பக்கம் எண் :

467
கருணாமிர்த சாகரம் - முதல் புஸ்தகம் - இரண்டாவது பாகம் - இருபத்திரண்டு சுருதிகள்.

மேற்காட்டிய அட்டவணையைக் கவனிக்கையில் முதலாவது கலத்தில் 26 சுருதி ஸ்தானங்கள் குறிக்கப்படுகின்றன. அதன் பின் இரண்டாவது கலத்தில் 22 ஆக தாம் எடுத்துக் கொள்ளும் சுருதி லக்கங்கள் சொல்லப்படுகின்றன. மூன்றாவது கலத்தில் சுருதியின் பெயர்களும் அவைகளில் இரண்டில் ஒன்றாக வரலாம் என்ற ரி1, ம3, த4, நி4, என்னும் சுருதிகள் அடையாளமிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றன. ஐந்தாவது கலத்தில் ஒவ்வொரு சுருதி ஸ்தானத்திற்குரிய பின்னங்களும் ஆறாவதில் அவைகளுக்குரிய சென்ட்ஸ்களும் காட்டப்படுகின்றன.

இதில் முதலாவது ஸ்தானத்தில் வரும் 80/81 என்ற இடமும், 17வது வரியிலுள்ள என்ற இடமும், 25வது வரியிலுள்ள 128/243 என்ற இடமும் தவிர மற்ற சுருதி ஸ்தானங்கள் யாவும் Mr. கிளமென்ட்ஸ் அட்டவணையிலும், 128/243 Mr. தேவால் அட்டவணையிலும் வருகிறதைக் காண்போம். இதன் முன் தேவால் அவர்கள் சுருதி முறையும் Mr. கிளமென்ட்ஸ் அவர்கள் சுருதி முறையும் இந்துஸ்தானி சங்கீதத்திற்கென்று சுருதிகள் சொல்லுகிறதாகவும் கர்நாடக சங்கீதத்திற்கு சுரங்கள் 12 என்று திட்டமாகச் சொல்லுகிறதாகவும் தெரிகிறது. ஆனால் இவர்கள் சாரங்கர் முறைப்படி துவாவிம்சதி சுருதிகளின் கிரமம் மீறி ஒவ்வொரு சுரத்திற்குமுள்ள இடைவெளிகள் 84, 28, 70, 22, 90 போன்ற வெவ்வேறு அளவுகளுடையதாய் வருகின்றனவென்பதை கவனிக்கையில் சாரங்கருடைய கருத்திற்கும் துவாவிம்சதி சுருதியின் ஒழுங்குக்கும் இவர்கள் சுருதி முறைக்கும் ஒவ்வாதென்று எனக்குத் தோன்றுகிறது. இதன்பின் வரும் சாரங்கர் சுருதி முறையில் தெளிவாகக் காணலாம்.