பக்கம் எண் :

477
கருணாமிர்த சாகரம் - முதல் புஸ்தகம் - இரண்டாவது பாகம் - இருபத்திரண்டு சுருதிகள்.

மேற்காட்டிய அட்டவணையைக் கவனிக்கையில் மேல்நாட்டு சங்கீத விற்பன்னர்கள் சொல்லும் சில சுரங்களுக்குரிய முக்கியமான இடைவெளிகளைக் காண்போம். எல்லிஸ் (Mr. A. J. Ellis) என்பவர் மொழிபெயர்த்த Sensations of Tone என்ற புத்தகத்தில் 332வது பக்கத்திலிருந்து, பார்ட்டன் (Mr. E. H. Barton) எழுதிய Text Book on Sound என்ற புத்தகத்தில் 50 வது பக்கத்திலிருந்தும் சில சுரங்கள் பொறுக்கி எழுதப்பட்டிருக்கின்றன. அடியில் வரும லக்கங்களுக்கு எதிரிலுள்ள சுருதிகள் பின் வருமாறு :-


37-வது1/2


10-வது 8/9


36-வது 16/15x1/2=8/15 


27-வது 4/5x4/5=16/25


22-வது 3/4x15/16=45/64


31-வது 5/6x45/64=75/128

26 “ 2/3

3 “ 9/10

35 “ 10/9x1/2=5/9

23 “ 5/6x5/6=25/36

20 “ 3/4x24/25=18/25

12 “ 8/9x24/25=64/75

17 “ 3/4

6 “ 15/16

29 “ 6/5x1/2=3/5

11 “ 15/16x15/16=225/256

19 “ 3/4x80/81=20/27

16 “ 8/9x225/256=25/32

15 “ 4/5

3 “ 24/25

28 “ 5/4x1/2=5/3

30 “ 2/3x8/9=16/27

21 “ 4/5x8/9=32/45

13 “ 9/10x15/16=27/32

14 “ 5/6

1 “ 80/81

34 “ 3/4x3/4=9/16

24 “ 3/4x9/10=27/40

33 “ 4/5x32/45=128/225

5 “ 24/25x80/81=128/135

2 “ 5/4x5/4=125/128

மேற்காட்டிய 15 சுரங்களும் மிகப் பிரதானமானதென்று பொதுவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் தன்னில் தானேயும் மற்றவைகளோடும் சேர்த்துப் பெருக்கப்படும்பொழுது இவைகளில் வேறு அநேக சுரங்கள் வருகிறதாகத் தெரிகிறது. இவைகள் நம் கர்நாடக சங்கீதத்திற்குப் பொருத்தமானவையல்ல. இப்படிப் பெருக்கிக் கொண்டுபோகும் பின்னத்தினால் ஒரு ஸ்தாயி பூரணப்படாமல் ஒரு சிறு இடைவெளி கூடியாவது குறைந்தாவது வரும். இப்படிக் குறைந்து வரும் இடைவெளிக்கு "கமா" என்று பெயர். 2/3,3/4 என்ற ஒரு தந்தியின் பாகங்களினால் ஒரு ஸ்தாயியின் சுரங்களைக் கண்டுபிடித்துக் கொண்டு போகையில் ச-ப வில் (2/3) குறைந்தும் ச-ம வில் (3/4) கூடியும் வருகிறதை இதன் முன் பார்த்திருக்கிறோம். ஆகையினால் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லையென்று நினைக்கிறேன்.

மேற்சொன்ன சுரங்களில் 1, (8/9),(4/5),(3/4),(2/3),(3/5),(8/15),(1/2)  மேஜர் ஸ்கேல் என்றும், 1, (8/9),(5/6),(3/4),(2/3),(5/3),(5/3),(1/2) ஐ டிவென்டிங் மைனர் ஸ்கேல் என்றும், 1, (9/10),(4/5),(3/4),(2/3),(3/5),(9/16),(1/2) ஐ Mode of the Fourth மத்திம கிரமம் என்றும், 1, (9/10),(5/6),(3/4),(2/3),(3/5),(9/16),(1/2) ஐ Mode of the Minor Seventh கைசிக நிஷாத கிரமம் என்றும், 1, (15/16),(5/6),(3/4),(2/3),(3/5),(9/16),(1/2) ஐ Mode of the Minor Sixth கோமள தைவத கிரமம் என்றும் சொல்லுகிறார்கள்.

ஆனால் தென்னிந்திய சங்கீதத்திற்கு இது முற்றிலும் பொருந்தியதல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. என் ஹார்மானிக் ஸ்கேலுக்குரிய இந்த பின்ன பாகங்களையே அநேகர் துவாவிம்சதி சுருதி முறைக்கு எடுத்துக் கொண்டிருபதாலும் இம் முறையின்படி கர்நாடக சங்கீதம் பாட முடியாதென்று தெரிவதினாலும் இதை இங்கே காட்ட வேண்டியதாயிற்று. (3/4),(2/3) என்ற அளவுகள் ஒரு மோட்டா அளவென்றும் ஒரு ஸ்தாயியை இவ்வளவினால் மிச்சமில்லாமல் அளப்பது கூடியதல்லவென்றும் இதன் முன் பல அட்டவணைகளில் தெளிவாகக் காட்டியிருக்கிறோம். ஆனால் (2/3),(3/4) என்ற ச-ப, ச-ம முறையின்படியே சாரங்கர் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளைக் கண்டுபிடித்திருக்கிறார் என்று எல்லோரும் ஏகோபித்துச் சொல்வதினாலும் சிலர் அப்படியல்ல வேறு விதமாயிருக்கலாமென்று சந்தேகப்படுவதினாலும் சாரங்கருடைய சரியான கருத்து இன்னதென்றும் அவர் சொல்லும் முறைப்படி சுருதிகளின் அளவு இன்னதென்றும் நாம் திட்டமாய்ப் பரிசோதித்து நிச்சயம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாயிருக்கிறது. ஆகையினால் சாரங்கர் சுருதி முறைப்படி சுருதிகள் கண்டுபிடிக்கும் விதத்தைப் பார்ப்போம்.