்றேறத்தாழ கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வரும் பன்னிரு சுரங்களையே குறித்தருக்கிறார் என்று தெரிகிறது.
|