பதினைந்தாவது. மகா- - -ஸ்ரீ சின்னசாமி முதலியார், அவர்கள் சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளைப் பற்றிச் சொல்லும் அபிப்பிராயம். மகா- - -ஸ்ரீ சின்னசாமி முதலியார் அவர்கள் தென்னிந்திய சங்கீதத்தில் பாடிக் கொண்டிருக்கும் கீர்த்தனைகளையும் ராகமாலிகைகளையும் (staff) ஸ்டாப் நொடேஷனில் அச்சடித்துப் பிரசுரஞ் செய்திருக்கிறார்கள். அதில் இவர்கள் 72 மேளக் கர்த்தாவின்படி 12 சுரங்களை ஒப்புக்கொண்டு புஸ்தகம் எழுதியிருக்கிறதாகத் தெரிகிறது. இருந்தாலும் சுருதி விஷயமாக இவர்கள் சொல்லும் அபிப்பிராயத்தையும் ஒத்துப் பார்க்க வேண்டியது அவசியம். முதலாவது மேல் நாட்டாருள் இத்தாலிய தேசத்தாரும், பிரான்ஸ் தேசத்தாரும், ஜெர்மன் தேசத்தாரும், இங்கிலாந்து தேசத்தாரும் வழங்கி வரும் பெயர்களுடனும் அளவு கணக்கோடும் இந்து தேசத்தார் வழங்கும் பெயர்களோடும் ஒரு அட்டவணை கொடுத்திருக்கிறார். அப்படிக் கொடுத்திருந்தாலும் அட்டவணையில் சொல்லப்படும் அளவிலிருந்தும் ஒவ்வொரு தேசத்தாரும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசப்படுவதாகவும் கொல்லுகிறார். ஆகையினால் இதைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லையென்று நினைக்கிறேன். இவர் சொல்லுகிறதாவது :- "ஐரோப்பாவில் சங்கீதத்தில் தேர்ந்த முக்கியமான ஜாதியார் சங்கீதத்தில் வழங்கி வரும் சுரங்களுள் விக்ருதி பேதமான சுரங்களை அறிந்து கொள்வதற்காக வெவ்வேறு பெயர்கள் கொடுத்திருக்கிறார்கள். அடியில் வரும் அட்டவணை சுரங்களின் பெயர்களையும் அவைகளின் அளவுகளையும் தெளிவாகக் காட்டுகிறது. கடைசி கலத்தில் மேற்கண்ட சுரங்களுக்கு இந்து தேசத்தில் வழங்கி வரும் பெயர்கள் சொல்லப்படுகிறது. சற்றேறத்தாழ பெயர்கள் சொல்லப்படுகிறதே தவிர அதற்குச் சரியான பெயர்கள் சொல்லக் கூடியதாயில்லை. அது போலவே கணக்குகளிலும் அதற்குச் சரியாயிருக்குமென்று நினைக்கக் கூடவில்லை என்று சொல்லுகிறார். அடியிற்கண்ட 39-வது அட்டவணையைத் தமிழ்ப் படுத்துவோமானால் சில பெயர்களும் எழுத்துகளும் வித்தியாசப்படுமானதால் அவற்றை அப்படியே இங்கே காட்ட வேண்டியது அவசியமாயிற்று. இவ்வட்டவணையில் 5-வது, 6-வது கலத்தில் கண்ட கணக்குகளை அடியில் வரும் 40-வது அட்டவணையால் சுலபமாய்த் தெரிந்து கொள்ளலாம். மேற்படி அட்டவணையை நாம் கவனிக்கையில் 20 சுருதி ஸ்தானங்கள் வருகிறதாகத் தெரிகிறது. அதிலும் மத்திய ஸ்தாயியின் அதாவது ச-வுக்குமேல் என்ற பின்னத்தையும் ஆதார ஷட்ஜத்திற்குள்ள ஒன்றுக்கு மேலுள்ள .92 என்ற கணக்கையும் நாம் கவனிக்கையில் மத்திய ஸ்தாயியின் கீழுள்ள சுரமாகவே தெரிகிறது. ஆகையினால் 20 சுரஸ்தானங்களென்று சொலல வேண்டியிருக்கிறது. ஆனால் .34.78ன் பாதியான அளவில் 19-வது ஸ்தானத்திற்குமேல் கண்ட 3, 5, 6, 7, 8, 11, 13, 14, 15, 16, 17, 19, 20 என்னும் வரிகளுக்கு நேரிலுள்ள சுரங்கள் என் ஹார்மானிக் ஸ்கேலில் கண்டவைகளாகவேயிருக்கின்றன. இது தவிர இவைகளுக்குரிய சென்ட்ஸ் கணக்குகளையும் அவைகளின் பேதங்களையும் ஓசையின் அலைகளையும் மற்றும் சுரங்களில் கண்டுகொள்க. 2/3 ஷட்ஜ-பஞ்சம, 3/4 ஷட்ஜ-மத்திம பாகங்கள் தென்னிந்திய கானத்திற்கு உதவியாயிருக்க மாட்டாதென்று இதன் முன் பார்த்திருக்கிறோம். இது தவிர துவாவிம்சதி சுருதிகளின் பெயர்களையும் விக்ருதி பேதங்களையும் பற்றி வேறோரு அட்டவணை கொடுத்திருக்கிறார். அதையும் இங்கே நாம் பார்ப்பது உபயோகமாயிருக்குமென்று எண்ணுகிறேன்.
|