பக்கம் எண் :

464
Mr.பாக்ஸ் ஸ்ட்ராங்வ்வேஸ் அவர்களின் சுறுதிய்யின் முறை

பதினான்காவது.

இந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகள் இன்னவையென்று நிச்சயப்படுத்துவதற்கு பாக்ஸ் ஸ்ட்ராங்வேஸ் சொல்லும் அபிப்பிராயம்.

இவர் இந்திய சங்கீதத்தின் பழக்க வழக்கங்களையும் உபயோக விவரங்களையும் அறிய பலதேச சஞ்சாரஞ்செய்து மிகவும் பிரயாசப்பட்டார் என்பதை நான் அறிவேன். 1912ம் வருஷத்தில் தென்னிந்தியாவில் இவர் பிரயாணஞ் செய்து கொண்டு தஞ்சாவூருக்கு வந்த போது தாம் இந்திய சங்கீத விஷயமாக விசாரிக்க ஆவலுள்ளவராயிருக்கிறதாகவும் அவ்விஷயத்தில் தமக்கு உதவி செய்ய வேண்டுமென்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் நேரில் சந்தித்தபோது இந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளைப் பற்றியாவது இராகங்களைப் பற்றியாவது தாங்கள் அறிய வேண்டியதிருக்குமோ என்று கேட்டதற்கு அவர்கள் அவைகளைப் பற்றி அவ்வளவு கவலை எடுத்துக் கொள்ளவில்லை என்று நேரில் சொன்னார்கள். அப்படியிருந்தாலும் அவர்கள் 1914ம் வருஷத்தில் வெளிப்படுத்திய "இந்துஸ்தான் சங்கீதம்" என்ற புஸ்தகத்தில் சுருதி முறைகளைப் பற்றிக் கொடுத்திருக்கும் அட்டவணையையும் இங்கு பார்ப்பது நமக்குப் பிரயோசனமாயிருக்குமென்று நம்புகிறேன்.

Music of Hindostan by Fox Strangways P. 115, 116.

"In the following diagram column I gives the constituent elements of each note in terms of the Major Tone (a = 9/8), the minor Tone (b = 10/9), and the Semitone (c = 16/15), Columns IV and V give the representative fractions, distributed into 'quintal' (those derived from the fifth (3/2) alone) and 'retain' (those derived jointly from the fifth and the third 5/4 ). Column II gives the equivalent of these in cents and column III their differences (or, speaking in ratios, their quotients) Columns VI and VII are adjustments proposed by Mr. Clements on the strength of observations taken by Mr. Deval of Poona on a dichord: his two tertain intervals are a Fourth apart, and his two septimal, a Fifth. [Septimal intervals are derived from the septimal seventh 7/4 = 969 cents.]

Music of Hindostan by Fox Strangways P. 118."

"First the Carnatic system 'merges'; it recognizes not twenty two, but only sixteen nominal and twelve real sub-divisions of the scale,"

இவர் சொல்லுகிறதாவது :-

பின்வரும் அட்டவணையின் முதல் கலத்தில் major tone (a) 8/9 , minor tone (b ) 9/10, semi-tone (c ) 15/16. வருகிறதென்று காட்டியிருக்கிறது.

நாலாவது கலத்தில் 2/3 அல்லது பஞ்சமம் முறையில் கிடைத்த சுரங்களும் ஐந்தாவது கலத்தில் 4/5 அல்லது காந்தார முறையாயும் பஞ்சம முறையாயும் கிடைத்த சுரங்களும் அதற்கு சமமான பின்னங்களும் சொல்லப்படுகின்றன.

இரண்டாவது கலத்தில் இந்த பின்னங்களுக்குச் சரியான சென்ட்ஸ்கள் சொல்லப்படுகிறது.

மூன்றாவது கலத்தில் ஒவ்வொரு சுருதிக்குமுள்ள வித்தியாசம் இத்தனை சென்ட்ஸ்களென்று சொல்லப்படுகிறது.

ஆறாவது ஏழாவது கலத்தில் பூனாவிலுள்ள Mr. தேவால் அவர்களின் ஆராய்ச்சியிலிருந்து கிளமென்ட்ஸ் அவர்கள் தெரிந்து கொள்ளுகிற சுருதிகள் சொல்லப்படுகின்றன.

அவர்களின் ஷட்ஜம-பஞ்சம. ஷட்ஜம-மத்திம இடைவெளிகளைக் காட்டுகிறது.

கர்நாடக சங்கீத முறையே மேற்கண்டதிலிருந்து வித்தியாசமுடையதாயிருக்கிறது. அதில் 22 சுருதிகளில்லை. ஆனால் 16 பேருள்ள சுரங்களும் உண்மையில் 12 ஆகமாத்திரமுள்ள சுரங்களாக வழக்கத்திலிருக்கின்றன.